பக்கம் எண் :

104பாரதம்சல்லிய பருவம்

                           காணப்பொருதவாளி,
எரிபுவனநுகர்ந்ததுபோலித்தடமும் புகையா
                           முனெழுந்திராயே.

     (இ -ள்.) திரிபுவனங்களும் - மூன்று உலகங்களிலும், சேர - ஒருசேர,
செங்கோன்மை செலுத்திய - ஆளுகையை நடத்திய, நின்சீர்த்தி-உனது மிக்க
புகழ், இந்த விரி புவனந்தனில் ஒளித்தால் - இந்தப் பரவியநீரிலே (நீ)
ஒளித்துக்கொண்டதனால், மிகுவசை ஆய் போகாதோ -
மிக்கபழிப்பாய்விடாதோ? வெருவலாமோ - (இவ்வாறு நீ) அஞ்சலாமோ?
புரிபுவனம் உண்டு உமிழ்ந்தோன்- (தான்) படைத்த உலகங்களை
விழுங்கியுமிழ்ந்தவனாகிய திருமால் [இராமபிரான்], போர் இலங்கை வழி
காண- போர்செய்தற்குரிய இலங்கைக்குச் செல்லும்வழியைக்
காணும்பொருட்டு,பொருத - (சமுத்திரராசன் மேற்) செலுத்திய, வாளி எரி -
ஆக்கினேயாஸ்திரம்,புவனம் நுகர்ந்ததுபோல் - (அக்கடலின்) நீரை
உறிஞ்சத் தொடங்கியதுபோல,இ தடமும் புகையாமுன் - இந்தத் தடாகமும்
(என் அஸ்திரத்தால்) புகைந்துஎரிந்துபோவதற்குமுன்னமே, எழுந்திராய் -
வெளிப்பட்டு வருவாய்; (எ - று.)

     நீஇப்பொழுது விரைவில் வெளிவாராயாயின் இராமபிரான்,
ஆக்கிநேயாஸ்திரப்பிரயோகஞ்செய்து கடலை வற்றச்செய்யலுற்றாற்போல
யான்இப்பொய்கையை நீர்வற்றச்செய்து அதனுட் கிடக்கும் உன்னை
யொழிப்பேனென்பதாம்.  இராமபாணம் கடலை வெதுப்பிய வரலாறு, கீழ்
74 -ஆங் கவியிற் கூறப்பட்டது.

    த்ரிபுவநம் - சுவர்க்கம் பூமி பாதாளம் என்பன; 'திரிபுவனங்களுஞ்
சேரச்செங்கோல்செலுத்திய' என்றது சீர்த்திக்கு அடைமொழி; மூவுலகத்திலும்
தடையறப் பரவிய புகழென்றபடி.  இங்கே, செங்கோன்மை செலுத்துதல் -
தடையறச்சென்று நிலைபெறுதல்.  "சீர்த்திமிகுபுகழ்" என்ற
தொல்காப்பியத்தால்,சீர்த்தி யென்பது பெரும்புகழையுணர்த்துவதோர்
உரிச்சொல்லா மென்றும்,புகழ்மாத்திரத்தை யுணர்த்தும் கீர்த்தியென்னும்
சொல்லின் திரிபன்றென்றுங்கொள்க.  'புவனம் உலகும் புனலும் புவியுமாம்"
என்ற பிங்கலந்தையினால்,புவனமென்பது - உலகும் நீருமாதலையறிக. (137)

138.-அவைகேட்டுத்துரியோதனன் நீரினின்று வெளியெழுதல்.

பாவனனிப்படியுரைத்தபழிமொழியுந்தனதுசெவிப்பட்டகாலை
சீவனமுற்றையும்விடுவோனிருக்குமோமறையுடனேசேரவிட்டான்
ஆவனமற்றறியாமலழிவனமற்றறியாமலடுத்தோராவி
வீவனமற்றறியாமனினையுநினைவினுக்குவமைவேறிலாதான்.

     (இ -ள்.) பாவனன் - வாயுகுமாரனான வீமன், இ படி உரைத்த -
இவ்வாறுசொன்ன, பழி மொழியும் - நிந்தனைச்சொற்கள்யாவும், தனது செவி
பட்ட காலை - தன்னுடையகாதிற்பட்டபொழுது, ஆவனஅறியாமல் - (தனக்கு)
நன்மைவிளைப்பவை இன்னவையென்று