பக்கம் எண் :

74பாரதம்கன்ன பருவம்

40.-சல்லியனைக் கர்ணன் கடிந்துகூறுதல்.

இந்திரன்மகனுக்கென்னையெதிரிலையென்றுநின்ற
தந்திரபாலர்முன்னர்சல்லியவிகழ்தல்வேண்டா
மந்திரவாசித்திரண்டேர்வல்லையேலூர்வதன்றி
வெந்திறல்விளைக்கும்வெம்போர்வினைக்குநீயார்
                          கொலென்றான்

     (இ-ள்.) சல்லிய - சல்லியனே! இந்திரன் மகனுக்கு - அருச்சுனனுக்கு, எதிர்
இலை என்று - (யான்) சாமான னல்ல னென்று, நின்ற தந்திரபாலர் முன்னர் -
(சுற்றிலும்) நின்ற சேனைத்தலைவர்களுக்கு எதிரில், என்னை-, இகழ்தல் வேண்டா-;
வல்லைஏல்- (நீ) வல்லவனானால், மந்திரம் வாசி திண் தேர் - சாலையிற்
கட்டப்படுகிற குதிரைகள்பூட்டிய வலிய தேரை, ஊர்வது அன்றி - ஓட்டுவதல்லாமல்,
வெம் திறல் விளைக்கும் - கொடிய வலிமையினாற் செய்யப்படுகிற, வெம் போர்
வினைக்கு - பயங்கரமான போர்த்தொழிலைப்பற்றிப்பேசுதற்கு , நீ யார் என்றான்-;
(எ -று.)- மந்திரம் - மந்துராஎன்னும் வடசொற்றிரிபு.                   (131)

41.- இரண்டுகவிகள் - சல்லியகர்ணர் மாறுபாடுகொண்டு தம்மில்
வாள்கொண்டெழத் துரியோதனன் விலக்குதலைத்
 தெரிவிக்கும்.

வலியுடைத்தேரோன்சொன்னவாசகம்வேலவன்கேட்டுக்
கலியுடைத்தடந்தேர்விட்டுக்காலினின்றுடைவாள்வீசி
ஒலியுடைப்புரவித்திண்டேருனக்குநானூருவேனோ
எலியுடைப்பூசல்பூஞைக்கெதிர்ப்படினென்படாதோ.

     (இ-ள்.) வலி உடை தேரோன் - வலிமையையுடைய தேரையுடைய
கர்ணன்,சொன்ன-, வாசகம் - வார்த்தையை, கேட்டு-, வலவன்- (அவன்)
பாகனானசல்லியன்,- கலி உடை - விட்டு(க்கீழ் இறங்கி), காலின் நின்று -
கால்களால்(தரையில்) நின்றுகொண்டு, உடை வாள் வீசி - உடுப்பிற்கட்டுங்
கைவாளை எடுத்துச்சுழற்றிக்கொண்டு, (அவனைநோக்கி), 'ஒலி உடை -
ஓசையையுடைய, புரவி திண்தேர் - குதிரைகளைப்பூட்டிய வலிய தேரை, (இனி),
உனக்கு நான் ஊருவேன்ஓ-?எலி உடை பூசல் - எலியினது ஆரவாரம், பூஞைக்கு
எதிர்ப்படின் - பூனைக்குஎதிரேவந்தால், என் படாதுஓ - என்னபாடு படாதோ?'
(என்றுசொன்னான்); (எ -று.)-எலியின் ஆரவாரமெல்லாம் பூனைக்குமுன்னே
இருந்துவிடந்தெரியாமல்அழிந்துவிடுவது போல, உன்செருக்குமுழுவதும்
என்வலிமைக்கு முன் அழிந்துவிடுமென்றபடி. பி - ம்: வலியுடைத்தோளான்.
வாள்வாங்கி.                                                   (132)

42.உருவுருமென்னச்சீறியுடன்றபினுதயன்காதன்
மருவுறுமைந்தன்றானும்வாளொடுமண்ணிற்றாவி
யிருவருமிரண்டுகாயமிகலுமுனுரககேது
வெருவருஞ்சிந்தையோடுவெய்திற்போய்விலக்கினானே.