பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்25

மூவகைத்தமிழையுந்தழைத்தோங்கிப் பரவச் செய்ததனால், 'முனிவரன் புகல் தமிழ்'
எனப்பட்டது. மும்மை - எண்ணின்மேல் நின்றது. பழுது - ஐயந் திரிபுகள்.
பலகை -இரண்டுசாணளவிற்குச் சதுரமாயிருக்கின்றதொரு சிறுபலகையாயிருந்து,
சரசுவதியமிசமாயுள்ள மெய்ப்புலவர் எத்தனைபேர் வந்தாலும் ஒவ்வொருமுழமாக
வளர்ந்து அவர்க்கு ஏற இடங்கொடுக்கும் பீடம்; இப்பலகை மற்றைப்புலவர்
கட்குந்தமக்குங்கல்வித்திறத்திலுள்ள வேறுபாட்டை வெளியிடத்தக்க
கருவியொன்றைத்தந்தருளவேண்டுமென வேண்டிய சங்கப் புலவர்களின்
பொருட்டாகத் தென்மதுரைச்சோமசுந்தரக் கடவுளாற் கொடுத்தருளப்பட்டது. (41)

42.- துச்சாதனனும் சகதேவனும் தம்மிற் பொருதல்.

குரவர்சொற்கண்மறுத்துவன்பொடுகொண்டபாருடையா
னரவுயர்த்தவனுக்கனந்தரமானதம்பியுடன்
கரவுசற்றுமிலாதசிந்தையன்வாயுவேககதிப்
புரவிவித்தகனிளவல்சென்றமர்புரியவேறொருபால்.

     (இ-ள்.) குரவர் - பொரியோர்களுடைய, சொற்கள் - நல்வார்த்தைகளை,
மறுத்து - (கேட்டு நடவாமல்) விலக்கி, வன்பொடு - பலாத்காரமாக, கொண்ட -
(பாண்டவரிடத்தினின்று) பறித்துக்கொண்ட, பார் உடையான்- பூமியை
யுடையவனாகிய,அரவு உயர்த்தவனுக்கு-, அனந்தரம் ஆன தம்பியுடன் -
பின்னே பிறந்த [அடுத்ததம்பியாகிய] துச்சாதனனுடனே,- கரவு சற்றுஉம் இலாத
சிந்தையன் - கபடம் சிறிதும்இல்லாத நல்மனம் உடையவனாகிய, வாயு வேக கதி
புரவி வித்தகன் இளவல் -காற்றின் வேகம்போல விரைந்த நடையையுடைய
குதிரைகளைப் பயிற்றுந் தொழிலில்வல்லவனாகிய நகுலனது தம்பியான
சகதேவன்,- வேறு ஒரு பால் -மற்றொருபுறத்தில், சென்று - போய், அமர் புரிய -
போர்செய்ய,- (எ-று.)- 'குரவர்' என்றது உலூக முனிவன், பீஷ்மன், துரோணன்,
கிருபன், விதுரன், கண்ணன்முதலியோரை, அநந்தரம் - வடசொல்.        (42)

43.-அசுவத்தாமனும் வீமனும் தம்மிற் போர்தொடங்குதல்.

வேரியம்புயன்வேதம்யாவையும்வில்லின்வேதமும்வல்
லாரியன்றருகடவுண்மைந்தனுமனிலன்மைந்தனுமே
தூரியம்பலகோடிகோடிதுவைப்பவெஞ்சமரே
காரியம்பிறிதில்லையென்றுகலந்துமோதினரே.

     (இ-ள்.) வேரி அம்புயன் - வாசனையையுடைய (திருமாலின் திருநாபித்)
தாமரைமலரில் தோன்றியவனான பிரமதேவனால் வெளியிடப்பட்ட, வேதம்
யாவைஉம் - (இருக்கு முதலிய) வேதங்களெல்லாவற்றையும், வில்லின் வேதம்உம் -
தநுர்வேதத்தையும், வல் - வல்ல, ஆரியன் - துரோணாசாரியனால், தரு -
வளர்க்கப்பட்ட, கடவுள் மைந்தன் உம் - பரமசிவனது குமாரனான
அசுவத்தாமனும்,- அனிலன் மைந்தன்