பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்61

லின்றே, கொய்வருதார்ப் புயப்பகைவர் சிரங்க ளெல்லாங் குறையுடலங்
கூத்தாடக்கொய்வே னென்றான்.

     (இ-ள்.) ஐவர் - பாண்டவர்களது, பதாகினி வெள்ளம் - சேனைத்திரள்,
அணிந்த ஆ(று) - அணிவகுக்கப்பட்டுநின்ற விதத்தை, அடு விறல் கோல் -
(பகைவர்களைக்) கொல்லுகின்ற வெற்றியையுடைய அம்புகளைச் சொரிகின்ற,
நெடுவில் - நீண்ட வில்லேந்திய, கை - கையையுடைய, அங்கர் கோமான் -
அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணன், கண்டு - பார்த்து, பை வரும் - படம்
பொருந்திய, மாசுணம் கொடியோன் தன்னை நோக்கி - பாம்புக்கொடியுடைய
துரியோதனனை நோக்கி, பரி தட தேர் - குதிரைகள் பூட்டிய பெரிய
தேரையுடைய,நரபாலர் பலர்உம் - மனிதர்களைக்காக்கிற அரசர்கள்யாவரும்,
கேட்க -கேட்கும்படி, 'கை வரு பல் படைக்குஉம் - கைதேர்ந்த பல
ஆயுதங்களுக்கும், ஒருவீரர் ஒவ்வா - ஒருவீரரும் ஒப்பாகாத, கட்டு ஆண்மை -
உறுதியானபராக்கிரமத்தையுடைய, அரசே - அரசனே! இ களத்தில் - இந்தப்
போர்க்களத்தில்,இன்றுஏ - இன்றைக்கே, கொய்வரு தார் - பறித்துத்
தொடுக்கப்பட்டமாலைகளையுடைய, புயம் - தோள்களையுடைய, பகவைர் -
பகைவர்களது, சிரங்கள்எல்லாம் - தலைகளை யெல்லாம், குறை உடலம்
கூத்தாட - கவந்தங்கள்குதிக்கும்படி, கொய்வேன் - அறுப்பேன்,' என்றான் -
என்று சொன்னான்,(எ -று.) -பி -ம்: தார்போர்ப்.

     பதினாறுகவிகள் - பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தங்கள்.  (108)

18.கார்ப்பாகசாதனன்றன்மகனுக்கெல்லாக் கலகமுஞ்செய்
                     வஞ்சனையே கற்றகள்வன்,
றேர்ப்பாகனாய்நின்றனவனுக்கொப்பார்தேவருலகினு
                       மில்லை திசைகளெல்லா,
மார்ப்பாகமோதிவருங்கவனமா நெஞ்சறிவானும்போரில்
                          விரகறி விப்பானும்,
போர்ப்பாகாய்த்தேர்கடவுசெயல்வல்லானும்புனைதாமச்
                  சல்லியனே புவியி லென்றான்.

     (இ-ள்.) கார் - மேகங்களைவாகனமாகவுடைய, பாகசாதனன் தன் -
இந்திரனது, மகனுக்கு - குமாரனான அருச்சுனனுக்கு, எல்லா கலகம்உம் செய்  -
கலகங்களை யெல்லாஞ் செய்கின்ற, வஞ்சனைஏ கற்ற - வஞ்சகங்களையே பழகிய,
கள்வன் - திருட்டுத்தனமுடைய கண்ணன், தேர் பாகன் ஆய் நின்றான் -;
அவனுக்கு ஒப்பார் தேவர் உலகின் உம் இல்லை-; திசைகள் எல்லாம் -
எல்லாத்திக்குகளிலும், ஆர்ப்பு ஆக - ஆரவாரம் உண்டாம்படி, மோதி வரும் -
எதிர்த்து வருகிற, கவனம் மா - நடைகளையுடைய குதிரைகளின், நெஞ்சு -
மனத்தை, அறிவான்உம் -(சமயத்துக்குஏற்ற) உபாயங்களைத் தெரிவிப்பவனும்,
போர்பாகு ஆய் - போருக்கு உரிய சாரதியாய், தேர் கடவு செயல்
வல்லான்உம் -தேர்செலுத்துந் தொழிலில்வல்லவனுமாகிய, புனை தாமம்
சல்லியன்ஏ - அணிந்தபோர்மலையையுடைய சல்லியன்தானே, புவியில் -
இவ்வுலகத்தில் (அவனுக்குஒப்பான்), என்றான்-; (எ  - று.) - கவனம்- கமநம்;
வடசொற்றிரிபு.                                                (109)