பக்கம் எண் :

134பாரதம்சல்லிய பருவம்

     (இ -ள்.) தார் வலம்புரியானொடு - நஞ்சாவட்டைப்
பூமாலையையுடையதுரியோதனனோடு செய்கிற, போர் - யுத்தத்தில், வீமன் -
வீமசேனன், அழி -வலிமைகுறைகிற, தாழ்வை - சிறுமையை, கண்டனன் -
பார்த்து, வானவர் ஊர்புரந்தவன் - தேவர்களுடைய உலகத்தைப்
பாதுகாத்தவனான அருச்சுனன்,வாசி கொள் தேர் விடும் திருமால் அடி நீள்
முடி சேர நின்று - குதிரைகள்பூண்ட தனது தேரைச் செலுத்தும் சாரதியான
கண்ணபிரானது திருவடிகளிலேநீண்ட (தனது) கிரீடம் படும்படி
(சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து) நின்று, உரைஆடினன் - பேசுபவனாய்,
'மாருதி நேர் தளர்ந்தனன் - வாயுகுமாரனானவீமன் துரியோதனனெதிரில்
நிற்கத் தளர்ந்தான்; செயல் யாதுகொலோ(இப்பொழுது) செய்தற்கு உரியது
யாதோ? நீ மொழிந்தருள்வாய்-நீகூறியருளுவாய், 'என-என்று, ஓத-சொல்ல,-
முராரியும் - கண்ணனும்,பரிவோடு - அன்புடன், அவனோடு -
அவ்வருச்சுனனோடு, இவை -இந்தவார்த்தைகளை, ஓதினன் - சொன்னான்;

    தார்வலம்புரியான் - வலம்புரித்தாரான் எனச் சொல்மாறுக.  வீமனை
யழிதாழ்வுகண்டனன் - வீமன் அழிதாழ்வைக் கண்டனன் என உருபு
பிரித்துக்கூட்டப்பட்டது.  அக்கினிபகவானால் அருச்சுனனுக்குக்
காண்டவதகனகாலத்திற்கொடுக்கப்பட்ட சிறந்த தேர் அந்தத் தேவனாற்
கொடுக்கப்பட்டதெய்வத்தன்மையுள்ள நான்கு வெள்ளைக் குதிரைகள்
பூண்டமேன்மையுடையதாதலின், 'வாசிகொள்தேர்' எனப்பட்டது. 
வினாவடியாப்பிறந்த'யாது' என்னுங் குறிப்பு முற்றின்மேல், கொல் ஓ
அசைகள்.  இந்திரன் முதலியதேவர்களால் வெல்லமுடியாத நிவாதகவசர்
காலகேயரென்னும் அசுரர்களைஅருச்சுனன் பொருது அழித்துத்
தேவர்களைச் சுவர்க்கத்தில் இடையூறின்றிஇனிதுவாழ வைத்தன னாதலாலும்,
அப்பொழுது அருச்சுனன் தேவலோகத்திற்சென்று இந்திரனால்
அருத்தாசனங்கொடுக்கப்பட்டு அதில் வீற்றிருந்துதேவலோகத்து இளவரசுமுடி
சூட்டப்பெற்றவ னாதலாலும், 'வானவரூர்புரந்தவன்' எனப்பட்டான். முராரி
யென்ற திருநாமம் - முர + அரிஎனப்பிரிந்து, முரனென்னும் அசுரனுக்குப்
பகைவனென்று பொருள் படும்:இவ்வசுரன், நரகாசுரனுக்கு மந்திரி;
இவனைக்கண்ணபிரான் கொன்றதும்அவனைக் கொன்ற காலத்திலேயாம்:
வரலாறு, 151 - ஆங்கவியிற் கூறப்பட்டது.                     (180)  

181.-துரியோதனனைக்கொல்லும் வகையைக் கண்ணன்
கூறல்.

நீநயந்தனைகேளுறுபோரிடைநேர்மலைந்திடுவோரிருவோரினும்
ஆநிலன்பலவானதிலேமுகுரானனன்றருசேய்வினையாதிகன்
நானியம்பறகாதிவராயிரநாண்மலைந்தனராயினும்வீவொடு
வானகம்புகுதாரிருவோர்களும்வாசவன்றருபூணணிமார்பனே.

இதுவும், அடுத்த கவியும் - ஒருதொடர்.

     (இ -ள்.) வாசவன் தரு - இந்திரன் கொடுத்த, பூண் - ஆரமாகிய
ஆபரணத்தை, அணி - அணிந்த, மார்பனே - மார்பையுடை