பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்67

     (இ-ள்.) 'மது மலர் தார் வலம்புரியாய் - தேனையுடைய நஞ்சா வட்டை
மலர்களாலாகிய மாலையையுடையவனே! சதுர்விதம் தேர் வீரருக்குஉம் -(அதிரதர்
மகாரதர் சமரதர் அர்த்தரதர் என்று) நால்வகைப்பட்ட ரதாதிபதிகளுக்கும், தட
தேர்ஊரும் - பெரிய தேரைச் செலுத்துகிற, சாரதிதன் - பாகனது, தனயனுக்கு -
மகனுக்கு, தட தேர் ஊர்தல் - பெரிய தேரை ஓட்டுதல், இழிவு அன்றோ -
அவமானந்தருவதன்றோ? நீ மதித்த விறல் - நீ கௌரவித்த வெற்றியையுடைய,
கன்னனுக்கும்-, எனக்கும்-, இப்பொழுது-, எதிர் மலைக்கும் - எதிர்ற்போர்செய்கிற,
சேனை தன்னை- (பகைவர்) சேனையை, இரு கூறு ஆக்கி - இரண்டுபாகமாகப்
பிரித்துக் கொண்டு, இகழ் புரிந்தால் - போர் செய்தால், என் கூற்றை - எனக்கு
ஏற்படும் பாகத்தை, இரிய - ஒழியும்படி, வென்று - ஜயித்து, அ கதிர்
அளித்தோன்கூற்றினைஉம் - அச்சூரியகுமாரனுக்கு ஏற்படும் பாகத்தையும்,
அழித்திலேன்ஏல் -(அவனுக்குமுன்) அழிக்காமற்போவேனே யானால், அவற்கு -
அவனுக்கு, தேர்கடவுவன் -தேரை ஓட்டுவேன்,' என்று -, கனன்று-கோபித்து,
சொன்னான்-; (எ-று.)-நீ மதித்த விறல் என்றது - பிறர் அவன்வலிமையை
மதியாமை தோன்றநின்றது.                                       (118)

28,- இரண்டுகவிகள் - ஒருதொடர்: துரியோதனன்
சமாதானப்படுத்திச் சில சொல்லச் சல்லியன் கர்ணனுக்குப்
பாகனாதற்கு இசைதலைத் தெரிவிக்கும்.

செங்கோலமலரிலிருந்தனைத்துமீன்ற திசைமுகன்றானறம்
                        வளர்க்குஞ்செல்வப்பாவை,
பங்கோனுக்காதிமறைப்புரவிபூண்ட படிக்கொடித்தேர்கடவு
                             தனிப் பாகனானான்,
பொங்கோதப்பாற்கடலானிவனென்றியாரும்புகல்கின்ற
                         வசுதேவன்புதல்வன்வந்து,
வெங்கோபவிசயனுக்குச்சூதனானன் விசயனுமன்றுத்தரன்றேர்
                              விசையினூர்ந்தான்.

     (இ-ள்.) செம் - செம்மையான, கோலம் - அழகிய, மலரில் - (திருமாலின்
திருவுந்தித்தாமரைப்) பூவில், இருந்து-, அனைத்து உம்ஈன்ற -
எல்லாவற்றையும்படைத்த, திசைமுகன் - நான்குதிக்குகளிலும் முகங்களையுடைய
பிரமன், அறம் வளர்க்கும் - முப்பத்திரண்டு தருமங்களையும் வளரச்செய்கிற,
செல்வம் - செல்வத்தையுடைய, பாவை - சித்திரப்பிரதிமைபோலும் உமாதேவியை,
பங்கோனுக்கு - (தனது) இடப்பக்கத்திற் கொண்ட பரமசிவனுக்கு, ஆதி -
பழமையான, மறை - வேதங்களாகிய, புரவி - குதிரைகளை, பூண்ட - பூட்டப்
பட்டுள்ள, படி - பூமியாகிய, கொடி தேர் - துவசத்தையுடைய தேரை - கடவு -
ஓட்டுகின்ற, தனி பாகன் ஆனான் - ஒப்பற்ற சாரதியாயினான்; பொங்கு -
(அலைகள்)பொங்குகிற, ஓதம் - வெள்ளத்தையுடைய, பாற்கடலான் - திருப்பாற்
கடலிற்பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமந்நாராயணன், இவன் என்று-, யாரும்
புகல்கின்ற -யாவருஞ் சொல்லுகிற, வசுதேவன் புதல்வன் - வசுதேவனது
குமாரனாகிய கண்ணன்,வந்து-, வெம் கோபம் விசயனுக்கு - கொடிய
கோபத்தையுடைய  அருச்சுனனுக்கு,சூதன் ஆனான் - சாரதியானான்; விசையன்
உம் - அருச்சுனனும், அன்று -அவ்வுத்தரகோக்கிரகணகாலத்தில்,