பக்கம் எண் :

14பாரதம்சல்லிய பருவம்

சர்க்கு 'ஸாமந்தர்'என்று பெயர்; வடசொல்.  மண்டலீகர் - நாற்பது கிராமம்
ஆள்பவர். [ஒருகோடிகிராமம் ஆள்பவன் மகுடவர்த்தனனென்றும்,
மகுடவர்த்தனர் நாலாயிரவரை வணக்கியாள்பவன் மண்டலீக னென்றும்,
மூன்றுலக்ஷமளவுங் கப்பங்கட்டுபவர் சாமந்தரென்றும் கூறுவர் ஒருசாரார்.](9)

10.-இனிப் பாண்டவர்செய்திகூறத்தொடங்குதல்: கவிக்கூற்று.

ஒருவருமெனக்கு நிகரில்லை யெனுமத்திரன் புத்திரனை
                                      யுரகதுவசன்,
பொருபடைமுனைக்குரிய சேனாபதிப்பெயர் புனைந்தமை
                                   புகன்றனமினிக்,
குருகுலம்விளங்கவரு குந்திமைந்தர்க ளிரவிகுமரனைக்
                                  கொன்றவிரவிற்,
பருவரன்மிகுந்துளமினைந்ததும் பாசறைமுனைந்ததும்
                                 வியந்துபகர்வாம்.

     (இ -ள்.) ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் - ஒருவரும் எனக்கு
(உலகத்தில்) ஒப்பில்லை யென்று செருக்குக்கொண்ட, மத்திரன் புத்திரனை -
மத்திரராசனது குமாரனான சல்லியனை, உரகதுவசன் - பாம்பின்
வடிவமெழுதிய கொடியையுடைய துரியோதனன், பொரு படைமுனைக்கு உரிய
சேனாபதி பெயர் புனைந்தமை - தாக்கிச்செய்யும் போர்த்தொழிற்குஉரிய
சேனைத்தலைவனென்ற பெயரைச் சூடினமையை, புகன்றனம் - கீழ்க்
கூறினோம்; இனி - இனிமேல்,- குரு குலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள்-
குருவென்னும் அரசனது குலம் பிரசித்தியடையும்படி (அதில்) தோன்றிய
குந்தியின் புத்திரராகிய பாண்டவர்கள், இரவி குமரனைக் கொன்ற இரவில் -
சூரியன்மகனான கர்ணனைக் கொன்ற (பதினேழாம்போர்நாளின்) இரவிலே,
பருவரல் மிகுந்து உளம் இனைந்ததும் - துன்பம்மிக்கு மனம் வருந்தியதையும்,
பாசறை முனைந்ததும் - (தமது) படைவீட்டில் யுத்தாலோசனை செய்ததையும்,
வியந்து பகர்வாம் - கொண்டாடிக் கூறுவோம்;  (எ - று.)- இனிப் பகர்வாம்
என இயையும்.  பாசறை புகுந்ததும் என்றும் பாடம்.

     மாதுலனென்றசொல்வடமொழியில், தனக்கு ஒப்பில்லாதவனென்றும்
ஒருபொருள்படுதலால் அத்தன்மையைக்கருதி, 'ஒருவருமெனக்கு
நிகரில்லையெனு மத்திரன் புத்திரன்' என்றனரென்க; என்றது, மாதுலனான
சல்லியனென்றவாறு.  மத்திரனென்றது, சல்லியன் தந்தையை.       (10)

வேறு.

11.-கர்ணன் இறந்ததற்குப்பாண்டவர் புலம்பல்.

செவ்விரவிதிருமகனைச் செகம்புரக்குங் காவலனை யிரவலோருக்கு
எவ்விரவும்விடிவிக்கு மிருகரத்து வள்ளலையின் றிழந்தோ மென்று
விவ்விரவு நறுமலர்த்தார்த் தருமன்முத லைவருந்தம் விழிநீர் சோர
அவ்விரவிலிமைப்பொழுதுந் தரியாம லழுதரற்றி யலமந் தாரே.