யுடனே, வெற்றி வாகை புனைந்திடும் - சயத்துக்கு அடையாளமான வாகைப்பூமாலையையுஞ் சூடுவான்; அகல் உததி - பரந்த கடலை, உடை ஆடை -உடுக்கப்படுகிற சேலையாகவுடைய, அவனி முற்று உம் - பூமிமுழுவதும், இனி-,அவனது - அத்துரியோதனனதேயாம்,' என - என்று சொல்லிக்கொண்டு , அரசன்சேனை - துரியோதனனதுசேனை, ஆர்த்தது - ஆரவாரித்தது; ( எ -று.)-" அதிரப்பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர், செருவென்றது வாகை யாம். (121) 31.- சல்லியன் கர்ணனுக்குப் பாகனாயமர்தல். பெற்றிழந்தகவசமுங்குண்டலமுமீளப் பெற்றனன்போலடலருக் கன்பெற்றபிள்ளை, மற்றையணிவிரன்முடக்கவிணையிலாத மத்திரபூபனைத் தழுவிமணித்தேரேற்றப், பற்றலர்நெஞ்சலமருமாறவனும்பாகர்படிவங்கொண்டமர்க் கமைந்தபரிகள்பூட்டி, யுற்றவடிக்கயிறுடனேயுளவுகோல்கொண்டூர்ந்தனனாலருணனுக் கேயுவமைசால்வான். |
(இ-ள்.) அடல் அருக்கன் பெற்ற பிள்ளை - வலிமையையுடைய சூரியன் பெற்ற குமாரனாகிய கர்ணன், பெற்று -(இயல்பாக உடம்புடனே) பெற்று, இழந்த - (இந்திரனுக்குத் தானஞ்செய்து) இழந்து போன, கவசம்உம் குண்டலம்உம் - கவசத்தையுங் குண்டலங்களையும், மீள பெற்றனன் போல் - திரும்பவும் கிடைக்கப்பெற்றவன்போல (மகிழ்ந்து), மற்றை அணி விரல் முடக்க இணை இலாத -(இவனை எண்ணியவிரலுக்குப்பின் இவனோடொக்க எண்ணி) வேறொரு அழகியவிரலை மடக்குவதற்கு உவமைபெறாத , மத்திரபூபனை - மத்திர நாட்டரசனானசல்லியனை, தழுவி - அணைத்துக்கொண்டு, மணி தேர் ஏற்ற - மணிகள்கட்டியதேரின்மேல் ஏறச்செய்ய, - அருணனுக்குஏ உவமை சால்வான் - (சூரியன்பாகனான)அருணனுக்கே உபமானமாகப் பொருந்துந்தன்மையையுடைய, அவன்உம் -அச்சல்லியனும், பற்றலர் நெஞ்சு அலமரும் ஆறு - பகைவர்கள் மனஞ் சுழலும்படி,பாகர் வடிவம்கொண்டு - சாரதிகளுக்குரிய வேஷத்தைத் தரித்துக் கொண்டு,அமர்க்கு அமைந்த பரிகள் பூட்டி - போர்த்தொழிலுக்குப் பொருந்திய குதிரைகளை(த் தேரிற்) பிணைத்து, உற்ற வடிக்கயிறுடனே - பொருந்தியகுதிரைவாய்க்கயிற்றையும், உளவுகோல் - குதிரை யோட்டுங் கோலையும், கொண்டு- (கைகளிற்) பிடித்துக்கொண்டு, ஊர்ந்தனன் - தேரூர்ந்தான்; (எ - று.) மற்றையணிவிரல்முடக்க இணையிலாத பூபன் என்றது - சிறந்த வீரர்களை எண்ணத்தொடங்கிச் சல்லியன் ஒருத்தனென்று முதலிற் கைவிரலொன்றை மடக்கினபின்பு இவனோடொத்தவீரர் வேறெவரும் இல்லையாதலால் மற்றொரு விரலைமடக்கி யெண்ணுவதற்கு உவமைபெறாதவன் என்றபடி. அணிவிரல் - பவித்திரவிரல்[இரண்டாவது விரல்] என்றுமாம். (122) 32.- கர்ணன் அணிவகுத்து நிற்றல். பணிநிறுத்தி யெழிலுறுபொற்பதாகை யானைப் படதொழிதம் பியரோடும் பார்க்க வன்போ, லணிநிறுத்திக் கிருபனையு மடுபோர். |
|