பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்131

இதுமுதல் மூன்று கவிகள் - குளகம்.

     (இ -ள்.) உரிய கதாபாணியர்க்குள் - (போருக்கு) உரிய கதாயுதத்தை
யேந்திய கையையுடைய வீரர்களுள், ஓத - எடுத்துச்சொல்லுதற்கு, ஓர்
உவமைஇலாதான் - ஓர்ஒப்புமையில்லாதவனான வீமன், அடித்த போது -
(கதைகொண்டு) தாக்கியபொழுது, உயர்சிரம்-உயர்ந்த தலை, முடியூடே
பிளக்க- உச்சியிலே பிளவுபட, நால் இரு திசையினும் - எட்டுத்
திக்குக்களிலும், வார்சோரி - மிக்க இரத்தம்.  கக்கி வீழ்தர -
வெளிப்பட்டுவழிய, இருநிலம்மீதேபதைத்து வீழ்தலும் - பெரிய தரையிலே
(துரியோதனன்) துடித்துவிழுந்தவளவிலே, வீமன்-, இரிதர மோதாமல்
விட்டு -அழியும்படி (அச்சமயத்துத்)தாக்காம லொழிந்து, நீ இனி விரைவுடன்
ஆறு ஆறு என - 'நீ இப்பொழுதுவிரைவாக இளைப்பாறு இளைப்பாறு'
என்று பலமுறைகூறி, தன் ஆண்மையைவிருதர்முன் மேல்மேல்விளக்க -
தனது பராக்கிரமத்தை வீரர்கள்முன்னிலையிலே மிகுதியாக விளங்கச் செய்ய,
(எ - று.) - 'வருகளையாறா'என வருங் கவியோடு தொடரும்.

    துரியோதனன் இளைப்புற்ற நிலையில் வீமன் அவனைத் தாக்கிக்
கொன்றிடாமற் போரைநிறுத்தி 'நீ விரைவில் இளைப்பாறு' என்று கூறினது.
தழிஞ்சி யென்னும் புறப்பொருள் துறையின்பாற்படும்;  அது, சாய்ந்தவர்மேற்
செல்லாமல் தழுவுவது; இது, வஞ்சியென்னும் புறப்பொருள் திணைக்குஉரிய
துறைகளில் ஒன்று: இராவணன் முதல்நாட்போரில் தன்சேனை முழுதும்
அழியப் படைக்கலமும்ஒழிந்து நின்ற நிலைமையை நோக்கி இராமபிரான்
'இன்றுபோய் நாளை நின் சேனையோடு போர்க்கு வா' என்று கூறிவிட்டதும்
இது.  இளைத்து விழுந்த சமயத்தில் மேலும் அடிக்காமல் இப்படி
கூறியதனால்வீமனது போர்த்திறமை நன்குவிளங்குதல்பற்றி, 'எனத்தன்
ஆண்மையைவிருதர்முன் மேன்மேல் விளக்க வீமன்' என்றார்.  வீமன்
ஒப்பில்லாதவனெனவே, உயர்வில்லாதவ னென்பது தானே பெறப்படும்.
இரிதர, தா - துணைவினை.                              (176)

177.-துரியோதனன் சிறிதுதெளிந்து வீமனைத் தாக்கல்.

வருகளையாறாவுயிர்ப்புறாவிழிமலர்திறவாநாவறட்சிபோயுகு
குருதியுகாமேதுடைத்துவீழ்தருகுருகுலபூபாலனுக்ரவேகமொடு
உருமெறிமாமேகமொத்தகாயமுமுதறிமனோவீரமுற்றுமீளவும்
அருகொருபான்மேவிநிற்கும்வீமனையடுகதையாலோடிமுட்டி
                                        மோதவே.

     (இ -ள்.) வீழ்தரு - (வீமன்கதையால் அடிபட்டுக்) கீழேவிழுந்த,
குருகுலபூபாலன் - குருகுலத்து அரசனாகிய துரியோதனன், வருகளை
ஆறா -உண்டாகிய மூர்ச்சை தணிந்து, உயிர்ப்பு உறா - மூச்சு
விடுதலையடைந்து, விழிமலர் திறவா - தாமரைமலர்போன்ற கண்களைத்
திறந்து, நா வறட்சி போய் -நாக்கு வறண்டுபோகுந்தன்மை நீங்கி [நாவில்
நீர்சுரக்கப்பெற்று], உகு குருதிஉகாமே துடைத்து - பெருகுகிற இரத்தத்தை
வழியாதபடி துடைத்துக்கொண்டு,உக்ரவேகமொடு - கொடிய வேகத்துடனே,
உரும் எறி மா மேகம் ஒத்தகாயமும் உதறி - இடியிடிக்கிற கரிய
காளமேகத்தை யொத்த தனது