உத்தரன் தேர் - உத்தரகுமாரனதுதேரை, விசையின் ஊர்ந்தான் - வேகமாய்ச் செலுத்தினான்; (எ - று.)- பாவை - உவமாகுபெயர்.அயன் அரனுக்குத்தேரூர்ந்தது, திரிபுரசங்காரகாலத்தில். அறம் வளர்க்குஞ் செல்வப்பாவை - ஆதிபருவத்து அருச்சுனன் றீர்த்த யாத்திரைச் சருக்கத்து 13 - ஆம் பாடலுரை காண்க. (119) 29. | பூந்தராதலுமுழுதுதுமதித்தவாண்மைப்போர்வேந்தேயுனைப் போலப்புகழேபூண்டு, வேந்தராயமர்க்களத்திலதிசயித்த வீரரானவர்க் கிதுதான்மேமபாடன்றோ, மாந்தராயெக்கலையும்வல்லார்க்கன்றிவாசிநெடுந்தேரூர வருமோவென்றென், றேந்தராவெழுதியபொற்கொடியோன்சொல்லியிறைஞ் சுதலுமுடன்பட்டானென்செய்வானே. |
(இ-ள்.) பூ தராதலம் முழுதுஉம் - அழகாகிய பூமியினிடத்திலுள்ளவர் எல்லாராலும், மதித்த - மதிக்கப்பட்ட, ஆண்மை - பராக்கிரமத்தையுடைய, போர் வேந்தே - போர்தொழிலில்வல்ல அரசனே! உனை போல - உன்னைப்போல, புகழ்ஏ பூண்டு - கீர்த்தியையே மேற்கொண்டு, வேந்தர் ஆய் - அரசர்களாகி, அமர்களத்தில் - போர்க்களத்திலே, அதிசயித்த - மிகச்சிறந்த, வீரர் ஆனவர்க்கு- வீரர்களுக்கு, இமு - இவ்வாறுதேரூர்வது, மேம்பாடு அன்றோ - ஒரு பெருமையன்றோ? மாந்தர் ஆய் - மனிதர்களாகி, எ கலைஉம் வல்லார்க்கு அன்றி -எல்லாக்கல்விகளிலும் வல்லவர்களுக்கே யல்லாமல், (மற்றவர்க்கு), வாசி நெடு தேர்ஊர வரும்ஓ - குதிரைகள்கட்டிய பெரியதேரை ஓட்டத்தெரியுமோ? என்று என்று-,ஏந்து அரா எழுதிய பொன்கொடியோன் - படமெடுத்த நாகத்தை எழுதின அழகியகொடியையுடைய துரியோதனன், சொல்லி -(பலவார்த்தைகள்) பேசி, இறைஞ்சுதலும்- வணங்கினவளவில், உடன்பட்டான் - (சல்லியன் கன்னனுக்குத் தேரோட்டச்)சம்மத்தித்தான்; என் செய்வான் - (இவ்வளவுபெரியவன் சொன்னாற்சம்மதியாமல்வேறு) யாது செய்வான்? (எ -று.) - மாந்தராய் எக்கலையும் வல்லார்க்கு என்பதை -எக்கல்லையும் வல்லாராகிய மாந்தர்க்கு என மாற்றிப்பொருள்கொள்க. (120) 30.- அதுதெரிந்த துரியோதனன்சேனை மகிழ்ந்தார்த்தல். மகபதிதன்மகனுக்குவசுதேவன்றன் மகன்பாகனானதுபோல் வயங்குசோதிப், பகலவன்றன்மகனுக்குநிகரிலாண்மைப் பல்விதப்போர்ச் சல்லியன் றேர்ப்பாகனனான், புகலரியதும்பையுடன்வெற்றிவாகைபுனைந்திடுமிக்கணத்தில் வலம்புரித்தார்வேந்த, னகலுததியுடையாடையவனிமுற்றுமவனதினியெனவார்த்த தரசன்சேனை. |
(இ-ள்.) 'மகபதி தன் மகனுக்கு - இந்திரகுமாரனான அருச்சுனனுக்கு, வசுதேவன்தன் மகன் - வசுதேவபுத்திரனான கிருஷ்ணன், பாகன் ஆனதுபோல்-, வயங்கு சோதி பகலவன்தன் மகனுக்கு - விளங்குகிற ஒளியையுடைய சூரியகுமாரனான கன்னனுக்கு, நிகர் இல் ஆண்மை - ஒப்பற்ற பராக்கிரமத்தையும், பல் விதம் போர் - பல வகைப்பட்ட போர்களையுமுடைய, சல்லியன்-, தேர் பாகன்ஆனான் - வலம்புரி தார் வேந்தன் - நஞ்சாவட்டை மாலையையுடைய துரியோதனன், இ கணத்தில் - இந்தக்ஷணத்திலே, புகல் அரிய தும்பையுடன் - (தான்அணிந்துள்ள) சொல்லுதற்கரிய தும்பைப்பூமாலை |