முதல - முதலாகிய, படி தொறுஉம் - நாடுகள்தோறும், தங்கள் தங்களது, குடை நிழல் பரப்பிய - வெண்கொற்றக்குடையின் நிழலைப் பரவச்செய்து அரசாண்ட, அரசர் பலருடன் - பல அரசர்களும், பைம் பொன் முடி - பசும்பொன்னாலாகிய கிரீடத்தையுடைய, மகுடவர்த்தனர் பலர்உம் - முடி .தரிக்கும் பல அரசர்களும் (ஆகிய இவர்களுள்), இடி முழங்கும் குரலின் - இடியிடிக்கிற ஓசையினால், அதி பயத்தொடு - மிகுந்த அச்சத்துடனே, பிலனில்இழி - வளைகளிலே இறங்குகிற, புயங்கங்கள் என - பாம்புகள்போல (த் தேரிலிருந்து நிலத்தில் இறங்கி), ஒருவருக்கு ஒருவர் - ஒருத்தருக்கொருத்தர் (முற்பட்டு), நடை அடி தளர்ந்து - (அச்சத்தாற்) கால்நடைசோர்ந்து, அஞ்சலி உம் - கைகூப்பித்தொழுதலையும், முதுகுஉம் - முதுகுகாட்டுதலையும், இட்டவர் ஒழிய - செய்தவர்கள் தவிர, அடைய - மற்றையோரெல்லாம், அன்று - அன்றைத்தினத்தில், உம்பர் பதி குடி புக - தேவலோகத்திற் குடிபோம்படி [இறந்து சுவர்க்கமடையும்படி], பொருதனன் - போர்செய்தான் (தருமன்); (எ - று.)- முதல- குறிப்புப் பெயரெச்சம். (178) 88- தருமனுடைய சங்கநாதம் அடையவன்றும்பர்பதிகுடிபுகப்பொருதுதன தணிகொள்சங்கம் பவளவிதழின்வைத்தருளுதலு, முடையுமண்டந்திசைகள்செவிடுபட்டிடுமமரருலகுபொன்றும் பணிகள்பிலமுமுற்றுறவிடியு, மிடைவழக்குந்தரணிவளர்சனத்தொடுமடியு மெனமுழங்கும் பெரியவரவ மெக்கடலுமெழு, கடையுகங்கண்டவடவையின்முகத்தெரிகனலி கதுவமண்டும் பவனனொலியினிற்கடுகியதே. |
(இ - ள்.) அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது-, தனது-, அணி கொள் சங்கம் - அழகைக் கொண்ட சங்கத்தை, பவளம் இதழின் - பவழம்போற் சிவந்த வாயில், வைத்தருளுதலும் - (தருமன்) வைத்து ஊதின வளவில், அண்டம் உடையும் - அண்ட கோளம் வெடிக்கும்; திசைகள் செவிடு பட்டிடும் - திக்குகள் செவிடாய் விடும்; அமரர் உலகு பொன்றும் (மேலுள்ள) தேவலோகம் அழியும்; பணிகள் பிலம்உம் - (கீழுள்ள) நரகலோகமும், முற்றுற இடியும்- முழுவதும் இடிபடும்; இடை வழங்கும் தரணி - (அவ்விரண்டுஉலகங்களுக்கும்) இடையிலேபொருந்திய பூமி, வளர்சனத்தொடு - பொருந்திய ஜனத்துடனே, மடியும் -இறக்கும், என - என்னும்படி, முழங்கும் - ஒலிக்கிற, பெரிய அரவம் - பேரொசை,எ கடல்உம் எழு - எல்லாக் கடல்களும்பொங்குகிற, கடையுகம் - யுகாந்தகாலத்தில்,கண்ட - (வெளியிற்) காணப்பட்ட, வடவையின் முகத்து - படபா என்னம் பெண்குதிரையின் முகத்திலே, எரி - எரிகிற, கனலி - நெருப்பு, கதுவ - பற்றும்படி,மண்டும் - மிகுந்து வீசுகிற, பவனன் - காற்றின், ஒலியினில் - ஓசையைக்காட்டிலும்,கடுகியது - மிகுந்தது; (எ -று.) (179) 89.- சல்லியன் சாரத்தியஞ்செய்யக் கர்ணன்சங்கமுழக்கித் தருமன் இருந்த இடத்து வருதல். கதுவமண்டும்பவனனொலியினிற்கடுகியணி கவசமுங்குண்டலமு மகபதிக்கருள்குரிசில், சதுர்முகங்கொண்டதொருகனகமொட்டிரத |
|