ரோடுசேர்ந்தும் பொரேன்' என்று சொல்லித் தனது வில்லை இரண்டு துண்டாக முறித்துப் போகட்டுவிட்டுப் பாரதயுத்தம் நடக்கையில் அங்கு இராமல் பலராமனுடன் தீர்த்தயாத்திரை சென்றிட்டனனென்க. மேதக எதிர்கொள்ளுதல் - மிக்கமரியாதையுடன் விசேஷ உபசாரங்களைச் செய்து எதிர்கொள்ளுதல். (147) 148.-கண்ணனும் மற்றையோரும்அவர்கள் வரவைப் பாராட்டுதல். மதுரைநகர்க்கரசானமாயனுந்தம்முனைவணங்கி விதுரனையுமெய்தழுவவேல்வேந்தரனைவோரும் கதிரவரோரிருவரையுங்கண்டுகளிப்பவர்போல எதிரெதிர்போய்க்கைதொழுதாரிகலாண்மைக்கெதிரில்லார். |
(இ -ள்.) மதுரை நகர்க்கு அரசு ஆன - மதுராபுரிக்குத்தலைவனான, மாயவனும் - கண்ணபிரானும், தம் முனை வணங்கி - தனது தமையனான பலராமனை நமஸ்கரித்து, விதுரனையும் மெய் தழுவ - விதுரனை உடம்பை ஆலிங்கனஞ் செய்தருள, இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார் - பல பராக்கிரமங்களில் தமக்குச் சமமில்லாதவர்களாகிய, வேல் வேந்தர் அனைவோரும் - வேல்முதலிய ஆயுதங்களில் வல்ல அரசர்களெல்லோரும், கதிரவர் ஓர்இருவரையும்கண்டு களிப்பவர்போல - ஒளியையுடையவரான (சந்திரன் சூரியன் என்ற) இரண்டு பேரையும் பார்த்து மகிழ்பவர்போலப் பலராமனையும் விதுரனையுந் தரிசித்ததனால் மனமகிழ்ந்து, எதிர் எதிர் போய்கைதொழுதார் - (தாம்தாம்) எதிர்கொண்டு சென்று கைகூப்பி வணங்கினார்கள்; இங்கேமதுரை யென்றது, வடமதுரையை. அதில் அரசாண்டு நின்ற கம்சனைக் கொன்று கண்ணன் அந்நகர்க்குத் தலைமைபெற்றனனென அறிக. மது என்பவனால் ஏற்படுத்தப்பட்டதனாலும், அழகியதாயிருத்தலாலும், அந்நகர்க்கு, 'மதுரா' என்று பெயர்; அது மதுரையென ஈறுதிரிந்தது. விதுரன் - ஞானமுடையவ னென்று காரணப்பொருள்படும். தம்மினும் மேலோரை வணங்குதலும், கீழோரை ஆசீர்வதித்தலும், சமமானவரைத் தழுவியணைத்தலும், மரியாதை. (148) 149.-தீர்த்தயாத்திரைவரலாற்றை அவ்விருவருங் கூறுதல். அன்றுமுதலேகியநாளளவாகவிருவோரும் குன்றிடமுங்கடலிடமுங்குறித்தநதிகளினிடமுஞ் சென்றுசுரரும்படியுந்தீர்த்தங்கடிசைதோறும் ஒன்றுபடமகிழ்ந்தாடிமீண்டவாறுரைசெய்தார். |
(இ -ள்.) அன்று முதல் - (பிரயாணம் புறப்பட்டுச்சென்ற) அந்நாள் முதல், ஏகிய நாள் அளவு ஆக, மீண்டுவந்த இந்நாள் வரையிலும், திசைதோறும் - ஒவ்வொருதிக்கிலும், குன்று இடமும் - மலைகளினிடங்களிலும்,கடல் இடமும் - கடல்களினிடங்களிலும், குறித்தநதிகளின் இடமும் -(சிறந்தவையென்று) குறிக்கப்பட்ட நதிகளினிடங்களிலும், சென்று - போய்,சுரரும் படியும் தீர்த்தங்கள் - |