77.- இருபக்கத்தும் பலர் மடிதல். உதையன்புதல்வன்பெருஞ்சேனையுதிட்டிரன்கைக் குதையம்பில்வீழ்ந்தாரினையோரெனக்கூறறேற்றார் இதையம்பழுதிலிவன்சேனையவன்கையம்பா லுதையுண்டுவீழ்ந்தாருரைத்தாலுமுரைக்காலாற்றா. |
(இ - ள்.) உதையன் புதல்வன் - சூரியபுத்திரனான கர்ணனது, பெரூசேனை - பெரிய சேனையில், உதிட்டிரன் - தருமனது, கை - கையினா லெய்யப்பட்ட, குதை அம்பில் - கட்டமைந்த அம்புகளினால், வீழ்ந்தார் - இறந்துவிழுந்தவர்கள்,- இனையோர்என - இத்தனைபேரென்று, கூறல் தேற்றார் - சொல்லுதற்கு அறியப்பட்டார் [அளவிறந்தரென்றபடி]: இதையம் பழுது இல் - மனத்திற் சிறிதுங் குற்றமில்லாத, இவன் - தருமனது, சேனை - சேனையில், அவன் கை அம்பால் - அந்தக்கர்ணன் கையினால்தொடுத்த அம்புகளினால், உதையுண்டு - எய்யப்பட்டு, வீழ்ந்தார் - இறந்து விழுந்தவர்களை, உரைத்தால் உம் - (கணக்கிட்டுச்) சொல்லத்தொடங்கினாலும், உரைக்கல் - சொல்லுதல், ஆற்றா - முடியாது; (எ -று.) (168) 78.- கர்ணனும் தருமனும் விற்போர்புரிதல். பொற்பூசலென்னவிருசேனையும்போயுமீண்டு மற்பூசல்செய்யவொளிசெய்யுமம்மன்னர்தம்மின் முற்பூசலம்பிற்பிளந்தண்டமுகடுவிள்ள விற்பூசலெய்திப்புரிந்தார்வில்லின்வேதம்வல்லார். |
(இ-ள்.) பொற்பு ஊசல் என்ன - அழகிய ஊஞ்சல்போல.இரு சேனைஉம் - இரண்டுபக்கத்துச் சேனைகளும், போய்உம் - பின்னிட்டும், மீண்டு - திரும்பிமுன்னிட்டு, மல்பூசல் செய்ய - வலிய போரைச் செய்யா நிற்க,- வில்லின் வேதம் வல்லார் - தநுர்வேதத்தில் வல்லவராகிய, ஒளிசெய்யும் - (சேனைக்கு) விளக்கத்தைச் செய்கிற, அ மன்னர் - கன்னனுந்தருமனும், முன் - விரைந்து விடப்படுகிற, பூசல் - ஆரவாரத்தையுடைய, அம்பின் - அம்புகளினால், அண்டம் முகடு - அண்ட கோளத்தின் மேல்முகடும், பிளந்து விள்ள - பிளவுபட்டு வெடிக்கும் படி , தம்மில்- தமக்குள், வில் பூசல் - விற்போரை, எய்தி புரிந்தார் - பொருந்திச் செய்தார்; (எ -று.)- பொற்பு - பொலிவு: உரிச்சொல்; "பொற்பேபொலிவு". (169) 79.- இருவர் போரையும் தேவரும் வாழ்த்துதல். கொலையம்புமாளாமணியாவமுங்கொண்டசெங்கைச் சிலையுங்கிரிகளிரண்டென்னத்திரண்டதோளு நிலையுங்குறிப்புஞ்சிறுநாணொலிநின்றவாறு மலையுந்திறலும்புகழ்ந்தண்டரும்வாழ்த்தினாரே. |
(இ-ள்.) (அவ்விருவீரர்களது), கொலை அம்பு - (பகைவரைக்) கொல்லுதலையுடைய அம்புகள், மாளா - குறைதலில்லாத, மணி ஆவம்உம் - அழகிய அம்புப்புட்டில்களையும், செம் கை - சிவந்த கையில், கொண்ட - பிடித்த, சிலைஉம் - விற்களையும், கிரிகள் |