பக்கம் எண் :

30பாரதம்கன்ன பருவம்

     (இ-ள்.) பட்டம் அணிந்த - பட்டத்தைத் தரித்த, நுதற்கு இடைஏ -
(யானைகளின்) நெற்றியின் நடுவிலே, விழு- (மதநீரையுண்ணுதற்கு வந்து)
விழுந்துமொய்க்கின்ற, தும்பிகள் - வண்டுகள், பட்டன - அதிகப்பட்டன; பொரு
சமர் முனை - போர்செய்கிற யுத்த களத்தில், சீறிய - கோபித்து நின்ற,
தும்பிகள் -யானைகள், தொட்டியுடன் - அம்பாரியுடனே, பட்டன - இறந்து
விழுந்தன; அறன்புதல்வன்தன் - தருமபுத்திரனது, வரூதினி - சேனைகள்,
வெட்டி -(பகைவர்சேனைகளைத்) துணித்து, வென்று- சயங்கொண்டு, களித்தன -
(மகிழ்ச்சியாற்) களிப்படைந்தன; பேய் - பேய்கள், இட்டகு மண்டைய- (வயிறு
நிறைதலால்) தெவிட்டுதல் பொருந்தினவாகி, பிணம் மிக்கன என்று-, உகளித்தன -
(மகிழ்ந்து) குதித்தன;

     முதலடியில், தும்பிகள் பட்டன எனப் பிரித்து, வண்டுகள் (மாலைகளின்)
மதுவில் அகப்பட்டன வெனினுமாம்; பட்டன- ஒலித்தனஎன்பாருமுளர்.
தொட்டியென்பதைத் தோட்டி யென்பதன் குறுக்க லெனக்கொண்டால்,
அங்குசமெனப்பொருள்படும்- இட்டகுமண்டைய = குமண்டையிட்டன:
குமண்டையிடுதல் - உண்டது அதிமாகித் தெவிட்டல், குமட்டலெனவழக்குதலுங்
காண்க.                                                       (51)

52.-பழுதறவீழ்படைமன்னவர்பேருடல்பற்பலவம்பினவே
பொழிகுருதிப்புனன்மூழ்கினர்மேனிபுலாலினவம்பினவே
தழல்விழிவாரணவீரர்முடித்தலைதடிவனசக்கரமே
யழலுமிழ்வாள்கள்சுழற்றினமீளவுமாவனசக்கரமே.

     (இ-ள்.) பழுது அள - பழிப்பில்லாதபடி, வீழ் - (போரில் இறந்து கிழே)
விழுந்துகிடக்கிற, படை மன்னர் - ஆயுதங்களையுடைய அரசர்களது, பேர்
உடல் -பெரிய உடம்புகள், பல் பல அம்பின - மிகப்பல அம்புகளை
யுடையன[மிகவும்அம்புகள் தைக்கப் பெற்றன]பொழி - பெருகுகின்ற, குருதி
புனல் - இரத்தவெள்ளத்தில், மூழ்கினர் - முழுகிக்கிடக்கின்றவரது, மேனி -
உடம்புகள், புலாலினவம்பின - புலால்நாற்றமுடையன; சக்கரம் -
சக்கராயுதங்கள்,- தழல் விழி -(கோபமிகுதியால்) தீப்பொறியைச் சிந்துகிற
கண்களையுடைய, வாரணம் வீரர் -யானைமேல் வந்த வீரர்களுடைய, முடிதலை -
கிரீடந்தரித்த தலைகளை, தடிவன -அறுப்பன; வனசம் கரம் -
(அவ்வீரர்களுடைய) தாமரைமலர் போலுங் கைகள்,மீளஉம் - தலையற்ற பின்பும்,
அழல் உமிழ் வாள்கள்- நெருப்புப்பொறியைச்சிந்துகிற வாள்களை, சுழற்றின-;
ஆ - ஆச்சரியம்! (எ -று.)

     போர்க்குவந்த வீரர்க்குப் புண்பட்டு இறத்தல் சிறப்பு ஆதலால், 'பழுதற
வீழ்மன்னவர்' என்றார். 'படைமன்னவர்' என்றது இறந்தபின்பும் ஆயுதம்பிடித்த
பிடியைநழுவவிடாது அவர்களுறுதியை விளக்கிற்று. புலாலின என்ற
குறிப்புப்பெயரெச்சம்,வம்பு என்னும் பெயரைக் கொண்டது. புலாலின வம்பு -
ஊனின் சம்பந்த