பொன் துகிலினொடு - முரசத்தை யெழுதிய அழகிய கொடிச்சீலையுடனே, பறியஉம் - ஒடிபடவும், இவன் - கர்ணன், சண்ட தனு - உக்கிரமான வில்லை, உற வளைத்தனன் - நன்றாக வளைத்தான்; (எ -று.)- அஞ்சம் - அக்ஷம் என்னும் வடமொழித் திரிபு. (181) வேறு. 91.- தருமனும் அசுவத்தாமன் முதலியோர் சிறப்பித்துரைக்கத் திறம்பட அம்பெய்தமை. இவனுமவ னைப்புயமு முரமுமுழு கத்துவச மிடியமணி மொட்டிரதமொடியவரி விற்றுணிய, நவநடைவ யப்புரவி விறல்வலவன் மெய்ப்புதைய நகுசரநி ரைத்தொருவி னடுவுறவ ணக்கினபி, னவனுமிவ னைப்பிறகுபொருதுமுன்மலைத்தபடி யடையவும ழித்தனனிவ்வடன் மிகுக ளத்திலென, வுபநிடத வித்துமுத லவனிபரெ னைப்பலரு முரமுமவர் கற்றகலை யுறுதியுமுரைத்தனரே.பாடல் |
(இ - ள்.) இவன்உம் - கர்ணனும், அவனை - தருமனை , புயம் உம் உரம்உம் முழுக - தோள்களிலும் மார்பிலுந் தைக்கவும், துவசம் இடிய - கொடி விழவும், மணி மொட்டு இரதம் - நவரத்தினங்களிழைத்த கொடிஞ்சியையுடைய தேர்,ஒடிய - ஒடியவும், வரி வில் துணிய - கட்டமைந்த வில் துணிபடவும், நவ நடைவய புரவி - ஒன்பதுவகை நடைகளையுடைய வலிமையையுடைய குதிரைகளும், விறல் வலவன் - வெற்றியைத்தருகிற சாரதியும், (ஆகிய இவற்றினது), மெய் உடம்பில், புதைய - அழுந்தவும், நகு சரம் - விளங்குகிற அம்புகளை, நிரைத்து - வரிசையாகத் தொடுத்து, ஒரு வில் - ஒருவில்லை, நடுஉற - நடுவிலே பொருந்த, வணக்கினபின்- வளைத்தஉடனே,- அவன்உம் - தருமனும், இவனை - கர்ணனை, பிறகு பொருது - பின்பு போர்செய்து, முன் மலைத்தபடி அடைய உம் - முன்னே போர்செய்து (அவன்தன்னை) அழித்தபடி யெல்லாம், இ அடல் மிகு களத்தில் - இவ்வலிமைபொருந்திய போர்க்களத்தில், அழித்தனன் - அழித்தான், என என்று, உபநிடத வித்து முதல் - வேதாந்தத்தை அறிந்த அசுவத்தாமன் முதலிய அவனிபர் எனைப் பலர்உம் - பூமியைக்காக்கிற அரசர்களெல்லாரும், உரம்உம் - அவர்கள் வலிமையையும், அவர் கற்ற கலை உறுதிஉம் - அவர்கள் பயின்ற வில்வித்தையின் வல்லமையையும், உரைத்தனர் - (சிறப்பித்துச்) சொன்னார்கள்; (எ - று.) - உபநிடதம்- உபநிஷதம். உபநிடதவித்து - கிருஷ்ணனாகவுமாம். கர்ணனால் தேரழியவேறோரிரதமிசைத் தருமன் ஏறிவந்தனனென்பதை மேற்கவியில் அநுவாதமுகத்தாற்கூறுவர். இதுமுதல் நான்குகவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் கருவிளங்காய்ச்சீர்களும், மற்றை நான்குங் கூவிளங் காய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். 'தனதனன தத்தனன தனதனன தத்தனன தனதனனதத்தனன தனதனன தத்தனனா' என்பது, இவற்றிற்குச்சந்தக்குழிப்பு. (182) |