எறிபவன் -(கதையை) எறிந்த அவன், விதிருண்டு - நடுக்கமடைந்து, பாரில் விழஉம்-, நீதி நிருபன் - நியாத்தையுடைய தருமபுத்திரன்,- தனி - ஒப்பில்லாத, விறல் உந்து- வலிமையோடு எறியத்தக்க, ஒரு வேல் கொடு - ஒரு வேலாயுதத்தை எடுத்து,உருவ - ஊடுருவும்படி, எறிய - வீச,- (எ -று.)- "வேந்தர் வேந்தன் வீழ்ந்தனன்"என மேலே முடியும். குந்தி - வசுதேவருடன் பிறந்தவள்; கிருஷ்ணனுக்கு அத்தை; (இவளைத் தந்தையான சூரன் தனதுநண்பனும் பிள்ளையில்லாதவனு மான குந்தியென்பவனுக்குத் தத்துக்கொடுத்ததனால், இவளுக்குக் குந்தியென்று பெயர்: பிருதை யென்பது, இவளது இயற்பெயர். பி -ம்: புனையுநிருபனும். (83) வேறு. 84.- துரியோதனன் கீழ்விழக் கர்ணன் அவனையடுத்தல். சூழ்ந்தது விதிகொல் பாகுந் துர்கமுந் தேரும் வீழ வீழ்ந்தனன் வேந்தர் வேந்தன் மெய்தவர வேந்தன் வேலாற் றாழ்ந்தது நமது கொற்ற மெனநடுத் தரிப்பொன் றின்றி யாழ்ந்தபைங் கடலோ டொப்பா னடுத்தன னங்கர் கோமான். |
(இ-ள்.) ஆழ்ந்த பைங் கடலோடு ஒப்பான் - ஆழமான பசிய கடலோடு ஒப்பவனாகிய, அங்கர் கோமான் - அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணன்,- 'வேந்தர் வேந்தன் - ராஜராஜனான துரியோதனன், பாகுஉம் துரகம்உம் தேர்உம் வீழ - சாரதியும் குதிரைகளும் தேரும் (முன்னமே) அழிய, மெய் தவா வேந்தன் வேலால் - சத்தியந் தவறாத யுதிட்டிரராசனது வேலினால், வீழ்ந்தனன் - தரையில் (பிறகு) விழுந்தான்; விதி சூழ்ந்தது கொல் - ஊழ்வினை (அவனைமுடித்தற்குச்) சுற்றிக்கொண்டதோ? நமது-, கொற்றம் - வெற்றி, தாழ்ந்தது- தாழ்வடைந்தது,' என-என்று எண்ணி, நடு தரிப்பு ஒன்று இன்றி - மனம் நிலைநிற்றல் சிறிதும் இல்லாமல்[மனங்கலங்கி],அடுத்தனன்-(துரியோதனனருகில்)வந்துசேர்ந்தான்;(எ-று.) இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவுமுள்ள எட்டுக் கவிகள் - பதினாகாம்போர்ச் சருக்கத்தின் 155 - ஆங்கவிபோன்ற அறுசீராசிரியவிருத்தங்கள். (84) 85.- அசுவத்தாமன் துரியோதனனை அடுத்தல். முற்படுதினத்திற்றந்தைமுடிந்தமெய்வருத்தத்தோடு கற்படுபுண்ணின்மீளத்தடிபடுகணக்கிற்றாக வெற்படுதடந்தோள்வேந்தன்வீழ்ந்தனனென்றுவெய்தி னெற்படுபரிதியென்னத்தோன்றினனிவுளித்தாமா. |
(இ-ள்.) இவுளித்தாமா - அசுவத்தாமன்,- முன் படு தினத்தில் - முந்தினநாளையுத்தத்தில், தந்தை முடிந்த -(தன்) பிதாவாகிய துரோணன் இறந்ததனாலுண்டான, மெய் வருத்தத்தோடு - மன வருத்தத்துடன், கல்படு புண்ணின் மீள தடிபடு கணக்கிற்று ஆக- |