பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்137

காணும்படிதனது தொடையிற் கைவைத்துநின்றன னென்பதாம்.
கண்ணன்கூறிய உபாயத்தை அருச்சுனன் இங்கிதத்தால் வீமனுக்குப்
புலப்படுத்தின னென்க.  கொடியதுஷ்டனான துரியோதனனது நாசம்
பூமிபாரந்தீர நிவிருத்தியாதற்கும், பாண்டவரது வாழ்க்கைக்கும்
காரணமாதலால்,'புவிபாரமும்ஏதமுங்கெட ஏதமில்ஐவரும்
வாழத்திருவாய்மலர்ந்த சொல்'எனப்பட்டது.  ஊழினும் என்ற உம்மை -
உயர்வுசிறப்பு: அது "ஊழிற்பெருவலியாவுள மற்றொன்று,
சூழினுந்தான்முந்துறும்" என்றபடிஊழ்வினைக்குள்ள தவறாத உறுதிநிலையை
விளக்கும்.  'ஊழினும் புரிதாள்வலிதே' என்பதை "ஊழையு முப்பக்கங்
காண்ப ருலைவின்றித்,தாழாதுஞற்றுபவர்" என்ற திருக்குறளினாலும் அறிக;
'ஊழ் ஒருகாலாகஇருகாலாக அல்லது விலக்கலாகாமையின், பலகால்
முயல்வார் பயனெய்துவர்;தெய்வத்தான் இடுக்கண்வரினும் முயற்சி
விடற்பாலதன்று' என்ற அதன்உரைவாக்கியங்கள் உணரற்பால.

    ஏழ்கடல் - உவர்நீர், கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர்
என்னும் இவற்றின் மயமானவை.  நாரணன் - நாராயணனென்பதன் விகாரம்:
'ஆர்' என்ற பலர்பால்விகுதி, உயர்வுப்பொருளில் வந்தது.  கூறியென்ற
பொருளில், 'திருவாய்மலர்ந்து' என்பது, உபசாரம்.  பின்னிரண்டடிகளுக்கு -
ஊழ்வினையினும் முயற்சியே வலிமையுடையது என்று வாயாற் சொல்லிக்
கையால் தொடையைத் தட்டினான் என்று உரைப்பாருமுளர்; ஊழினும்
புரிதாள்வலிதே' என்றது, முயற்சியைக் கைவிடாது மேன்மேலும் போர்செய்
என்றுவீமனுக்கு உறுதி கூறியவாறு.                            (183)

184.-அதனையறிந்து வீமன்துரியோதனன் தொடையில்
தாக்கல்.

ஞானபண்டிதன்வாயுகுமாரனுநாரணன்பணியாலிளையோன்மொழி
மோனவண்குறிதானுணராவெதிர்மோதினன்கதைபூபதியூருவின்
மானகஞ்சுகனாறடியேழடிமாறிநின்றிடவேபிழைபோதலின்
மேன்முழங்கினவானவர்தூரியமேல்விழுந்ததுபூமழைசாலவே.

     (இ -ள்.) ஞான பண்டிதன் - அறிவுவல்லவனான வாயு குமாரனும் -
வாயுவின் மகனானவீமனும், நாரணன் பணியால் இளையோன் மொழி மோனம்
வண்குறி தான் உணரா - கண்ணபிரானது வார்த்தையினால் தனது தம்பியான
அருச்சுனன் தெரிவித்த மௌனமான நல்லகுறிப்பைத் தான் அறிந்துகொண்டு,
பூபதி ஊருவின் - துரியோதனராசனது தொடையிலே, கதை -
தனதுகதாயுதத்தால், எதிர் மோதினன் - எதிர்த்துத்தாக்கினான்; (தாக்கவே),
மான கஞ்சுகன் - மானத்தையேகவசமாகக்கொண்ட துரியோதனன், ஆறு
அடிஏழு அடி மாறி நின்றிட - ஆறு அல்லது ஏழடிதூரம் கால்கள்
நிலைபெயர்ந்துபின்னிட்டு நிற்க, பிழை போதலின் - (உறுதிநிலை)
தப்பிப்போனதனால்,வானவர் தூரியம் - தேவதுந்துபிவாத்தியங்கள், மேல்
முழங்கின - வானத்தில்மிக ஒலித்தன; பூமழை -