பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்41

னதிவண்டலாகவமரருறைதரு நகரம்பொன்வீதிபுழுதியெழமுழு
மதியங்கமாசுகழியநிரைநிரைவளரண்டகூடமுகடுமதிரவே.

     (இ-ள்.) கதி கொண்ட - (பலவகை) நடைகளைக்கொண்ட, சேனை - இரண்டு
சேனைகளும், நடவ - முன் நடப்பதனால், எழு - (பூமியினின்று) கிளம்புகிற, துகள்
- புழுதி, ககனம் - ஆகாயமார்க்கத்தில், சுலாவி - சுழன்று, அனில் கதி உற -
காற்றின் வேகத்தைப் பொருந்த, (அதனால்), முதிர் -(ஒலி) மிகுந்த, அண்ட சூர
கிரணம் - ஆகாயத்திலுள்ள சூரியனது கிரணங்கள், இருள் எழ - இருட்சியைப்
பொருந்தவும்,- முகில் - மேகம், பஞ்ச பூதம் வடிவு பெற - ஐம்பூதங்களின்
வடிவத்தை அடையவும்,- வியத் நதி - ஆகாச கங்காநதி, வண்டல் ஆக -
சேறாகவும்,- அமரர் உறைதரு நகரம் - அமராவதி பட்டணம், பொன் வீதி -
பொன்மயமான தெருக்களில், புழுதி எழ - மண்தூளி யெழும்பப்பெறவும்,- முழு
மதி- பூர்ணசந்திரன், அங்கம் மாசு கழிய - தன்னுடலிலுள்ள களங்கம்
மிகப்பெறவும்,-நிரை நிரை - அடுக்கு அடுக்காக, வளர் அண்ட கூடம் -
(மேன்மேல்)வளர்ந்திருக்கிற உருண்டைவடிவமான அண்டத்தின், முகடுஉம் -
மேல்முகடும்,அதிர - அதிர்ச்சி யடையவும்,- (எ -று.) - பி -ம்: மதியங்கண்மாசு.
பிதிரவே.

     'முகில் பஞ்சபூதவடிவுபெற' - ஐம்பெரும்பூதங்களுள் நீர் தீ காற்று வானம்
என்னும் நான்குபூதங்களின் சம்பந்தத்தை இயல்பாகவேயுடைய மேகங்கள்
இப்புழுதிகளின் சேர்க்கையால் நிலத்தின் சம்பந்தத்தையும் அடையவென்றபடி,
சுவர்க்கலோகத்து ராஜதானியான அமராவதி பொன்னகரமாதலால், 'பொன்வீதி'
எனப்பட்டது. வியத் + நதீ= வியந்நதீ: வடமொழித்தொடர்; அது, வியனதி யெனத்
திரிந்தது; வியத் - ஆகாயம். கழிய, கழி - உரிச்சொல்.                (73)

74.- நால்வகைச்சேனைவீரரும் ஒருவரோடொருவர் எதிர்த்தல்.

குதிகொண்டவாசிவயவர்பலரொடு குதிகொண்டவாசிவயவர்
                                     குறுகினர்,
துதிவெங்கைவேழமறவர்பலரொடு துதிவெங்கைவேழ
                               மறவர்துதையின,
ரதிர்சண்டவேகவிரதர்பலரொடு மதிர்சண்டவேக
                                விரதரணுகினர்,
பொதிவெம்பதாதிவிருதர்பலரொடு பொதிவெம்ப
                        தாதி விருதர்பொதுளவே.

     (இ-ள்.) குதி கொண்ட - குதித்தலைக்கொண்ட, வாசி - குதிரைகளின்
மேலேறிய, வயவர் பலரொடு - பலவீரர்களுடனே, குதி கொண்ட வாசி வயவர்-,
குறுகினர் - நெருங்கவும்,- வெம் - வெவ்விய, துதிகை - துதிக்கையையுடைய,
வேழம் - யானைகளின்மேலேறிய, மறவர் பலரோடு - வீரர்கள் பலருடனே,
துதிவெம் கை வேழம் மறவர்-, துதையினர் - நெருங்கவும்,- அதிர் - ஒலிக்கின்ற,
சண்ட வேகம் - மிக்க வேகத்தையுடைய, இரதர் பலரொடுஉம் -
தேர்களின்மேலேறிய வீரர்கள் அநேகருடனே, அதிர் சண்ட வேக இரதர்,-
அணுகினர் - நெருங்கவும்,- பொதி (வலி) மிகுந்த, வெம் - கொடிய, பதாதி
விருதர்பலரொடு - பல காலாள் வீரர்களுடனே, பொதி வெம் பதாதி விருதர்-,
பொதுள-நெருங்கவும்,- (எ -று.)