பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்81

     எண்ணிலார் - (பிறரை) ஒருபொருளாக எண்ணுத லில்லாத வருமாம்,
வில்லுக்கு மேருவை உவமை கூறுவது, திரிபுரசங்கார காலத்துப் பரமசிவனுக்கு
அதுவில்லானதனால்.                                        (146)

56.- திட்டத்துய்மன் கர்ணனால்தோற்றுத் தேரோடுஓடல்.

முட்டவந்துதம்பின்கொடாமன்மேன் முன்கொடுத்துமாமுனை
                                 கொள்வாளியிற்,
பட்டொழிந்தவவ்விருவர்சேனையின் பதிகளுஞ்சயம்
                                படவுடற்றினார்,
விட்டபாணம்வந்திருவராகமும்வெளியடைக்கவே
                              வில்வளைத்தபின்,
றிட்டத்துய்மனுங்கன்னனுக்கழிந்தேறுதேருடன்றேறியோடினான்.

     (இ-ள்.) பட்டு ஒழிந்த - இறந்தவர்க ளொழிந்த, அஇருவர் சேனையின் -
பாண்டவ கௌரவ சேனைகளுக்கு, பதிகள்உம் - தலைவரான திட்டத்துய்மனுங்
கன்னனும், முட்ட வந்து - நெருங்க வந்து, தம் பின் கெடாமல் - தமது
முதுகைக்கொடாமல், முன் கொடுத்து - மார்பை (அம்புகளுக்கு இலக்காகக்)
கொடுத்துக் கொண்டு, மா முனை கொள் வாளியின் - சிறந்தநுனியைக்கொண்ட
அம்புகளினால், சயம் பட - வெற்றி உண்டாம்படி, மேல் - மேன்மேலே,
உடற்றினார்- போர்செய்தார்கள்; விட்ட பாணம் -(ஒருவர்மேல் ஒருவர்) விட்ட
அம்புகள், வந்து- இருவர் ஆகம்உம் - இருவருடம்பு முழுவதையும், வெளி
அடைக்க ஏ - மேலேமறைக்கும்படி, வில் வளைத்தபின் - வில்லைவளைத்துப்
போர்செய்த பின்பு,(அப்போரில்), திட்டத்துய்மனும்-, - கன்னனுக்கு-, அழிந்து -
தோற்று, ஏறு தேருடன்- தானேறிய தேருடனே, தேறி ஓடினான் - உயிர்தப்பி
ஓடிப்போனான்; (எ -று.)-ஏறுதேருடன் அழிந்து என இயைப்பினுமாம். பி - ம்:
கன்னனுக்கிடைந்து.                                            (147)

57.- தருமன்கட்டளையால் வீமன் கர்ணன்மேற் செல்லல்.

சோமகேசரிற்பட்டொழிந்தவெஞ் சூரர்தம்முடன்றுரோண
                                     சூதனன்,
காம்பாணமேயெனவிலக்கருங்கணை கண்மெய்யுறக்கை
                                  கழன்றபின்,
றாமமார்முடித்தம்முனேவலிற்றன்னையொத்ததோள்வீரர்
                                  தம்மொடும்,
வீமசேனன்மற்றவரைவென்றபோர்விசயகன்னன்மேல்
                           வெய்தினெய்தினான்.

     (இ-ள்.) காம பாணம்ஏ என - மன்மதபாணங்களேபோல, விலக்க அரு -
தடுத்தற்கு அரிய, கணைகள் - (கன்னன்விட்ட) அம்புகள், மெய் உற -(தம்)
உடம்பில்தைத்தலினால், துரோண சூதனன் - துரோணரைக் கொன்றவனாகிய
திட்டத்துய்மன்,சோமகஈசரில்- சோமககுலத்தலைவர்களுள், பட்டு ஒழிந்த -
இறந்தவர்கள்போகமிகுந்த, வெம் சூரர்தம்முடன் - கொடிய வீரர்களுடனே, கை
கழன்ற பின் -ஓடிப்போனபின்பு,- தாமம் ஆர் முடி - பூமாலைபொருந்திய
முடியையுடைய,தம்முன் - தன்தமையனான தருமனது, ஏவலின் - கட்டளையினால்,
வீமசேனன் -,தன்னை ஒத்த தோள் வீரர்தம்மொடு உம் - தனக்குச்சமமானமான
புஜபலத்தையுடைய வீரர்களோடு, அவரை வென்ற போர் - திட்டத்துய்மன்
முதலியோரைச் சயித்த