னனுக்கு ஒப்பான, உன்னை-, பாகன்உம் ஆக பெற்றேன் - சாரதியாகவும் அடைந்தேன்; பாக்கியம் பலித்த ஆறுஏ - (எனது) நல்வினை பயன்பட்ட விதம் அதிசயிக்கதக்கதே: (எ -று.) ஈற்றேகாரம், வியப்புப்பொருள்பட நின்றது. இயமதங்கி = ஜமதக்நி: பரசுராமன்தந்தை; வடசொற்சிதைவு. இந்தவில்லுக்கு விஜயம் என்றுபெயர்; இது, இந்திரன்பொருட்டு விசுவகர்மா நிருமித்தது. இதைக்கொண்டு முன்னே இந்திரன் பலஅசுரர்களையும், பரசுராமர் பல அரசர்களையும் வென்றார்; இதனோசையாற் பகைவர்கள் பலர் மூர்ச்சிப்பர். (126) 36. | எனக்கெதிர்விசயனல்லதில்லையவ்விசயனென்பான் றனக்கெதிரென்னையன்றித்தரணிபர்யாருமில்லை மனக்குநேரானதோழன்மகிதலமுழுதுமெய்தக் கனக்குரற்களிற்றேயின்றுகாண்டியென்னான்மையென்றான். |
(இ-ள.்) கனம் குரல் களிற்றோய் - பருத்த குரலையுடைய யானைச் சேனையையுடையவனே! எனக்கு -, எதிர் - சமானம், விசயன் அல்லது இல்லை - அருச்சுனனையல்லாமல் (வேறெவரும்) இல்லை; அ விசயன் என்பான் தனக்கு - அந்த அருச்சுனனுக்கு, எதிர்-, என்னை அன்றி-, தரணிபர் யார்உம் - பூமியை ஆளுகிற அரசரெவரும், இல்லை-; மனக்கு நேர் ஆன தோழன் - மனத்திற்கு ஒத்தநரண்பனான துரியோதனன், மகிதலம் முழுதும் எய்த - பூமிமுழுவதையும் அடையும்படி.இன்று - இன்றைக்கு, என் ஆண்மை - எனது பாராக்கிரமத்தை, காண்டி பார்ப்பாயாக, என்றான் - என்று (கர்ணன்) கூறினான்; (எ - று.) - உபமேயோபமாலங்காரம். (127) 37.- மூன்றுகவிகள் - ஒருதொடர்: சல்லியன் கர்ணனது செருக்கடங்கப்பேசுதல். என்றலுமத்திரேசனிறநகைசெய்துநீநின் வென்றியும்வலியுங்கற்றவின்மையும்விளம்பவேண்டாம் ஒன்றொடொன்றிரண்டுதேருமுருளுடனுருள்கள்கோத்துச் சென்றெதிர்முனைந்தபோதுன்சேவகந்தெரியுமாதோ. |
(இ - ள்.) என்றலும் - என்று (கன்னன்) சொன்னவளவில்-, மத்திரஈசன் - மத்திரநாட்டரசனான சல்லியன், இள நகை செய்து - புன்சிரிப்புச் செய்து, நீ-, நின் -உனது, வென்றிஉம் - ஜயத்தையும், வலிஉம்- பலத்தையும், கற்ற வின்மைஉம் -பயின்றவிற்றொழிலையும், விளம்ப வேண்டாம் - (எனக்குச்) சொல்லவேண்டாம்;இரண்டு தேரும்-, ஒன்றொடுஒன்று -, உருளுடன் உருள்கள் கோத்து -சக்கரங்களோடு சக்கரங்கள் நெருங்கப்பெற்று, எதிர்சென்று - எதிரிற் போய்,முனைந்த போது - போர் செய்து பொழுது, உன் சேவகம் தெரியும் - உனது வீரம்விளங்கும்; (எ -று.) - கன்னனை இகழ்தல் காரணமாக இளநகை பிறந்தது.இரண்டுதேர் - கர்ணார்ச்சுனர் தேர்கள். (128) |