ஒத்த, விண் புயம்உம் - அழகிய தோள்களிலும், வியன்மார்பம்உம் - அகன்ற மார்பிலும், ஊடுஉற - துளைக்கும்படி, வன்பு பெறு பல வாளிகள் - வலிமைபெற்ற பல பாணங்களை, ஏவலும் - (விடசேனன்) ஏவினவளவில், நண்பொடு - இவனோடு ஒப்ப, அவன் சாத்தகி, இவன் ஏறிய - விடசேனன் ஏறின, தேர் - தேரும், கொடி- கொடியும், நல் புரவி - சிறந்த குதிரைகளும், குடை - குடையும், பாகு - பாகனும், இவை - ஆகிய இவையெல்லாம், வீழ்தர - விழும்படியாகவும், வாகுஉம் மார்புஉம்- தோள்களிலும் மார்பிலும், ஒண் பிறையின் முகம் ஆன - ஒளி பொருந்திய பிறைச்சந்திரன்போன்ற நுனியையுடைய, சிலீமுகம் ஒன்பது - ஒன்பதுபாணங்களை, உதையினன் - தொடுத்தான்; (எ - று.)- ஸ்ரீஞ்ஜிதம் - அசைகின்ற ஆபரணங்களினாலெழும் ஒலி: வடசொல். (155) 65.- சோழனும் மாகதனும் யானைமீதிருந்து பொருதல். குன்றினருவிகள்போன்மததாரைகள்கொண்டகடதட வாரணமாமிசை சென்றுசிலகணையேவினரோரிரு சிந்துகிரணதிவாகரராமென வின்றுவயலுழுவீர்புதுநீர்வரு மென்றுவரிமணலேகுறிகூறிட வன்றுவருகுடகாவிரிநாடனுமம்பொன்வரிகழன்மாகதர்கோவுமே. |
(இ - ள்.) 'வயல்உழுவீர் - கழனிகளை உழுது பயிர்செய்பவர்களே! இன்றுபுது நீர் வரும் - இன்றைக்குப் புதுவெள்ளம் வரும்', என்று -, வரிமணல்ஏ- அடர்ந்தமணல்களே, குறிகூறிட - (முன்னே) குறிசொல்ல, அன்றுவரு - அன்றைக்கே (தவறாமல்வெள்ளம்) வரப்பெறுகின்ற, குட காவிரி - மேற்கிலுற்பத்தியாகிற காவேரிநதிபாய்கின்ற, நாடன்உம் - நாட்டையுடைய சோழனும், அம் பொன் வரி கழல் -அழகிய பொன்னினாலாகிய கட்டப்பட்டவீரக்கழலையுடைய, மாகதர் கோஉம் -மகதநாட்டார்க்குத் தலைவனானசாதேவனென்பவனும், குன்றின் அருவிகள்போல் -மலையினின்று பெருகுகிற நீரருவிகள்போல, மததாரைகள் கொண்ட -மதநீர்ப்பெருக்கைக் கொண்ட, கட தடம் - கபோலங்களி னிடத்தையுடைய, வாரணம்மாமிசை - யானையாகிய விலங்கின்மேலேறி, சென்று - போய் , சிந்து கிரணம் -வீசுகிற கிரணங்களையுடைய, ஓர் இரு திவாகரர் ஆம் என - இரண்டுசூரியர்கள்போல, சில கணை ஏவினர் - சிலபாணங்களைப் பிரயோகித்தார்கள்; (எ-று.) குன்று - யானைக்கும், அருவி - மதத்துக்கும், திவாகரர் - சோழ சாதேவர்க்கும், கிரணம் அம்புக்கும் உவமை. இரு திவாகரர் - இல் பொருளுவமை.காவிரி - வடசொற்றிரிபு; கவேரமென்னும் மலையினின்று உண்டான தென்றும்,கவேரெனன்னும் அரசனது மகனென்றும் பொருள். மகதராஜன் பெயர், மேல் 69 -ஆங் கவியால் விளங்கும், கீழ்ப் படையெழுச்சிச்சருக்கத்தில் பாண்டவர்பக்கத்தும்,கௌரவர்பக்கத்தும் மகததேசத்தரசர் துணையாய் வந்தனர் என்று கூறியிருத்தலால்,இங்குக் கூறியவன் மகததேசத்து அரசர்களுள் துரியோதனாதியர்பக்கஞ் சேர்ந்தசாதேவனென்பவ னென்றும், கீழ்ச்சருக்கத்தில் 35 - ஆம் கவியில் கூறியவன்பாண்டவர் பக்கஞ் சேர்ந்தானொரு மகதநாட்டசர னென்றும் அறிக. (156) |