பக்கம் எண் :

34பாரதம்கன்ன பருவம்

சேரவளைத்தவிலொன்றொருகோடிசிலீமகமேவினவே
வீரருயிர்ப்புடல்விட்டமங்கையர்மெய்ம்முகமேவினவே.

     (இ-ள்.) தாரைகள் - தாரையென்னும் வாத்தியங்களும், ஒற்றைகள் -
ஒற்றையென்னும் ஊதுகொம்புகளும், வங்கியம் - வேய்ங்குழல்களும், நீள்வயிர் -
நீண்டவயிரென்னும் ஊதுகொம்புகளும், சங்கம் - சங்கங்களும், முழக்கின -
மிகஒலிசெய்தன; ஓர் இமையில் - ஓரிமைப்பொழுதினுள்ளே, சில யானை-, துரங்கம
சங்கம் - குதிரைக்கூட்டங்களை, உழக்கின - கலக்கின, வளைத்த வில் ஒன்று -
வளைத்துப்பிடித்த ஒவ்வொருவில்லும், ஒரு கோடி சிலீமுகம் - ஒரு கோடி
அம்புகளை, சேர - ஒருசேர, ஏவின - பிரயோகித்தன; வீரர் - வீரர்களது,
உயிர்ப்பு- உயிர், உடல் விட்டு - உடம்பைவிட்டு, அரமங்கையர் -
தெய்வப்பெண்களது,மெய் முகம் - உடம்பினிடத்தை, மேவின - அடைந்தன;
(எ - று.)

     வங்கியம் - வம்ஸம் என்ற வடசொற் சிதைவு; மூங்கிலின் பெயர் -
சினையாகுபெயராய், அதனாலாகிய புள்ளாங்குழலைக் குறித்தது. முதலடியில்,
சங்கம்-ஸங்கம்; இரண்டாமடியில், சங்கம் - ஸங்கம். யுத்தகளத்திற் புறங்கொடாது
எதிர்நின்று போர்செய்து இறந்தவர் உடனே வீரசுவர்க்கத்தை அடைந்து அங்குள்ள
தெய்வமகளிரது உடம்பைத் தழுவி இன்பமனுபவித்தலால், 'வீரருயிர்ப்புடல் விட்டர
மங்கையர் மெய்ம்முக மேவின' என்றார்.                            (59)

60.பொருகடலொத்தபெருங்குருதிக்கடல்போதவிரைந்தனவே
விரைவுறுதேவர்விமானம்விசும்பிடைபோதவிரைந்தனவே
கருமுகின்முட்டினபட்டவர்கட்கனல்காலுமரும்புகையே
சுரிகையொடற்றுவிழுந்தனமங்கையர்துனியிலரும்புகையே.

     (இ-ள்.) பொரு - அலைமோதுகிற, கடல் - கடல்களை, ஒத்த -,
பெருங்குருதிகடல் - பெரிய இரத்தவெள்ளங்கள், போத இரைந்தன - மிகவும்
ஒலித்தன; விரைவுஉறு -(போரைக்காணுதற்கு) விரைதல் பொருந்திய, தேவர் -
தேவர்களது, விமானம் -(வாகனமாகிய) விமானங்கள், விசும்பிடை போத -
ஆகாயமார்க்கத்தில் வருதற்கு,விரைந்தன - விரைவுபட்டன; பட்டவர் - இறந்த
வீரரது, கண் - கண்களினின்றுதோன்றுகிற, கனல் - கோபத்தீ, காலும் -
வெளியில் விடுகிற, அரும் புகை -(அளவிடுதற்கு) அருமையான புகைகள், கரு
முகில் - கரிய மேகங்களை, முட்டின -அளாவிப்பரந்தன;  மங்கையர்- மாதர்களது,
துனியில் - ஊடல்மிகுதியில், அரும்பு-(அவ்வூடலைத் தீர்த்தற் பொருட்டு
அவர்களைத்தொழுது) கூப்புகிற, கை - கைகள்,சுரிகையொடு - உடைவாளுடனே,
அற்று - அறுந்து, விழுந்தன-; (எ -று.)

     இன்சொல்முதலிய வேறுஉபாயங்களினால் தணிக்கக்கூடிய நிலையைக் கடந்த
பெரும்புலவியில், ஆடவர், எவரையும் வசப்படுத்து மியல்பினதான வணக்கத்தை
மேற்கொண்டு அவ்வூடலைத் தணிவிக்க முயல்வ ரென்பதையறிக.
"மனைவியுயர்வுங்கிழ வோன்பணிவு நினையுங்காலைப் புலவியுளுரிய" என்றது
தொல்காப்பியம்.