நோக்கி - சல்லியன்முகத்தைப் பார்த்து, 'தனஞ்சயற்கு - அருச்சுனனுக்கு, தேர் செலுத்தும் - தேரோட்டுகின்ற, முகுந்தனைபோல் - கிருஷ்ணனைப்போல், நீயும்-, இன்று-, தேர் இரவிமகன் - தேரையுடைய சூரியனது குமாரனாகிய கர்ணனுக்கு, திண் தேர் - வலிய தேரை, செலுத்தின் அல்லால் - ஓட்டினாலல்லாமல், போர் செலுத்தி- யுத்தத்தைநடத்தி, ஐவரைஉம் - பஞ்சபாண்டவரையும், வென்று - ஜயித்து, வாகைபுனைதல் - வெற்றிமாலையைச் சூடுதல், நமக்கு-, அரிது - அரியது,'என்று-,போற்றினான் - புகழ்ந்து கூறினான்; (எ -று.)- முகுந்தன்- (தன் அடியார்களுக்கு)முத்தியின்பத்தையும் இவ்வுலகவின்பத்தையுங் கொடுப்பவன்; மு - முத்தி, கு - பூமி. (116) 26.- சல்லியன் துரியோதனன்சொல்லைக் கண்டித்துக் கூறுதல். புல்லியசொன்மதியாமலென்னைநோக்கிப் புகன்றனையாற்புனமே யும்புல்வாய்க்கென்றும், வல்லியமாப்பணித்ததொழில்புரியினன்றோமத்திரத்தான்கன்னனுக் குவலவனாவான், சொல்லியநாவென்படுமற்றொருவன்சொன்னாற்சுயோதனனாதலிற் பொறுத்தேன்சொன்னதென்று, சல்லியன்மாமனங்கொதித்துப்புருவங்கோட்டித் தடங்கண்ணு மிகச்சிவந்தான்றறுகணானே. |
(இ - ள்.) தறுகணான் - அஞ்சாமையை யுடையவனாகிய, சல்லியன்-, (அதுகேட்டு), மா மனம் கொதித்து - சிறந்தமனம் மிகக்கோபித்து, புருவம் கோட்டி -(அதனால்) புருவத்தை நெறித்து, (துரியோதனனைநோக்கி), 'மதியாமல் - (நீ சிறிதும்)ஆலோசியாமல், என்னை நோக்கி-, புல்லியசொல் - அற்பத்தன்மையையுடையசொற்களை, புகன்றனை - சொன்னாய்; என்றுஉம் - எப்பொழுதும், புனம் மேயும்- வனத்தில் மேய்கிற, புல்வாய்க்கு - புல்லைத் தின்னுகிற வாயையுடைய மானுக்கு, வல்லியம் மா - புலியாகிய விலங்கு, பணித்த தொழில் - கட்டளையிட்ட செய்கையை, புரியின் அன்றோ - செய்தாலல்லவோ, மத்திரத்தான் - மத்திரநாட்டரசனான சல்லியன், கன்னனுக்கு-, வலவன் ஆவான் - சாரதியாவான்; மற்று ஒருவன் சொன்னால் - (உன்னைத்தவிர) வேறொருத்தன் (இந்தவார்த்தையைச்) சொல்வானாகில், சொல்லிய நா என் படும் - சொன்ன அந்த நாக்கு என்ன பாடுபடும்? சுயோதனன் ஆதலின் - (சொன்னவன்) துரியோதனனாதலால், சொன்னது பொறுத்தேன்-, என்று - என்றுசொல்லி, தட கண்உம் மிக சிவந்தான் - பெரிய கண்களும் (கோபத்தால்) மிகச் சிவக்கப் பெற்றான்;(எ-று.) 'மத்திரத்தான் வலவனாவான்,' 'சுயோதனனாதலிற் பொறுத்தேன்' என்பன - தன்மைமுன்னிலைகளைப் படர்க்கையாகக் கூறிய இடவழுவமைதி. (117) 27.- இதுவும் அது. சதுர்விதத்தேர்வீரருக்குந்தடந்தேரூருஞ்சாரதிதன்தனயனுக்குத் தடந்தேரூர்தன், மதுமலர்த்தார்வலம்புரியாயிழிவன்றோநீ மதித்தவிறற் கன்னனுக்குமெனக்குகுமிப்போ, தெதிர்மலைக்குஞ்சேனைதன்னையுருகூறாக்கியிகல்புரிந்தாலென் கூற்றையிரியவென்றக், கதிரளித்தோன்கூற்றினையுமழித்திலேனேற்கடவுவன்றேரவற் கென்றுகனன்றுசொன்னான். |
|