தக்கவன் சல்லியனையன்றி வேறு யாருமில்லை யென்று நிச்சயித்துத் துரியோதனன் அவனை அருகில் வரவழைத்தன னென்பதாம். திருதராட்டிரன் பாண்டு இவர்களது தந்தையான விசித்திரவீரியனுக்குத் தமையனாதலால், வீடுமன், கௌரவபாண்டவர்க்குப் பெரியபாட்டனாவன். ஆண்மை-பௌருஷம். வெயிலோன் - உஷ்ணகிரணமுடையவன். வடித்தல்-கூராக்கப்படுதல் செய்யுளாதலின், 'அவன்' என்ற சுட்டுப்பெயர் முன்வந்தது; [நன் - பொது - 43.] (4) 5. | நீயேயெனக்குயிருநீயே யெனக்குளமுநீயே யெனக்குநிதியும், நீயேதுணைப்புயமுநீயே விழித்துணையுநீயே யனைத்துநிலையும், நீயேமுனைச் செருவிலதிரதரின்மாரதரினிகரற்றகோவுமதனால், நீயேமுடித்தியெனதெண்ணத்தை யென்றுவகைநிகழாவியந்துபுகழா. |
(இ -ள்.) நீயே -, எனக்கு-, உயிரும்-; நீயே,-எனக்கு-, உளமும் - மனமும்: நீயே-, எனக்கு-, நிதியும் - பொருட்குவியலும்: நீயே-, துணைபுயமும்-(எனக்கு) இரண்டுதோள்களும்: நீயே-, விழி துணையும் (எனக்கு)இரண்டுகண்களும்:நீயே- அனைத்து நிலையும் (எனக்கு) எல்லாவலிமைகளும்; நீயே-, செரு முனையில் - போர்க்களத்தில், அதிரதரில்மாரதரில் நிகர் அற்ற - அதிரதர்களுள்ளும் மகாரதர்களுள்ளும் ஒப்பில்லாத,கோவும் - அரசனும் ஆகிறாய்; அதனால் - ஆதலால், நீயே -, எனதுஎண்ணத்தை (பகையழித்தலாகிய) என்கருத்தை, முடித்தி- நிறைவேற்றுவாய்,என்று-, உவகை நிகழா வியந்து புகழா-உற்சாகம் பொருந்திவியப்புக்கொண்டுதுதித்து-(எ - று.) -இப்பாட்டில் 'புகழா' என்றது. அடுத்த பாட்டில்'உகந்தனன்' என வரும் வினைமுற்றோடு முடியும்.
எனக்குஉயிர்போல இன்றியமையாதவனும், மனம்போலச் சிறந்த அகத்துறுப்பாகுபவனும், பொருட்குவியல்போலப் பலவகை நன்மைகளையுந்தருபவனும், தோள்போல உற்றவிடத்து உதவும் நற்றுணையும், கண்போலச் சிறந்த புறத்துறுப்பாகுபவனும், எல்லா வகைவலிமைகளுக்குங் காரணமாகுபவனும், சமரதனாயிருப்பினும் போர்த்திறத்தில் அதிரதமகாரதர்களினும் மேம்பட்டவனும் நீயேயாதலால், இனி நீ சேனைத்தலைவனாயிருந்து என் கருத்தை முடிப்பாயென்று தனது உவகையும் வியப்புந்தோன்றத் துரியோதனன் சல்லியனைப் புகழ்ந்தன னென்பதாம். அதிரதர்,மகாரதர், சமரதர், அர்த்தரதர் எனத் தேர்வீரர் நால்வகைப்படுவர், அதிரதர்முழுத்தேரரசர்; அவராவார் - ஒருதேரில் ஏறி நின்று தம் தேர் சாரதிகளுக்கு அழிவுவாராமற்காத்துப் பலவாயிரந்தேர் வீரரோடுஎதிர்த்து வேறுதுணையில்லாமலே போர்செய்து வெல்லும் வல்லமை யுடையார்.அவரிற் சிறிது தாழ்ந்தவர் - மகாரதர்; இவர் பதினோராயிரந் தேர் வீரரோடுபொருபவர். சமரதர்-ஒரு தேர்வீரனோடு தாமும் ஒருவராய் எதிர்க்கவல்லவர். அர்த்தரதர் - அவ்வாறு எதிர்க்குமளவில் தம் தேர் முதலியவற்றை இழந்து |