| னதுகணையெதிர், புனைதும்பைமாலைசருகுபடவெழு பொடிமண்ட வோடிமறைகவிரைவுட, னினியெங்களாண்மையுரைசெய்தெதுபயனெதிர்வந்து நாளையணிகவிகலியே, |
(இ-ள்.) அனிலன் குமாரன் - வாயுபுத்திரனும், அரசர் அசனி பகையரசர்க்கு இடிபோன்றவனும், என் அனுசன் - எனது - தம்பியுமாகிய வீமன், சொல் வாய்மை - (முன்னே) சபதஞ்செய்த வார்த்தை, பழுது படும் -(உன்னை நான் கொன்றால்) தவறிப் போகும், என - என்று எண்ணி, உனை-, இன்று-, கோறல் ஒழிவது அலது- கொல்லுதலைச் செய்யாதொழிவ தல்லாமல், நின் உரம் - உனது வலிமை, எனது கணை எதிர் -என் அம்புகளுக்கு எதிரில், என் கொல் ஆகும் - என்ன தன்மையதாம்? புனைதும்பை மாலை - அணிந்துள்ள தும்பைப்பூமாலை, சருகு பட -சருகாக உலர்ந்துபோம் படி, எழு பொடி மண்ட - (கால்களின்விசையாற்) கிளப்பப்ப டுகிற புழுதி மிகுமாறு, விரைவுடன் - வேகத்தொடு, ஓடி மறைக - (என்கண்ணெதிரில்நில்லாமல்) ஓடிச்சென்று மறைந்து போவாயாக; இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன்-? நாளை - நாளைக்கு, இகலி - வலிமைகொண்டு, எதிர் வந்து அணிக - எதிரில் அணி வகுத்துப் போர்க்கு வருவாயாக; (எ -று.)- என்று தருமபுத்திரன் துரியோதனனைநோக்கிக் கூறினானென்க. தழிஞ்சி யென்னும் புறத்துறை போலவந்தது, இது. சொல்வாய்மை - துரியோதனாதியர் நூற்றுவரையும் யான் ஒருவனே பொருதுகொல்வனென்று திரௌபதியைத் துகிலுரிந்த காலத்துக் கூறிய பிரதிஜ்ஞை 'ஆண்மையுரைசெய் தெதுபயன்'- அது யாவர்க்கும் நிச்சயமாகத் தெரிந்தே யென்க. (82) 83.- கதையெறிந்த துரியோதனன்மேல் தருமன் வேலெறிதல். முதிர்குந்தி போசன் மகடன் மகனிவை மொழிதந்த போழ்து பெருகமுறுவல்செய், ததிருஞ்சு யோதனனுமொ ருயர்கதை யவன் மன்றன் மார்பி னுரனொடெறிதர, வெதிர்சென்று நீதி நிருப னுறுமவனெறிதண்டு கூறு படவு மெறிபவன், விதிருண்டு பாரில் விழவு மொரு தனி விறலுந்து வேல்கொ டுருவவெறியவே. |
இரண்டுகவிகள் - குளகம் (இ-ள்.) போசன் மகள் குந்திதன் முதிர் மகன் - போஜ தேசத்து அரசனாகியகுந்தியென்பவனது மகளான குந்தியின் மூத்த குமாரனாகிய யுதிட்டிரன், இவை மொழிதந்த போழ்து-, பெருக முறுவல் செய்து - மிகச்சிரித்து, அதிரும் - சிங்கநாதஞ் செய்கிற, சுயோதனன்உம் - துரியோதனனும், ஓர் உயர் கதை - ஒரு பெரிய கதாயுதத்தை, அவன் மன்றல் மார்பின் - அத்தருமனது வாசனையையுடைய மார்பிலே, உரனொடு எறிதர-, எதிர் சென்று - எதிரிற்போய், உறும் - வருகிற, அவன் எறி தண்டு - அவனெறிந்த கதாயுதம், கூறு படஉம் - பிளவுபடும்படியாகவும்,- |