பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்127

171.மலரடிதாளூருவட்டமார்தனம்வயிறுமனோகரபற்பமார்
                                    பொடு,
குலகிரிநேர்தோள்கழுத்துநீடணல் குறுநகைகூர்
                        வாய்கதுப்புவார்குழை,
இலகுபுரூர்பாகநெற்றியானன மெனவடைவேகூறுறுப்
                                பியாவையும்,
உலைவுறமேன்மேன்மிகுத்தமூளையுமுதிரமுமாறாது
                               குக்கமோதியே.

     (இ -ள்.) மலர் அடி - தாமரைமலர்போன்ற பாதங்களும், தாள் -
கால்களும், ஊரு - துடைகளும், வட்டம்ஆர்தனம் - வட்டவடிவாயமைந்த
தனப்பிரதேசமும், வயிறு-வயிறும், மனோகர பற்பம் - அழகியதாகவுள்ள
நாபீகலமமும், மார்பொடு - மார்பும், குல கிரி நேர் தோள் -
குலபருவதங்களையொத்த புயங்களும், கழுத்து - கழுத்தும், நீடு அணல் -
நீண்டகீழ்வாயும், குறுநகை கூர் வாய் - புன்சிரிப்பு மிக்க வாயும், கதுப்பு -
கன்னமும், வார்குழை -தொங்குகிற குண்டலத்தையடைய காதுகளும்,
இலகுபுரூர் பாகம் விளங்குகிறபுருவமும், நெற்றி - நெற்றியும், ஆனனம் -
முகமும், என - என்று, அடைவேகூறு - முறையே சொல்லப்பட்ட, உறுப்பு
யாவையும் - உறுப்புக்களெல்லாம்,உலைவு உற - சிதைவடையவும், மேல்
மேல் மிகுத்தமூளையும் - மேலும்மேலும் அதிகப்பட்டமூளைநிணமும்,
உதிரமும் - இரத்தமும், மாறாது உகுக்க -இடையறாது சிந்தவும், மோதி -
(கதாயுதத்தால்) தாக்கி;

    'இருவரும் போர்செய்தார்கள்' எனச் சொல் வருவித்த முடிக்க.
மனோகரம் - (அழகினால்) காண்பவரின் மனத்தைக் கவர்வது, பற்பம் -
தாமரைமலர்.  குலகிரி - சிறந்தமலைகள்; அவை - இமயம், மந்தரம்,
நிஷதம்,விந்தியம், ஹேமகூடம், கைலை, நீலம், கந்தமாதநம் என்பன. 
வார்குழை -அடையடுத்த தானியாகுபெயராகவாவது,
வினைத்தொகையன்மொழியாகவாவதுகாதைக்குறிக்கும்.  மூன்றாமடியில்
'இலகுபுரூர நனெற்றி' என்று சில பிரதியிற்காணப்படுகிறது.      (171)

172.கதைகதையோடேயடிக்குமோதைகொல் கதையுடையோர்
                        நகைக்கு மோதைகொல்,
எதிர்மொழியோவாதிசைக்கு மோதைகொலிணை
                  யுடலூடேயிடிக்கு மோதைகொல்,
பதயுகமாறாடிவைக்குமோதைகொல்பணைபலசூழ்
                     போதவெற்றுமோதைகொல்,
திதியொடுவானூடுசெற்றும்வானவர்செவிசெவிடாமாறதிர்க்கு
                                 மோதையே.

     (இ -ள்.) திதியொடு - நிலையாக, வானூடு - மேலுலகில், செற்றும் -
நிறைந்துள்ள, வானவர்-தேவர்களுடைய, செவி - காதுகள், செவிடு ஆம்
ஆறு- செவிடுபடும்படி, அதிர்க்கும் - ஆரவாரிக்கிற, ஓதை - ஓசை,-கதை
கதையோடே அடிக்கும் ஓதைகொல் - ஒருகதை மற்றொரு கதையோடு
தாக்குதலா லாகும் ஓசையோ, கதை உடையோர் தாம் நகைக்கும்
ஓதைகொல் -கதையையுடையவராகிய  இருவீரரும் சிரித்தலாலாகும்
ஓசையோ? ஓவாதுஎதிர்மொழி இசைக்கும் ஓதைகொல் - இடைவிடாமல்
(ஒருவர்க்கொருவர்)எதிரிலே வீரவாதமான வார்த்தைகளைக் கூறுதலாலாகும்
ஓசையோ? இணைஉடலூடே இடிக்கும் ஓதைகொல் - இரண்டு
உடம்புகளிலும் தாக்குதலினாலாகியஓசையோ? பத யுகம் மாறாடி வைக்கும்
ஓதைகொல் - இரண்டு கால்