பக்கம் எண் :

51

பதினேழாம்போர்ச்சருக்கம்.

1.- கடவுள் வணக்கம்.

ஈரொரு பிறப்பி னொருசிறு குறளா யாவருந் தேவரும்வியப்பக்
காரொரு வடிவு கொண்டெனச் சென்று காவல்கூர் மாவலி யளித்த
நீரொரு கரத்தில் வீழுமுன் றரங்க நீனிற மகர நீ ருடுத்த
பாரொரு கணத்தி லளவிடுங் கமல பாதனார் நாதனார் நமக்கே.

     (இ-ள்.) தேவர்உம் - தேவர்களும், யாவர்உம் - மறற எல்லாரும், வியப்ப -
(கண்டு) அதிசயிக்கும்படி, கார் ஒரு வடிவு கொண்டு என - கரிய மேகம் ஒரு
புருஷவுருவத்தை எடுத்துச் சென்றார்போல, ஈர் ஒரு பிறப்பின் - இரண்டு
வகைப்பட்ட ஒப்பற்ற பிறப்புக்களையுடைய, ஒரு சிறு குறள் ஆய் - சிறியதொரு
வாமன மூர்த்தியாய், சென்று - போய், காவல் கூர் -(மூவுலகங்களையுங்)
காத்தல்தொழில் மிகுந்த, மாவலி - மகாபலிசக்கரவர்த்தி, அளித்த - தாரை
வார்த்துக்கொடுத்த, நீர் - தானஜலம், ஒரு காலத்தில் - ஒரு [வலது]
திருக்கையில், வீழும்முன் - விழுவதற்கு முன்னே[மிகவிரைவி லென்றபடி],
தரங்கம் -அலைகளையுடைய, நீல் நிறம் - நீலநிறத்தை யுடைய, மகரம் -
சுறாமீன்களையுடைய, நீர் - கடலினால், உடுத்த - சூழப்பட்ட, பார் - பூமியை,
ஒருகணத்தில் - ஒரு க்ஷணப்பொழுதிலே, அளவிடும் - அளந்தருளிய, கமல
பாதனார்ஏ- செந்தாமரைமலர்போலுந் திருவடிகளையுடைய எம்பெருமான் தான்,
நமக்குநாதனார் - நமக்குத் தலைவராவர்; (எ -று.)

     ஈரொருபிறப்பு - தேகவுற்பத்தியாகிய ஒரு பிறப்பும், உபநயந ஸம்ஸ்காரத்தா
லாகிய தொருபிறப்பும் ஆக இரண்டுபிறப்பு; இதனால், பிராமணர்க்குத்
தென்மொழியில் 'இருபிறப்பாளர்' என்றும், வடமொழியில் 'த்விஜர்' என்றும் பெயர்.
பதினேழா நாட்போரில் மாலைப்பொழுதிற் கன்னன் உயிரிழத்தற்கு முன்பு கண்ணன்
ஒரு பிராமணவுருவங்கொண்டு அவனிடஞ் சென்று அவன் செய்துள்ள
புண்ணியமனைத்தையுந் தாரைநீருடன் தானம் வாங்குவதனால், அவ் வரலாற்றைக்
கூறுகிற இச்சருக்கத்துக் கடவுள்வாழ்த்தில், அக்கருத்துத் தோன்ற, அதனோடொத்த
மாவலிபக்கல்மூவடி நிலம் கருத்துத் தோன்ற, அதனொடொத்த மாவலிபக்கல்மூவடி
நிலம் பெற்றவரலாற்றை எடுத்துக்கூறினார்; அங்கும் "அங்கையாலேற்றான்...
மூவுலகமுமுடன் கவர்ந்தோன்" (241) என்று கூறுவதுங் காண்க.

     இதுமுதற்பதினாறுகவிகள் - பெரும்பாலும் இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள்
மாச்சீர்களும், மற்றவை விளச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள்.      (92)

2.- முன்னையநாள்தோற்ற அரசர்பலரும் களங்குறுகுதல்.

அற்றைவெஞ்சமரிலமர்முனைந்தாற்றாதழிந்துபோமவனிபர்பலரு,
மற்றைநாளலகில்புவனமுமின்றேமடியுமென்றவருமயங்க,
வொற்றைவெண்சங்கும்பல்வகைப்பறையுமோதவான்கடலென
                                      வொலிப்பக்,
கற்றைவெண்கவரிகால்பொரத் தனிப்பொற்கவிகைநீழலிற்
                                    களங்கலந்தார்.