ஒலிக்கின்ற கடலுடனே, சூழ்ந்து - (துணையாகச்) சுற்றிக்கொண்டு கன்னனை-, காத்துநின்றார் - காவல் செய்து நின்றார்கள்; (எ -று.)- சாலுவன் திகத்தராசன் - திரிகர்த்தராஜனாகிய சாலுவ னென்பாரு முளர். பி -ம்: தேர்வீரர். (135) 45.- அப்போது துரியோதனன் போர்வென்றோமென்று மகிழ்ந்த கூறலுறுதல். நின்றவக்கன்னன்றன்னைநெஞ்சுறமகிழ்ந்துநோக்கி வென்றனம்பூசலின்றேவிசயனுந்தாதைதன்பாற் சென்றிடுமென்றுதேறிச்செப்பினன்சிற்சின்மாற்ற மன்றலஞ்சுரும்புமாறாதவலம்புரிமாலையானே. |
(இ-ள்.) மன்றல் - வாசனையையுடைய, அம் - அழகிய, சுரும்பு - வண்டுகள்,மாறா - நீங்காமல்மொய்க்கின்ற, வலம்புரிமாலையான் - நஞ்சாவட்டைமாலையையுடைய துரியோதனன், நின்ற- (எதிரில்) நின்ற, அ கன்னன்தன்னைநோக்கி.- நெஞ்சுஉற மகிழ்ந்து - மனம் மிகக்களித்து, 'இன்றே - இன்றைக்கே, பூசல் வென்றனம் - போரிற் (பகைவரைச்) செயித்தோம்; விசயன்உம் -அருச்சுனனும், தாதை தனபால் -(தன்) தகப்பனாகிய இந்திரனிடத்து, சென்றிடும் -போய் விடுவான் [இறப்பான்],' என்று தேறி - என்று நிச்சயித்து, சில் சில் மாற்றம் -சிலசிலவார்த்தைகளை, செப்பினன் - சொல்வானானான்; (எ - று.)- அது மேல்ஏழுகவிகளாற் கூறுகின்றார். (136) 46.- ஏழுகவிகள் - சல்லியகர்ணர்கட்குத் துரியோதனன் முகமன் கூறியதைத் தெரிவிக்கும். சதமகன்மகன்றேர்ப்பாகன்றன்வயிற்கேண்மைவிஞ்சி விதுரனுமமர்செய்யாமல்வெஞ்சிலையிறுத்துப்பின்னும் யதுகுலத்தலைவனானவிராமனுந்தானும்பாரின் நதிமுதற்றீர்த்தம்யாவுமாடுவானயந்துபோனான். |
எட்டுக்கவிகள் - ஒருதொடர். (இ-ள்.) சதமகன்மகன் - இந்திரகுமாரனான அருச்சுனனது, தேர் பாகன் தன்வயின்- சாரதியான கண்ணனிடத்து, கேண்மை விஞ்சி - நேசம்மிகுந்து, விதுரனும்-, அமர் செய்யாமல்-, வெம் சிலை இறுத்து - கொடிய வில்லை முறித்துப்போகட-, பின்னும் - பின்பு, யது குலம் தலைவன் ஆன - யதுவின் குலத்துக்குத் தலைவனாகிய, இராமன்உம்தான்உம் - பலராமனுந்தானும், (அவ்விதுரனுடன்), பாரின் - பூமியிலுள்ள, நதி முதல் தீர்த்தம் யாஉம் - ஆறுகள்முதலிய புண்ணியதீர்த்தங் ளெல்லாவற்றிலும், ஆடுவான் - நீராடும் பொருட்டு, நயந்து - விரும்பி, போனான் - யாத்திரை போய் விட்டான்; (எ -று.)-முதல் மூன்று கவிகள் முன்னிகழந்தவற்றைக் கூறும். பலராமன் - க்ருஷ்ணனுக்குத் தமையன்; வசுதேவர்மனைவியான ரோகிணிவயிற்றில்பிறந்தவன்; இவன் துரியோதனனிடம் |