அறியாமலும்,அழிவன அறியாமல் - (தனக்குத்) தீமைவிளைப்பவை இன்னவையென்று அறியாமலும், அடுத்தோர் ஆவி வீவன அறியாமல் - தன்னைச் சார்ந்தவர்களது உயிர்கள் அழிந்து விடுவனவென்பதையும் அறியாமலும், நினையும் - (தான்மனத்திலே மிகுதியாக) எண்ணுகிற, நினைவினுக்கு - தீயசிந்தனைகளுக்கு, வேறு உவமை இலாதான் - வேறு ஒப்புமை பெறாதவனான துரியோதனன், - மறையுடனே சேர விட்டான் - மந்திரஜபத்துடனே (நீரையும்) ஒரு சேர விட்டிட்டான்; சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ - சீவனம் முழுவதையும் விட்டொழியுமவன் (அச்சீவனத்தினுள்ளே) இருப்பானோ? [இரானென்றபடி]; (எ - று.) 'ஜீவநம்' - உயிர்வாழ்க்கையென்றும் நீரென்றும் பொருள்படுதலால், அச்சொல்லில் சமத்காரங்கற்பித்து, 'சீவனம் முழுதையும் ஒழியுமவன் அச்சீவனத்தின் ஒரு பகுதியிலே ஒளித்திருப்பானோ?" என்று சிலேடையால் நயம்படக்கூறினான். பாவநன் - பவநனது குமாரன்; பவநன் - வாயு. பின்னிரண்டடிகளில், துரியோதனனது அவிவேகத்தையும் வரும்பொருளாராய்ச்சி யின்மையையும், அவன் குணத்தையும், தீயசிந்தனையையும் வெளியிட்டார். (138) 139.-துரியோதனன்நீர்நிலையினின்று வெளியெழுதலைப் பற்றிய வருணனை. நீளமுறப் பரவையுற வாளமுறக்கரைபரந்து நிமிர்ந்த நீத்தம், நாள மலர்ப் பொய்கையினின் றெழுவான்மெய்ச் சுருதிமறை நவிலுநாவான், காளநிறக் கொண்டல்பெருங் கடன்முழுகிவெள்ளமெலாங் கவர்வுற் றண்ட, கோளமுறக் கிளர்ந்ததுபோற்றோன்றினான்மணியுரகக் கொடியினானே. |
(இ -ள்.) மெய் சுருதி மறை - சத்தியமான வேதமந்திரத்தை, நவிலும் -உச்சரிக்கிற, நாவான் - நாக்கையுடையனாயிருந்த, மணி உரகம் கொடியினான்- மாணிக்கத்தையுடைய பாம்பின் வடிவமெழுதிய கொடியுடைய துரியோதனன்,-நீளம் உற - நீட்சிமிகவும், பரவை உற - பரப்பு மிகவும், வாளம் உற -வட்டவடிவம் பொருந்தவும், கரை பரந்து நிமிர்ந்த நீத்தம் - கரையின்மேற்பரவியெழுந்து வழிகிற வெள்ளத்தையுடைய, நாளம் மலர் பொய்கையினின்று - உட்டுளையுள்ள தண்டையுடைய தாமரைநிறைந்த தடாகத்தினின்று, எழுவான் - மேலெழுபவன்,- பெருகடல் முழுகி - பெரிய கடலினுள்ளேமூழ்கி, வெள்ளம்எலாம் கவர்வுற்று - நீரைநிரம்பக்கிரகித்து, அண்ட கோளம் உற - ஆகாய முகட்டையளாவ, கிளர்ந்தது - மேலெழுந்ததான, காளம் நிறம் கொண்டல் போல் - கருநிறமுடைய மேகம்போல, தோன்றினான் - காணப்பட்டான்; (எ - று.) அக்குளத்தின் நீட்சி பரப்பு ஆழம் வட்டவடிவம் நீர்மிகுதி யென்பவையும் துரியோதனனது கருநிறமும் தோன்ற, துரியோதனன் |