பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்3

துய்மன்உம் - த்ருஷ்டத்யும்நனும், கொற்றவர் ஐவர்உம் - வெற்றியையுடைய
பஞ்சபாண்டவர்களும், மற்று உள பூபர்உம் - மற்றுமுள்ள அரசர்களும்,
வைனதேயன் கொடியோன்உம் - கருடத்துவசத்தையுடையவனான கிருஷ்ணனும்,-
உற்று எழு - திரண்டு புறப்படுகின்ற, கச ரத துரக பதாதிகள் ஆன - யானைகளும்
தேர்களும் குதிரைகளும் காலாள்களுமாகிய (நான்கு அங்கங்களையுடைய),
சேனையுடனே - சேனையோடு, சென்று - (போர்களத்துக்குப்) போய்,- 'இற்றை
அருஞ் சமம் - இன்றைத்தினத்து அரிய யுத்தத்தில், வெல்லுதல் - (பகைவரைச்)
சயித்தல், எம் கடன் - எமது கடமை', என்று - என்று எண்ணிக்கொண்டு, துன்றி -
நெருங்கி, எதிர்கொண்டார் - (பகைவர் சேனையை) எதிர்த்தார்கள்; (எ -று.)

     'சொற்றவறாத துரோணன்' என்றது - சபதஞ்செய்தபடி
அருச்சுனனைக்கொண்டு துருபதனை வென்று கட்டிக்கொணரச் செய்ததனாலும்,
முதல்நாள்போரிற் க்ருஷ்ணன் முன்னிலையிற் சொன்னபடி அசுவத்தாமன்
இறந்தமைகேட்டுச் செயலொழிந்து திருஷ்டத்யும்நனாற் கொல்லப்பட
இறந்ததனாலும்.இனி - அருள் கொண்டு கூறினாலும் வெகுண்டு கூறினாலும்
அந்தந்தப்பயன்களைத் தந்தே விடுகின்ற நிறைமொழிகளை
யுடைமையாலென்றுமாம்.                                      (3)

4.- கர்ணன் தன்சேனையை மகரவியூகமாக வகுத்தல்.

கற்கியும்வண்டினமொய்க்கமதம்பொழிகரியுந்தேருங்காலாளும்
பொற்கொடியுங்குடைவர்க்கமுமாலையுமுன்னுளரென்னும்பூபாலர்
நிற்குநிலந்தொறுநிற்குநிலந்தொறுநின்றுநின்றுவினைசெய்ய
மற்கெழுதிண்புயவர்க்கன்மகன்பெருமகரயூகம்வகுத்தானே.

     (இ-ள்.) மல் கெழு - மற்போரில் வல்ல, திண் புயம் - வலிய
தோள்களையுடைய, அர்க்கன் மகன் - சூரியகுமாரனாகிய கர்ணன்,- கற்கிஉம்
குதிரைகளும், வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரிஉம் - வண்டுக்கூட்டம்
மொய்க்கும்படி மதநீரைச் சொரிகின்ற யானைகளும், தேர்உம் - இரதங்களும்,
காலாள்உம் - பதாதிகளும், பொன் கொடிஉம் - பொற்காம்பையுடைய
துவசங்களும்,குடை வர்க்கம்உம் - குடைவரிசைகளும், மாலைஉம் -
(போர்க்குஉரிய)மாலைகளும், முன் - முதலியவற்றை, உளர் - உடையவர்,
என்னும் - என்றுசொல்லப் படுகின்ற, பூபாலர் - அரசர்கள், நிற்கும்
நிலம்தொறுஉம் நிற்கும்நிலம்தொறுஉம் - (தாம்தாம்) நிற்பதற்குஉரிய
இடங்கள்தோறும், நின்றுநின்று-, வினைசெய்ய - போர்தொழிலைச் செய்யும்படி,
பெரு மகரயூகம் வகுத்தான் - பெரியமகரவியூகமாக (ச் சேனையை)
அணிவகுத்தான்; (எ -று.)

     பொன் - அதனாலாகிய காம்புக்குக் கருவியாகுபெயர். மகரத்தின்
வாயிடத்திலே கர்ணனும், கண்களிலே சகுனியும் உலூகனும், சிரசிலே
அசுவத்தாமனும், கழுத்திலே துரியோதனன் தம்பிமாரனைவரும், இடையிலே
பெருஞ்சேனைசூழ்ந்த துரியோதனனும், முன் இடக்காலிலே நாராணகோபாலரோடு
கூடிய கிருதவர்மாவும், வலக்காலிலே திரிகர்த்தரோடுந் தென்னாட்டாரோடுங்
கூடியகிருபனும்,