பொழுதேகங்காநதியில் எடுத்தெறிந்துவிட்டாள். எட்டாவது பிள்ளை பிறந்தவுடனே தந்தை 'இக்குழந்தையைக் கொல்லலாகாது' என்றுமறுக்க, கங்கைகணவனைவிட்டு நீங்கினள். அவ்வெட்டாவது மகனே, இவ்வீடுமன்.
இதுமுதற் பதின்மூன்றுகவிகள் - இச்சருக்கத்தின் பதினோராங்கவி போன்றஅறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தங்கள். (131) 132. | நெஞ்சறியநீயெமக்குநிலைநின்றபழியாகநெடுநாட்செய்த வஞ்சகமும்பொய்ம்மொழியுமனுநீதிதவறியதுமறந்தாய்கொல்லோ துஞ்சியநின்சேனையெல்லாமீண்டுவரநீயறையுஞ்சுருதியிற்றை வெஞ்சமரமுடித்தன்றோவறைவதிவைவீரருக்குவீரமாமோ. |
(இ -ள்.) நிலை நின்ற பழி ஆக - (எந்நாளும் அழியாமல்) நிலை நிற்குந்தன்மையதான பழிப்பு உண்டாம்படி, நெஞ்சு அறிய - மனப்பூர்வமாக, நீஎமக்கு நெடு நாள் செய்த-நீ எங்களுக்கு வெகுநாளாகச்செய்துவந்த, வஞ்சகமும் - வஞ்சனையையும், பொய்மொழியும் - (நீகூறிய) பொய்வார்த்தைகளையும், மனு நீதி தவறியதும் - மனுதர்மசாஸ்திரத்தில் சொல்லப்பட்ட நீதியினின்று (நீ) வழுவியதையும், மறந்தாய் கொல் ஓ - மறந்துவிட்டாயோ? துஞ்சிய - இறந்த, நின் சேனை எல்லாம் - உனது சேனைகள் யாவும், மீண்டுவர - உயிர்பெற்றுத் திரும்பிவரும்படி, நீ அறையும் - நீ உச்சரிக்கிற, சுருதி - வேதமந்திரம், இற்றை வெம் சமரம் முடித்து அன்றோ - இன்றைய தினத்தின் கொடியபோரை முடித்தபின்பல்லவோ, அறைவது - உச்சரிக்க வேண்டுவது? (அங்ஙனம் இருக்க), இவை - (நீ செய்யும்) இச்செயல்கள், வீரருக்கு வீரம் ஆமோ - சுத்த வீரர்களுக்கு உரிய பராக்கிரமச் செயலாகுமோ? [ஆகாது என்றபடி]; (எ - று.) இவை -முதலிற் பல தீங்குகளைச்செய்தலும், அவற்றிற்காக நேர்ந்த போரில் முன்நிற்கமாட்டாமல் ஓடியொளித்துத் தவந்தொடங்குதலும். 'எமக்கு நிலைநின்ற பழியாக' எனஎடுத்து, எங்களுக்கு என்றும் நிலைப்பட்டபழி யுண்டாம்படி யென வுரைப்பினும் அமையும். துரியோதனன் பாண்டவர்க்குச்செய்தவஞ்சகமும், கூறிய பொய்மொழியும்மிகப்பல; வீமனுக்கு நஞ்சு ஊட்டியமை, அரக்குமாளிகையில் தீவைத்தமை, சூதாட்டம், வனவாச அஞ்ஞாதவாசங்களின் பின் கொடுப்பேனென்று வாக்குத்தத்தஞ்செய்த இராச்சியத்தை மீண்டுகொடாமை முதலாக நூல்முழுவதிலுங் காண்க. நீதி தவறியது - "மூத்தானிருக்க இளையா னரசாடல் கோத்தருமமன்று" என்ற இராசநீதி தவறித் தருமனினும் இளையவனான தான் அரசுபெற்று ஆளுதல். (132) 133. | அடிமாறிநீரிடைப்புக்கருமைநீபுகன்றாலு மரவப்பைம்பொற், கொடிமாறிக்குருகுலத்தார்கோவேநின்பேர்மாறிக்குலாவுமாலை, முடிமாறியொருதனிமா முத்தநெடுங்குடைநிழற்கீழாளுமுந்நீர்ப், படிமாறி யொழியவிடேன் புறப்படாய்மறைபடவிப்பகல்போம் முன்னே. |
(இ - ள்.) குரு குலத்தார் கோவே - குருவமிசத்து அரசர்களுக்கு அரசனே! நீ- , அடி மாறி - அடிகளைமாற்றிவைத்து, நீரிடைபுக்கு - |