பக்கம் எண் :

96பாரதம்கன்ன பருவம்

     முகிலுக்குக் கடவுட்டன்மை - உலகமும் அதற்கு உறுதியாகிய அறம் பொருள்
இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாதல், 'கிருதவன்மன் கருது' என்ற பாடமிருப்பின்,
செய்யுளோசையினிதாகிச் சந்தவிருத்த மென்னலாமெனத்தோன்றுகின்றது. முடுகி,
ஒத்து குறுகினன் என்க.

     இதுமுதல் ஆறுகவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள்
கருவிளச்சீர்களும், இரண்டு ஆறாஞ்சீர்கள் கூவிளங் காய்ச்சீர்களும், நான்கு
எட்டாஞ்சீர்கள் கருவிளங்காய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தங்கள். இதுமுதற்
பத்துக்கவிகள் அந்தாதித் தொடையுடையன.                          (176)

86.- தருமன் கர்ணனுடன் பொருதமை.

தருமன்மைந்தன்பரிதிபுதல்வனைக்குறுகியிருசரமவன்செங்கை
                          வரிசிலைதுணித்திடவுமெதி,
ரிருசரந்துன்றியுயர்கொடியறுத்திடவுமுடனிருசரஞ்சென்றுதனியிர
                                  மொட்டிடறிடவு.
மொருசரம்பொங்குதிறல்வலவன்மெய்ப்புதைதரவுமொருசரந்திண்
                            கவனதுரகதத்துரனுறவும்,
வரமிகுந்துங்கதனுவினைவளைத்தெரிகொள்சிலவடிசரங்
                    கொண்டவனதிருபுயத்தெழுதினனே.

     (இ-ள்.) தருமன் மைந்தன்-, பரிதி புதல்வனை குறுகி -, இரு சரம் - 
இரண்டுஅம்புகள், அவன் - அக்கர்ணனது, செம் கை - சிவந்த  கையிற்பிடித்த,
வரிசிலை -கட்டமைந்த வில்லை, துணித்திடஉம் - துண்டாக்கவும், இரு சரம்-,
எதிர் துன்றி -எதிரே நெருங்கி, உயர் கொடி - உயர்ந்த துவசத்தை, அறுத்திடவும்-,
இரு சரம்-,உடன் சென்று - விரைந்துபோய், தனி - ஒப்பில்லாத, இரதம்மொட்டு -
தேரின்கொடிஞ்சி யென்னும் உறுப்பை, இடறிடஉம் - தள்ளிடவிடவும் - ஒருசரம்-,
ஓர்அம்பு, பொங்கு திறல் - மிகுந்தவல்லமையையுடைய, வலவன்-பாகனான
சல்லியனது,மெய் - உடம்பில், புதைதர உம்-நன்றாகத்தைக்கவும், ஒருசரம்-,திண் -
வலிய,கவனம் - விரைந்து செல்லுதலையுடைய, துரகதத்து - குதிரைகளின், உரன் -
மார்பில், உறஉம் - பொருந்தவும், வரம் மிகும் - சிறப்பு மிகுந்த, துங்க தனுவினை -
உயர்ந்த வில்லை, வளைத்து-, எரி கொள் - நெருப்பை (உவமையாக)க் கொண்ட,
சில வடி சரம் கொண்டு - சில கூரிய அம்புகளால்;அவனது இரு புயத்து -
அவனுடைய இரண்டு தோள்களிலும், எழுதினன் - கிளறினான்; (எ - று.)- துர
கதம்- விரைந்து செல்வது: காரணக்குறி.மொட்டு - குமிழ்வடிவான கூம்பு
என்பாருமுளர்.                                                    (177)

87.- தருமன் வடகலிங்கர் முதலியோரையோட்டிப் பலரையும்
விண்புகச் செய்தமை.

வடிசரங்கொண்டவன்திருபுயத்தெழுதியபின் வடகலிங்கங்கு
                           குரமகதமொட்டியமுதல,
படிதொறுந்தங்கள்குடைநிழல்பரப்பியவரசர்பலருடன்பைம்
                      பொன்முடிமகுடவர்த்தனர்பலரு,
மிடிமுழங்குங்குரலினதிபயத்தொடுபிலனிலிழிபுயங்கங்களென
                        வொருவருக்கொருவர்நடை,
யடிதளர்ந்தஞ்சலியுமுதுகுமிட்டவரொழியவடையவன்றும்பர்
                         பதிகுடிபுகப்பொருதனனே.

     (இ - ள்.) வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் -, வட
கலிங்கம் - வடக்கே யுள்ள கலிங்கதேசமும், குகுரம்- குகுரதேசமும், மகதம் -
மகததேசமும், ஒட்டியம் - ஒட்டியதேசமும்,