பக்கம் எண் :

52பாரதம்கன்ன பருவம்

     (இ-ள்.) அற்றை வெம் சமரில் - அன்றைநாள் [பதினாறாநாள்] கொடிய
யுத்தத்தில்,அமர் முனைந்து - போர்செய்து, ஆற்றாது - முன் நிற்கமாட்டாமல்,
அழிந்து போம்- தோற்றுப்போன, அவனிபர் பலர் உம் - அரசர்ளெல்லாரும்,
மற்றைநாள் -பதினோழாநாளில், அலகு இல் புவனம்உம் - அளவில்லாத பூமி
முழுவதும், இன்றுஏ- இன்றைத்தினமே மடியும் - அழிந்துபோம், என்று-,
அனைவர்உம் -- எல்லாரும்,மயங்க - பிரமிக்கும்படி, ஒற்றை வெண் சங்குஉம் -
ஒப்பற்ற வெள்ளியசங்கங்களும், பல்வகை பறைஉம்-, ஓதம் வான் கடல் என -
அலைகளையுடையபெரிய கடல்போல, ஒலிப்ப - ஒலிக்கவும், கற்றை வெண்
கவரி - தொகுதியாகியவெண்சாமரங்கள், கால் பொர - காற்றை வீசவும், தனி
பொன் கவிகைநீழலில்ஒப்பற்ற பொற்காம்பிட்ட குடைகளின் நிழலிலே, களம்
கலந்தார் -போர்க்களத்தை அடைந்தார்; (எ - று.)- ஒற்றை - ஒருகுழற்கருவி
யென்றாருமுளர்.                                                (93)

3. கர்ணன் துரியோதனனோடு போர்க்களஞ் சேர்தல்.

எண்ணிருதினத்திற்பட்டபல்படையுமீண்டுமீண்டெழுந்தன
                                    வென்னும்,
வண்ணமோரளவில்வாசியுந்தேருமதசயிலமும்பதாதிகளும்,
விண்ணுமண்ணகமுந்தெரிவுறாவழக்கின்வெங்கள
                                முழுவதுங்கஞல,
வண்ணலந்தடக்கைக்கெதிரிலாவண்மையாண்டகையர
                                சுடனடைந்தான்.

     (இ-ள்.) 'எண் இரு தினத்தில் - கீழ்ப்பதினாறுநாள்களில், பட்ட - (போரில்)
இறந்த, பல் படைஉம் - பலசேனைகளும், ஈண்டு - இவ்விடத்தில், மீண்டு -
திரும்பவும், எழுந்தன - பிழைத்துவந்தன,' என்னும் வண்ணம் - என்றுசொல்லும்படி,
ஓர் அளவு இல் - ஒரு அளவு இல்லாத, வாசிஉம் குதிரைகளும், தேரும்-, மத
சயிலம்உம் - மதத்தையுடைய மலைபோன்ற யானைகளும், பதாதிகளும்-, விண்உம்
மண்அகம்உம் தெரிவுறாவழக்கின் - வானுலகத்தவராலும் நிலவுலகத்தவராலும்
[யாவராலும்] (இத்தன்மையதென்று)அறியக்கூடாத தன்மையாக, வெம் களம்
முழுவதுஉம் - கொடிய போர்க்களம் முழுவதிலும், கஞல - நெருங்க,- அண்ணல்
அம் தட கைக்கு - பெருமையையுடைய அழகிய பெரிய கைகளுக்கு, எதிர் இலா -
ஒப்பில்லாத, வண்மை - தானத்தையுடைய, ஆண்தகை - ஆண்மைக் குணமுடைய
கர்ணன், அரசுடன் - துரியோதனனனோடு, அடைந்தான் -(போர்க்களத்தைச்)
சேர்ந்தான்; (எ -று.)- பி-ம்: என்ன.                                 (94)

4.- கன்னனிருந்த பொலிவுகண்டு யாவருங் களித்தல்.

சென்னியின்மகுடமணிவெயிலெறிப்பத்திருக்குழைமணி
                                வெயிலெறிப்ப,
மன்னியபொலம்பூண்மணிவெயிலெறிப்ப வனைகழன்மணி
                               வெயிலெறிப்பத்,
தன்னைமுன்பயந்தோன்றன்னினும்வடிவந் தயங்கு
                       செஞ்சுடர்வெயிலெறிப்பக்,
கன்னனன்றிருந்தவழகினையாரே கண்டுகண்களிப்புறா
                                   தொழிந்தார்.

     (இ-ள்.) சென்னியில் - தலையில்தரித்த, மகுடம் - கிரீடத்திற் பதித்த, மணி -
இரத்தினங்கள், வெயில் எறிப்ப - சூரியகாந்தி போன்ற ஒளியை வீசவும், திரு குழை
- அழகிய குண்டலத்தி