பக்கம் எண் :

40பாரதம்கன்ன பருவம்

துக்கு உயிர்போல இன்றியமையாதவ னென்று பெரியோர் புகழ்ந்து சொல்லும்படி
சிறந்தவனுமாகிய யுதிட்டிரன்,- முனைமேல் - (சேனையின்) முற்பக்கத்தில்,
நிருமித்து -(யாவரையுங்) கட்டளையிட்டுக் கொண்டு, நடந்தான்-; (எ -று.)-
பி -ம்
: உகளித்தெழு. மேன் மேல்.                               (71)

வேறு.

72.-சேனைகள் நெருங்குதலும், வாத்தியகோஷமும்

துனைவெங்க போல விகட கடகரி துரகம்ப தாதி யிரத
                                     மளவில,
வெனநின்ற சேனை முடுகி யயில்சிலை யெறிதுங்க
                      வாளொ டிகலியெழவெதிர்,
குனிசங்கு தாரை வயிர்கண் முதலிய குணில்கொண்டு சாடு
                            பறைகண் முதலிய
தனிதங்கொண் மேக மெனவு மலைபொருதமரங்கொள்
                       வேலை யெனவு மதிரவே.

இதுமுதல் ஐந்து கவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) துனை - விரைந்துசெல்லுகின்றவையும், வெம் கபோலம் -
வெவ்வியகன்னங்களையுடையவையும், விகடம் - களி மயக்கங்கொண்டவையுமான,
கட கரி -மதயானைகளும், துரகம் - குதிரைகளும், பதாதி - காலாள்களும்,
இரதம் -தேர்களும், அளவு இல - அளவில்லாதன, என - என்று சொல்லும்படி,
நின்ற-,சேனை - இரண்டுசேனைகளும், முடுகி - விரைந்து, அயில் - வேலும்,
சிலை -வில்லும், எறி துங்கம் வாளொடு -(பகைவர்களைத்) துணிக்கிற சிறந்த
வாளும் ஆகியஇவற்றுடனே, இகலி எழ - பகைமை கொண்டு முன்வரவும்,-
வெதிர் -வேய்ங்குழல்களும், குனி சங்கு - வளைந்த சங்குகளும், தாரை -
தாரைகளும்,வயிர்கள் - ஊதுகொம்புகளும், முதலிய - முதலான ஊதுகிற
வாச்சியங்களும்,குணில் கொண்டு சாரு - குறுந்தடியினால் அடிக்கப்படுகிற,
பறைகள் முதலிய -பேரிகைமுதாலான வாச்சியங்களும், தனிதம் கொள் மேகம்
என உம் -இடிமுழக்கத்தைக்கொண்ட மேகம்போலவும், அலை பொரு தமரம்
கொள் வேலைஎனஉம் - அலைகள் மோதுகிற ஆரவாரத்தைக் கொண்ட
கடல்போலவும், அதிர, -மிக ஒலிக்கவும்,- (எ-று.) - செயவெனெச்சங்கள்
அடுக்கி, 76 - ஆஞ் செய்யுளில் "முழுகின" என்ற மூற்றோடு முடியும். 'முதலிய' -
வினையாலணையும் பெயர்.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் - முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
புளிமாங்காய்ச்சீர்களும், இரண்டு ஆறாஞ் சீர்கள் தேமாச்சீர்களும், மூன்று
ஏழாஞ்சீர்கள் புளிமாச்சீர்களும், நான்கு எட்டாஞ்சீர்கள் கருவிளச் சீர்களுமாகிய
எண்சீராசிரியச் சந்த விருத்தங்கள. 'தன தந்த தான தனன தனதன தனதந்த
தானதனன தனதன' எனச் சந்தக்குழிப்புக் காண்க.                  (72)

73.- தூளிவருணனை.

கதிகொண்டசேனைநடவவெழுதுகள் ககனஞ்சுலாவியனிலகதியுற
முதிரண்டசூரகிரணமிருளெழ முகில்பஞ்சபூதவடிவுபெறவிய