பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்55

                                   நிலையிடுவார்,
வெண்கண்மாசுணத்தோன்வஞ்சனைக்கடலின்வீழ்ந்தழுந்தா
                                 வகையெடுத்தின்,
றங்கண்மாநிலமுந்தந்தனையெனப்பேரறத்தின்மாமகனி
                                  வையுரைப்பான்.

     (இ-ள்.) பேர் அறத்தின் மா மகன் - பெரிய தருமக்கடவுளின் சிறந்த
குமாரன்,செங் கண் மால் உரைத்த - சிவந்த திருக்கண்களையுடைய கண்ணபிரான்
சொல்லியருளிய, இன் சொல் - இனிய சொல்லாகிய, ஆர் அமுதம் - (பெறுதற்கு)
அரிய அமிர்தம், செவி பட - காதுகளிற் பட்டமாத்திரத்தில், சிந்தனை தெளிவுற்று-
மனந்தெளியப்பெற்று, (அவனைநோக்கி) 'எங்கள்மானம்உம் - எங்களது
மானத்தையும், தொல் ஆண்மைஉம் - தொன்றுதொட்டுள்ள பராக்கிரமத்தையும்
புகழ்உம் - கீர்த்தியையும், நீ அலால் - நீயேயல்லாமல், யார் - வேறுயாவர்,
நிலையிடுவார் - நிலைநிறுத்துபவர்? [எவருமில்லை]:வெம் கண் மாசுணத்தோன் -
வெவ்விய கண்களையுடைய பாம்புக்கொடியையுடைய துரியோதனனது, வஞ்சனை
கடலின் - வஞ்சனையாகிய கடலிலே, வீழந்து அழுந்தா வகை - விழுந்து
அமிழ்ந்துபோகாதபடி, எடுத்து -(எங்களைக்) காத்து, இன்று - இப்பொழுது, அம்
கண் மா நிலம்உம் - கொடுத்தாய்,' என - என்றுசொல்லி, இவை - இன்னும்
இப்படிப்பட்ட தோத்திரங்களை, உரைப்பான் - சொல்லுவானானான்; (எ - று.)-
அவை மேல் ஏழுகவிகளாற் கூறுகின்றார்.

     அமிர்தமுண்டதனால் மரணமயக்கமொழிந்து தெளிவடைதல் போல,
தருமபுத்திரனுக்கு இச்சொல்லைக்கேட்டதனால் அச்சம் நீங்கி அறிவு தெளிந்தது.
                                                            (99)

9.பொங்கழற்சிந்தைச்சுயோதனன்கங்கைப் புனல்
                  விளையாட்டிடைப்புதைத்த,
வெங்கழுமுனையில்விழாமலோரளியாய் வீமனுக்கா
                           ருயிரளித்தாய்,
பைங்கழலரசவையினில்யாமும் பார்த்திருந்தலமரப்
                                 பயந்த,
நுங்கழலனையாணாணமுந்துகிலுநோக்கினைகாக்கு
                               நாயகனே.

ஏழுகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) காக்கும் நாயகனே - காத்தல்தொழிலுக்குஉரிய தலைவனே!
பொங்குஅழல் சிந்தை -மேல்மேல்மிகுகிற கோபத்தீயையுடைய மனத்தையுடைய,
சுயோதனன்-, கங்கை புனல் விளையாட்டிடை - கங்காநதியின் நீரில்
விளையாடுமிடத்தில், புதைத்த  - நாட்டி வைத்த, வெம் கழு முனையில் - கொடிய
கழுமரத்தின் நுனியில், விழாமல் - விழுந்து இறவாமல், ஓர் அளி ஆய் - ஒப்பற்ற
வண்டின் வடிவாகி, வீமனுக்கு-, ஆர் உயிர் அளித்தாய் - அரிய உயிரைக்
காத்தருளினாய்; பைங் கழல் அரசர் - பசியவீரக்கழலையுடைய அரசர்களது,
அவையினில் - சபையில், யாம்உம் பார்த்திருந்து அலமர - கணவராகிய நாங்கள்
ஐவரும் பார்த்துக்கொண்டிருந்து (என்செய்வதென்று) மனஞ்சுழலா நிற்க, பயந்து -
அஞ்சின, நுங்கு அழல் அனையாள் - (எல்லாவற்றையும்) விழுங்குகின்ற
அக்கினியைப்போன்ற திரௌபதி