பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்115

152.-அதற்குக் கண்ணன் கூறும்விடை.

வீமனுக்கும் வீமனுடன்வெகுண்டமர்செய் வலம்புரிப்பூந்
தாமனுக்குமமர் புரியுந்தலமேதென்றுயாவுகின்றோம்
நீமனத்தினிகழ்ந்தபடிநிகழ்த்துகெனநிலவொளியாற்
சோமனுக்கு நிகரானோனிளவலை நீசொல்லென்றான்.

     (இ -ள்.) 'வீமனுக்கும்-, வீமனுடன் வெகுண்டு அமர் செய் -
வீமனோடுகோபித்துப் போர்செய்யும், வலம்புரிப்பூ தாமனுக்கும் -
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனனுக்கும், அமர் புரியும் -
போர்செய்யத்தக்க,தலம் - இடம், ஏது - எது? என்று - என்பதைக்குறித்து,
உயாவுகின்றோம் -ஆராய்ச்சிசெய்கிறோம்; நீமனத்தில் நிகழ்ந்தபடி
நிகழ்த்துக  - (அதைக்குறித்து)உன்மனத்திலுள்ள கருத்தை நீ கூறுவாய்,'
என - என்று (கண்ணன் பலராமனைநோக்கிக்) கூற, - நிலவு ஒளியால்
சோமனுக்கு நிகர் ஆனோன் - விளங்குகிற(தனது வெண்ணிறமான)
தேககாந்தியால் சந்திரனுக்கு ஒப்பான பலராமன்,இளவலை - (தனது)
திருத்தம்பியான கண்ணபிரானை நோக்கி, நீ சொல்என்றான் - நீயே
(உன்கருத்தின்படி) கூறுவாயென்றான்; (எ - று.)

    பலராமன் வெண்ணிறமுடையனாதலால், 'நிலவொளியாற் சோமனுக்கு
நிகரானோன்' என்றார்; அவன் வெள்ளைநிறமுடைமை பிரசித்தம். 
உயாவுதல்=உசாவுதல்.                                     (152)

153.-இதுவும், அடுத்தகவியும்-குளகம்; கண்ணன்
போர்க்களங்குறித்தல்.

தாவெழுமா மணிநெடுந்தேர்த்தபனனிகர் மழுப்படையோன்
மூவெழுகான் முடிவேந்தரனைவரையு முடிப்பித்து
நாவெழு பான்மையினுடையோன்களிக்க நரமேதஞ்செய்
பூவெழுதீவினுஞ்சிறந்துபொன்னுலகோ டொத்துளதால்.

     (இ -ள்.) தாவு - தாவிச்செல்லுகிற, எழு மா - ஏழுகுதிரை பூண்ட,
மணிநெடு தேர் - அழகிய பெரிய தேரையுடைய, தபனன் - சூரியனை,
நிகர் -ஒத்து விளங்குகிற, மழு படையோன் - கோடாலியை
ஆயுதமாகவுடையபரசுராமன், மூ எழு கால் - இருபத்தொருதலை முறை,
முடி வேந்தர்அனைவரையும் - கிரீடாதிபதிகளான அரசர்களெல்லாரையும்,
முடிப்பித்து -அழியச்செய்து, நாஎழு பான்மையின் உடையோன் களிக்க -
நாக்கைஏழுபகுதியாகவுடைய அக்கினி தேவன்மகிழும்படி, நரமேதம்செய்-
நரமேதம்பண்ணின, பூ - இடம், எழு தீவினும் சிறந்து - ஏழுதீவுகளுள்ளுஞ்
சிறப்புற்று, பொன் உலகோடு ஒத்து உளது - சுவர்க்கலோகத்தோடு
ஒத்துள்ளது;

    சந்திரவமிசத்துப்பிறந்த அரசனும் பலபராக்கிரமங்களிற்சிறந்தவனும்
ஆயிரந்தோள்களுடையவனும் இராவணனைஒருகால்வென்றிட்டவனுமான
கார்த்தவீரியார்ச்சுனன் ஜமதக்நிமுனிவனது ஓமதேனுவைக் கவர்ந்தது
காரணமாக அம்முனிவனது குமாரனான பரசுராமன்