பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்53

லிழைத்த, மணி-, வெயில் எறிப்ப-, மன்னிய - (மற்றை அவயங்களிற்) பொருந்திய,
பொலம் பூண் - பொன்னாபரணங்களிலுள்ள, மணி-, வெயில் எறிப்ப-, வனை கழல்-
(காலிற்) கட்டிய வீரகண்டையிற்பொருந்திய, மணி-, வெயில் எறிப்ப--, தன்னை முன்
பயந்தோன் தன்னின்உம் - தன்னை முன்னே பெற்ற சூரியனிலும்(அதிகமாக),
வடிவம் தயங்கு செம் சுடர் - (தன்) உடம்பில் விளங்குகிற சிவந்த ஒளி, வெயில்
எறிப்ப-, கன்னன் அன்று இருந்த அழகினை-, கண்டு-, கண்களிப்பு உறாது
ஒழிந்தார்- கண்கள் களிப்படையாமற் போனவர், யாரே - எவர் தாம்?
[எவருமில்லை; எல்லோரும் அன்றைக்குக் கர்ணன் போரில் வந்திருந்த
அழகைநோக்கிக்கண்களித்தன ரென்றபடி]; (எ -று.)- சொற்பொருட்பின்
வருநிலையணி.                                                (95)

5.- யுதிஷ்டிரன் தம்பிமார்முதலியோரோடு போர்க்களத்தில்
வந்துநிற்றல்.

ஒருங்களப்பரியபதாகினிக்குழாமுமுயிர்க்குயிரானதம்பியரும்
அருங்களக்கனிகொள்வண்ணனுந்தானுமறனருளறனுடையரசன்
பெருங்களப்பரப்பினனணிபெறவணிந்துபேருலகுய்யுமாறிருண்ட
கருங்களத்தவனைக்காசினித்தேர்மேற்கண்டெனக்காணுமாநின்றான்,

     (இ-ள்.) அறன் இருள் - தருமக்கடவுள் பெற்ற, அறன் உடை அரசன் -
தருமங்களையுடைய யுதிட்டிரராஜன், ஒருங்கு அளப்ப அரிய - (தனித்தனி
கூறுகூறுக அளவிடலாமேயன்றி) ஒருசேர [முழுவதும்] அளவிடுதற்கு அரிய,
பதாகினி குழாம்உம் - சேனைக்கூட்டமும், உயிர்க்கு உயிர் ஆன தம்பியர்உம்
உயிரினுஞ் சிறந்த (வீமன்முதலிய) தம்பிமார்கள் நால்வரும், அரு கள கனி 
கொள்வண்ணன்உம் தான்உம் - அரிய களாப்பழத்தை உவமையாகக்கொண்ட
கருநிறமுடைய கண்ணனுந் தானுமாக, பெரு களம் பரப்பின் - பெரிய
போர்க்களத்தின் பரந்த இடத்திலே, அணிபெற அணிந்து - அழகாகச் சென்று
சேர்ந்து, பேர் உலகு உய்யும் ஆறு - பெரிய உலகத்தவர் பிழைக்கும்படி,
இருண்ட- (விடமுண்டு) கறுத்த, கரு களத்தவனை - நீலகண்டத்தையுடைய
உருத்திரமூர்த்தியை, காசினி தேர்மேல் - பூமியாகிய தேரின்மேல், கண்டு என -
கண்டாற் போல, காணும் ஆ - (தன்னைக்) காணும்படி நின்றான் - (ஒரு தேரின்
மேல்) நின்றான்; (எ-று.)                                        (96)

6.- 'இன்று கர்ணன் இறப்பானா?' என்று யிதிஷ்டிரன் வினாவல்.

நின்றவக்குரிசிலருச்சுனன்றேர்மேனின்றருணீலமேனியனை
மன்றலந்துளபமாலைமாதவனைவழிபடுமவர்க்குவான்றுணையைத்
தன்றடங்கண்ணோடிதயமுத்தரும்பத்தாளிணிமுடியுறவணங்கி
யின்றைவெஞ்சமரிலிரவிதன்சேய்வானெய்துமோவியம்புதியென்றான்.

     (இ-ள்.) நின்ற - இவ்வாறு நின்ற, அ குரிசில் - வீரனாகிய அத்தருமன்,-
அருச்சுனன் தேர்மேல் நின்றருள் - அருச்சுனனது தேரில் (பாகனாக) எழுந்தருளிய,
நீலம் மேனியனை - நீலநிறமுடைய திருமேனியையுடையவனும், மன்றல் -
வாசனையையுடைய, அம் -