இரண்டு என்ன - இரண்டுமலைகள்போல (வலிய), திரண்ட தோள் உம் - திரட்சியாகவுள்ள தோள்களையும், நிலைஉம் - (போருக்கு நின்ற) நிலையையும், குறிப்புஉம் - (அம்புஎய்தற்கு) லட்சியம்பார்த்தலையும், சிறு நாண் ஒலி - சிறிய நாணியின் ஒசை, நின்ற ஆறு உம் - பொருந்திய விதத்தையும், மலையும் திறல்உம் -போர்செய்யும் வன்மையையும் (பார்த்து), அண்டர்உம் - தேவர்களும், புகழ்ந்து -துதித்து, வாழ்த்தினார்- (கண்ணெச்சில்படாம லிருக்கவென்று) ஆசீர்வாதமுஞ்செய்தார்கள்; (எ -று.)- 'தேவரும் புகழ்ந்து வாழ்த்தினார்' எனவே, மனிதர் புகழ்ந்துவாழ்த்தினமை தானே பெறப்படும். (170) 80.- கர்ணன் தருமன்மார்பிலும் தோளிலும் அம்புஎய்தல். தாழங்குறித்துக்கரைசெய்யுந்தரங்கவேலை யாழம்புராசியெழுபார்தனியாளநிற்போன் சூழம்பொன்மாலைத்துணைத்தோள்களினெட்டுமார்பி னேழம்புமெய்தானிருள்காயுமிரவுமைந்தன். |
(இ - ள்.) தாழம் - தாழைமரங்கள், குறித்து - வரிசையாகத் தோன்றி, கரைசெய்யும் - (சுற்றிலும்) கரையைச் செய்கிற, தரங்கம் வேலை - நீர் அலைகளையுடைய, ஆழ் - ஆழமான, அம்புராசி - கடல்களாற் சூழப்பட்ட, எழுபார் - ஏழுதீவுகளைம், தனி ஆள - தனியே அரசாளுதற்கு, நிற்போன் - நிற்பவனாகிய தருமனது, அம் பொன் மாலை சூழ் - அழகிய பொன்மயமான ஆரங்கள் பொருந்திய, துணி தோள்களின் -இரண்டு தோள்களிலும், எட்டுஉம் - எட்டுஅம்புகளையும், மார்பின் - மார்பிலே, ஏழ் அம்புஉம் - ஏழம்புகளையும், இருள்காயும் இரவி மைந்தன் - இருளை யழிக்கிற சூரியனது மகனான கர்ணன், எய்தான்-;(எ -று.) தாழம் - ஐயீற்றுமரப்பெயர் ஈறுகெட்டு அம்முச்சாரியை பெற்றது. தாழம் என்பதைத் தொழிற்பெயராகக் கொண்டு, தாழம் - தாழ்தலை [சாந்தமாதலை], குறித்து- எண்ணி, கரை செய்யும் - கரையிற் செல்லுகிற, தரங்கம் என்பாருமுளர். 'தாழங்குரித்து' என்னும் பாடத்திற்கு, தாழ் - தாழைகள், அங்குரித்து - முளைத்து என்க. பி - ம்: இறைவன். (171) 81.- தருமன் அம்பெய்து கர்ணனது புயங்கீறிச் சிலையும் வீழ்த்தல். தன்றோளுமார்புஞ்சரமூழ்கவெஞ்சாபம்வாங்கி நின்றோனைவாய்மைநிலைநின்றநிருபரேறும் வன்றேளுறநாண்வலித்தோரிருவாளியேவிச் சென்றோரிமைப்பிற்புயங்கீறிச்சிலையும்வீழ்த்தான். |
(இ - ள்.) தன் தோள்உம் - தனது தோள்களிலும், மார்புஉம் - மார்பிலும், சரம் மூழ்க - அம்புகள் அழுந்தும்படி, வெம் சாபம் வாங்கி நின்றோனை - கொடிய வில்லை வளைத்துநின்ற கர்ணனை, வாய்மை நிலை நின்ற - சத்தியத்தில் தவறாமல் நிலையாய் நின்ற, நிருபர் ஏறு உம் - அரசர்களுக்கு ஆண்சிங்கம்போன்ற தருமனும், சென்று - (எதிரிற்) போய் வல் தோள் உற - வலிய தோளிற் படும்படி, நாண் |