பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்11

போம்படியானவர்;இவர் இருவர் சேர்ந்தால், ஒருசமரதனுக்கு ஒப்பாவர். (5)

6.மன்பட்டவர்த்தனரு மணிமகுடவர்த்தனருமுறையால்
                            வணங்க வொளிகால்,
நன்பட்டமுந்தனதுகையாலணிந்துபடைநாலுக்குநாயகமெனா,
மின்பட்டவோடைநுதலிபராசன்வன்பிடரின்மிசைவைத்
                                 துகந்தனனரோ,
என்பட்டதப்பொழுதுகுருசேனை மெய்ப்புளகமெழவொண்
                               கண்முத்தமெழவே.

     (இ -ள்.) மன் - பெரிய, பட்டவர்த்தனரும் - பட்டந்தரித்து
அரசாளும்அரசர்களும், மணி மகுடவர்த்தனரும் - அழகிய கிரீடந்தரித்து
அரசாளும்அரசர்களும், முறையால் வணங்க - முறைப்படி வணங்கும்படி,
படைநாலுக்கும் நாயகம் எனா-நால்வகைச் சேனைக்கும் (இவனே)
தலைமைபூண்பவனென்று சொல்லி, ஒளி கால் நல் பட்டமும் தனது கையால்
அணிந்து - ஒளியை வீசுகிற அழகிய (சேனாபதிக்கு உரிய)
பொற்பட்டத்தையும்தனதுகையால் (அவனது நெற்றியிலே) கட்டி, மின் பட்ட
ஓடை நுதல் இபராசன் வல் பிடரின் மிசை வைத்து-மின்னல் போன்ற
ஒளிபொருந்தியபொற்பட்டத்தையணிந்த நெற்றியையுடைய சிறந்த
பட்டத்துயானையின்வலியபிடரியிலே (சல்லியனையேறி) வீற்றிருக்கச்செய்து,
உகந்தனன் -(துரியோதனன்)மகிழ்ச்சிகொண்டான்; அப்பொழுது-,
குருசேனை-கௌரவசேனை, மெய் புளகம் எழ - உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு
உண்டாகவும்,ஒள்கண் முத்தம் எழ - விளங்குகிற (தமது) கண்களில்
ஆனந்தக்கண்ணீர்தோன்றவும், என் பட்டது - என்னமகிழ்ச்சி யடைந்தது!
[மிக மகிழ்ந்ததென்றபடி;] (எ - று.)-அரோ - ஈற்றசை.

     இனிஎல்லாவீரரும் சல்லியனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி
துரியோதனன் அவனைச் சேனைத்தலைவனென்று சொல்லிப் பட்டங்கட்டிப்
பட்டத்து யானையின்மே லேற்றி மகிழ, அவனது சேனையிலுள்ளார் யாவரும்
மிகவும் மகிழ்ச்சிகொண்டன ரென்பதாம்.  பட்டவர்த்தனர் - கிரீடமில்லாமல்
நெற்றிப்பட்டம் மாத்திரந்தரித்து அரசாளுபவர்.  மகுடவர்த்தனர் -
கிரீடந்தரித்து அரசாளுபவர்.  படைநால் - யானை தேர் குதிரை
காலாளென்னுஞ் சதுரங்கம்.  சிறந்ததை அரசனென்றல் மரபாதலின்,
'இபராசன்'என்றார்; உயர்திணை யாண்பாலாற் கூறியதும் சிறப்பையே
காட்டும்.  குருஎன்பவன் - சந்திர குலத்திற் பிரசித்திபெற்ற ஓர் அரசன்;
அவனால் அக்குலம்குருகுலமென்றும், அந்நாடு குருநாடென்றும்,
அக்குலத்தவர் கௌரவரென்றும்பெயர்பெறுதல் காண்க.  இங்கே,
அக்குலத்தாரான கௌரவரது சேனை,குருசேனை யெனப்பட்டது. 
பாண்டவரும் குருகுலத்தாராயினும், குருநாட்டின்அரசுரிமை
பெற்றுள்ளவன்துரியோதனனாதலால், குருசேனை யென்றதுஅவன்சேனையேயாம்.  நாயகம் - நடுநாயகமணிபோலச் சிறந்தவ
னென்றவாறுமாம்.

     ஓடை -யானையின் நெற்றிப்பட்டம்: முகபடாம், சூழியெனப்படும்.
முத்தம் - முத்துப்போன்ற நீர்த்துளிக்கு உவமவாகுபெயர்.       (6)