பக்கம் எண் :

50பாரதம்கன்ன பருவம்

பாகையாட்கொண்டான்செங்கைப்பரிசுபெற்றவர்நெஞ்சென்ன
வோகையாற்செருக்கிமீண்டாருதிட்டிரன்சேனையுள்ளார்.

     (இ-ள்.) உதிட்டிரன் சேனை உள்ளார் - தருமனது சேனையிலுள்ள
வீரர்கள்,-நா கையா புகழான் - நாவுக்குக் கைக்காத[மிக இனிய]
கீர்த்தியையுடையவனும்,பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன் -
பெண்ணையாற்றின் நீர்வளம் மிக்கதிருமுனைப்பாடிநாட்டை யுடையவனும்,
வாகையால் பொலி திண் தோளான் -வெற்றிமாலையால்  விளங்குகின்ற வலிய
தோள்களையுடையவனும், மாகதம்கொங்கர் கோமான் - மாகதக்கொங்குநாட்டிற்குத்
தலைவனும் ஆகிய பாகை -வக்கபாகையென்னும் நகரத்தில் அரசாளுகிற,
ஆட்கொண்டான் -வரபதியாட்கொண்டா னென்னும் மன்னவனது, செம் கை -
சிவந்த இரண்டுகைகளினாலும் கொடுக்கபடுகிற, பரிசு - வெகு மானத்தை,
பெற்றவர் - பெற்றபுலவர்களது, நெஞ்சு என்ன - மனம் போல, ஓகையால்
செருக்கி -மகிழ்ச்சியினாற்களித்து, மீண்டார் - திரும்பி ( த் தம் படைவீட்டுக்கு)ச்
சென்றார்கள்;(எ -று.)

     வெறுப்பைத் தராத புகழின் இனிமைமிகுதியை நன்கு விளக்குதற்கு, 'நா
கையாப்புகழ்' என்றது. மாகதக்கொங்கு என்பது - நடு நாட்டைக்குறிக்கு மென்பர்.
பாகை = வக்கபாகை: முதற்குறைவிகாரம்.ஆட்கொண்டான் - பெயர். பி - ம்:
பெற்றவர்கள்போல                                              (90)

91.- அன்றைச் சூரியாஸ்தமனமும், மறுநாட் சூரியோதயமும்

அருக்கனுந் தருமன் மைந்த னாண்மையு நிலையுங் கண்டு
வெருக்கொளு நிருப ரென்ன மேற்றிசை வேலை மூழ்கிச்
சுருக்கமில் கங்குற் காலஞ் சென்றபின் சுதன்மே லன்பு
பெருக்கவுண் டாக மீண்டுங் குணகடல் பிறந்திட் டானே.

     (இ-ள்.) அருக்கன்உம் - சூரியனும்,- தருமன் மைந்தன் - தருமபுத்திரனது,
ஆண்மைஉம் - பராக்கிரமத்தையும், நிலைஉம் - போர் நிலைமையையும், கண்டு -
பார்த்து, வெரு கொளும் - அச்சங்கொள்ளுகிற, நிருபர் என்ன - அரசர்கள்
(ஓடியொளித்தல்) போல, மேல் திசை வேலை - மேற்குத்திக்கிலுள்ள கடலில்,
மூழ்கி- முழுகிமறைந்து [அஸ்தமித்து], - சுருக்கம் இல் - சுருங்குதலில்லாத,
கங்குல் காலம்- இராப்பொழுது, சென்றபின் - கழிந்தபின்பு,- சுதன்மேல் அன்பு
பெருக்க உண்டாக-(தன்) குமாரனான கர்ணனிடத்து அன்பு மிகுதியாக
உண்டாக,(அதனால் அவனைக்காணுதற்கு வந்தவன் போல), மீண்டும்உம் -
மறுபடியும், குண கடல் பிறந்திட்டான் -கிழக்குக்கடலில் உதித்தான்;

     முதலிரண்டடி - உவமையணி. பின்னிரண்டடியில் சூரியன் உதித்தற்குச்
சுதன்மேலன்பு பெருக்க உண்டாதலைக் காரணமாகக் கற்பித்ததனால்,
ஏதுத்தற்குறிப்பேற்றவணி.                                      (91)

பதினாறாம்போர்ச்சருக்கம் முற்றிற்று.