பின் இடைக்காலிலே தன் பெருஞ் சேனையுடன் சல்லியனும், வலக்காலிலே ஆயிரந்தேரோடும் முந்நூறுயானையுடனும் சுசேனனும், வாலிலே பெருஞ்சேனைசூழவிசித்திர சித்திரசேனரும் நின்றன ரென்று வியாசபாரதத்திற் கூறப்பட்டுள்ளது. பி -ம்: ஒன்னாரெண்ணும் பூபாலர். (4). 5.-கௌரவசேனை பாண்டவசேனையோடு போர்தொடங்குதல். பானுவின்மைந்தன்முனைந்துமகீபதிமைந்தன்சேனாபதியானான் போனவருஞ்சமர்போகதனித்தனிபொருதுவேறும்போரென்றே சேனையின்மன்னவர்யாவரும்வெம்பரிமாவின்மேலுந்தேர்மேலும் யானையின்மேலுமிருந்தவரவ்வவர்தம்மோடம்மவிகலுற்றார். |
(இ-ள்.) வெம் பரிமாவின் மேல்உம் - கொடிய குதிரைகளின் மேலும், தேர்மேலும்-, யானையின்மேலும்-, இருந்தவர் - இருந்தவராகிய, சேனையின் மன்னவர் யாவர்உம் - (துரியோதன) சேனையிலுள்ள அரசர்கள் எல்லாரும்,- 'பானுவின் மைந்தன் - சூரிய புத்திரனாகிய கர்ணன், முனைந்து - மிகமுயன்று, மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான் - (இன்றைக்குத்) திருதிராஷ்டிரன்மகனான துரியோதனனது சேனைக்குத் தலைவனாயினான்: போன அருஞ் சமர் போக - (இத்தனை நாளாய்க்) கழிந்த அரிய போர் கழிக; (இனி), தனி தனி போர் பொருது -தனித்தனியே போர்செய்து, வேறும் - (பகைவரை) வெல்வோம்,' என்று - என்றுதுணிந்து,- அ அவர்தம்மோடு - அவ்வவ்வாறு குதிரை முதலியவற்றின்மேலிருந்தஎதிரிகளுடனே, இகல் உற்றார் - போர்தொடங்கினார்கள்; (எ-று.)-அம்ம -உக்கிரமாகப் போர் தொடங்கிய தன்மையை விளக்கவந்த வியப்பிடைச்சொல். வேறும்- தன்மைப்பன்மை வினைமுற்று, வெல் - பகுதி. (5) 6.-திட்டத்துய்மன் சக்கரவியூகம் வகுக்க, வீமன்யானைமேலேறுதல். நாமமிரண்டொடுபத்துடைநாயகனவிலவெஞ்சேனையினாதன் மாமருகொற்றவரூதினிவேலையைமருவாரஞ்சிவெருவெய்த நேமிவியூகமதாகவகுத்திடைநின்றுபோர்செய்நிலயத்தில் வீமன்வயம்புனைதேரினைவிட்டொருவெம்போர்வேழமேல் கொண்டான், |
(இ-ள்.) நாமம் இரண்டொடு பத்து உடை - பன்னிரண்டு திருநாமங்களையுடைய, நாயகன் - (யாவர்க்குந்) தலைவனாகிய கிருஷ்ணபகவான், நவில - சொல்ல, (அச்சொல்லின்படி), வெம் சேனையின் நாதன் - (பாண்டவரது) கொடிய சேனைக்குத் தலைவனான திட்டத்துய்மன், மா மரு - பெருமைபொருந்திய, கொற்றம் - வெற்றியையுடைய, வரூதினி-(தன்) சேனையாகிற, வேலையை - கடலை, மருவார் அஞ்சி வெருவு எய்த - பகைவர்கள் (கண்டு) அச்சமுற்றுக் கலக்கமடையும்படி, நேமி வியூகமது ஆக - சக்கரவியூகமாக, வகுத்து - அணிவகுத்து, இடை நின்று - நடுவில் நின்று, போர் செய்-யுத்தஞ் செய்கின்ற, நிலயத்தில் - இடத்தில்,-வீமன் - வீமசேனன், வயம்புனை தேரினை விட்டு - (தான்ஏறியிருந்த) வெற்றியைக்கொண்ட |