-மிகுந்த கண்ணீரைச் சொரிந்து, இனையும் வேலையில் - வருந்தும் பொழுதில், கனல்படும் புணில் தடி படும் கணக்கு - நெருப்பினாலாகிய புண்ணிலே தடியடிபட்டதன்மையாக, இலக்கணம் தவா வீமன்- (உத்தமவீர) லக்ஷணங்களிற் சிறிதுங்குறையாத வீமன், உதாரிதன் - உதாரணகுணமுடைய கர்ணனது, அணிகள் நீடு - ஆபரணங்கள் மிகுந்த, தோள் - தோள்களிலும், ஆகம் எங்குஉம் - உடம்புமுழுவதிலும், அலக்கண் எய்த - துன்பமடையும்படி, ஈர் இரண்டு - நான்கும், நால் இரண்டு - எட்டும், எண் இரண்டு - பதினாறுமாகிய, வாளியினால் - அம்புகளால், எய்தனன் - எய்தான்; (எ - று.) செஞ்சுடர் - அன்மொழித்தொகை. குமாரனாகிய கர்ணனுக்கு இன்று மரணம் நேரிடப்போவதனால், அதற்கு முற்குறியாகச் சூரியனுக்கு இடக்கண்ணுந் தோளுந் துடிக்க, அதுகருதி அவன் வருந்தினான். சூரியன் அத்தீயகுறியால் மனவருத்தபடும்பொழுது வீமன் கர்ணன்மீது பலபாணங்களைப் பிரயோகித்து அவன்வருத்தத்தை மிகச்செய்தலால், 'கனற்படும்புணிற்றடிபடுங்கணக்கு' என உவமைகூறினார். பி - ம் :கற்படும்புணிற். (152) 62. | வேத மாகிநின் றவனை யெய்தபோர் வில்லி முன்னவன்சல்லியன்றனோ, டோதி னானிவற் கெம்பி வஞ்சின மொழியு மென்று கொண்டுயிர்வ ழங்கினேன், சூத னாகிநீ வந்து தேர்விடுந் தொலைவி லாதபோர் வலியை யன்றியே, யாது கூறலாம் வன்மை வின்மைதான் யாதெ னாவிமைப் போதி லேகினான். |
(இ - ள்.) வேதம் ஆகி நின்றவனை - வேதங்களின் சொரூபி யாகிய பரமசிவனை, எய்த - அம்பெய்துபொருத, போர் வில்லி - விற்போரையுடைய அருச்சுனனது, முன்னவன் - முன்னே பிறந்தவனாகிய வீமன்,' இவற்கு - இக்கர்ணனுக்கு, எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு - (யான் இவனைக் கொன்றால்) எனது தம்பியாகிய அருச்சுனனது சபதந் தவறுமே யென்று எண்ணி, உயிர் வழங்கினேன் - உயிரைக்கொடுத்தேன்; நீ -, சூதன் ஆகி - சாரதியாகி, வந்து-, தேர் விடும் - தேரோட்டுவதனாலாய, தொலைவு இலாத - அழிதலில்லாத, போர்வலிமை அன்றிஏ - போரின் வலிமையையே யல்லாமல், வன்மை - (அக்கர்ணனது)வலிமையைக் குறித்து யாது கூறலாம் - என்ன சொல்லலாம்? வின்மை தான் -விற்போர்த் திறமைதான், யாது - ஏது?' எனா - என்று இகழ்ச்சியாக,சல்லியன்தனோடு ஓதினான் - சல்லியனுடன்சொல்லியவனாய், இமைப்போதில் - ஒருமாத்திரைப்பொழுதிலே, ஏகினான் - (அப்பாற்) சென்றான்; (எ - று.) பாசுபதம்பெறத் தவநிலை நின்ற அருச்சுனனை அழிக்கத் துரியோதனனேவலாற் பன்றியாய்வந்த மூகாசுரன்மேல் வேடவடிவாய் வந்த சிவபெருமான் அம்பெய்ய, அது பிளக்குமுன்னே அருச்சுனன் அம்பொன்று எய்து வராகத்தைவிழுத்த, அதுகாரணமாக அவ்விருவர்க்கும் உண்டான போரில், பரமசிவனை அருச்சுனன் அம்பெய்தும் விற்கழுந்தால் முடியில் அடித்தும் எதிர்த்தா னென்க. (153) |