24.-அதுகேட்ட சல்லியனது வார்த்தை வாவுமாமணிநெடுந்தேரரசர்க்கெல்லாம் வாய்ப்பான நீயெனையும்புரப்பதன்றி, யேவுமாதொழில்புரிந்துன்குடைக்கீழ்வைகு மென்போல் வாருனைப்புரத்தலிசைவதொன்றே, தேவுமாய்மானுடமாய்மற்றுமுற்றுஞ்செப்புகின்றபலகோடி சராசரங்கள், யாவுமாய்விளையாடுமாதிமூர்த்தியாதவனுக்கியானெதிரோ வெதிரிலாதாய். |
இரண்டு கவிகள் - ஒருதொடர் (இ-ள்.) எதிர்இலாதாய் - ஒப்பில்லாதவனே! வாவும் - தாவுகின்ற, மா - குதிரைகள்பூட்டிய, மணி - மணிகள்கட்டிய, நெடு - பெரிய, தேர் - தேரையுடைய, அரசர்க்குஎல்லாம்-, வாய்ப்பு ஆன - பொருந்தின காவலாகிய, நீ-, எனைஉம் - என்னையும், புரப்பது அன்றி - காப்பதல்லாமல், ஏவும் ஆ(று) -(நீ) ஏவினபடி, தொழில் புரிந்து - குற்றேவல்செய்து, உன் குடைக்கீழ்வைகும் - உன் ஆளு கையின்கீழ்த் தங்குகிற, என்போல்வார் - என்னைப்போல்பவர், உனை புரத்தல் - உன்னைக் காத்தல், இசைவது ஒன்றுஓ - பொருந்துவதொரு காரியமோ? தேஉம் ஆய் - சகலதேவஜாதியுமாய், மானுடம் ஆய் - மனித ஜாதியுமாகி, மற்றுஉம் - இன்னும், முற்றுஉம் செப்புகின்ற - முழுவதுஞ்சொல்லுகிற, பல கோடி - அநேககோடியாகிய , சர அசரங்கள் யாஉம் ஆய் - அசையும்பொருளும் அசையாப்பொருளுமாகிய எல்லாமாகி, விளையாடும் - விளையாடுகின்ற, ஆதி மூர்த்தி - (எல்லாவற்றுக்கும்) முதன்மை வடிவமாகிய, யாதவனுக்கு - யது குலத்தில்தோன்றிய கண்ணபிரானுக்கு, யான்-, எதிர்ஓ - ஒப்பாவேனோ? (எ -று.) நீ சாரத்தியாஞ்செய்த எம்மைக் காக்கவேண்டு மென்று துரியோதனன் குறிப்பாகவுணர்த்தினதனால் அதனையுணராது, சல்லியன், பாண்டவரைக் கண்ணன்காப்பதுபோல், அரசரையும்பாதுகாக்கின்ற உன்னைப்பாதுகாப்பது என்னால்இயலுவதொருசெயலோ? என்று மறுத்துரைத்தான். (115) 25.-'கர்ணனுக்குச் சாரத்தியஞ்செய்க' என்று துரியோதனன் வினவிய சல்லியனிடம் தன்கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தல். நேர்செலுத்துந்தனிச்செங்கோலுடையாயாது நினைவுனக்கென் றவன்வினவநிருபன்றானுந், தார்செலுத்தும்பெருஞ்சேனைசூழநின்றசல்லியனைமுகநோக்கித் தனஞ்சயற்குத், தேர்செலுத்துமுகுந்தனைப்போனீயுமின்றுதேரிரவிமகன்றிண்டேர் செலுத்தினல்லாற், போர்செலுத்தியைவரையும்வென்றுவாகைபுனைதனமக்கரிதென்று போற்றினானே. |
(இ-ள்.) 'நேர் செலுத்தும் - நேராக நடக்கின்ற, தனி - ஒப்பற்ற, செங்கோல் உடையாய் - அரசாட்சிமுறையை யுடையவனே! உனக்கு- ! நினைவு - எண்ணம், யாது - என்ன?' என்று-, அவன் வினவ - அச்சல்லியன்கேட்க, நிருபன் தான்உம் -துரியோதனனும், தார் செலுத்தும் - ஒழுங்காக நடத்தப்படுகிற, பெரு சேனை-, சூழ -(தன்னைச்) சூழும்படி, நின்ற - (இடையில்) நின்ற, சல்லியனை முகம் |