பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்141

பராக்கிரமத்தின், நீர்மையினை - தன்மையை, அவித்தை ஆயரும் -
அறிவில்லாத இடையர்களும், அளப்பரோ - அறியமாட்டுவர்களோ?
[அறியமாட்டார்க ளென்றபடி] (எ - று.)

     நீக்ஷத்திரியசாதியிற் பிறந்தவனாயினும் அச்சாதியாரிடத்தில்
வளராமல்இழிவான இடையர்கள் குழாத்தில் வளர்ந்தவனாதலால்,
தருமயுத்தஞ் செய்யும்முறைமையின் பெருமையைச் சிறிதும் அறியாய். 
ஆனதுபற்றி, யானும் வீமனும்எதிர்த்துச் சமமாகத் தொந்தயுத்தஞ்
செய்கையில் இங்ஙனம் வஞ்சனையாகஅருச்சுனனைக்கொண்டு, வீமனுக்கு
எனது உயிர்நிலையைப் புலப்படுத்திஎன்னை யழித்தாயென்று இகழ்ந்தான். 
உயர்ந்த சந்திரகுலத்தில்வசுதேவகுமாரனாய்த் தேவகிவயிற்றிற்
பிறந்திருந்தும் தாழ்ந்தஇடையர்குலத்தில் யசோதைமகனாய்
நந்தகோபன்மனையில் வளர்ந்ததுமாத்திரத்தைக்கொண்டு கண்ணனைத்
துரியோதனன் இடையனென இகழ்ந்தான். வடமதுரையில் வசுதேவனும்
தேவகியும் கம்சனாற்சிறையிலிருத்தப்பட்டுத்தளைபூண்டிருக்கையில், திருமால்
தேவகியினிடம்  எட்டாவது கருப்பத்தில்கண்ணணாய் அவதரிக்க,
அக்குழந்தையைக் கம்சன் முன்னையகோட்பாட்டின்படி கொன்றுவிடுவனே
யென்கிற அச்சத்தால் தாய் தந்தையர்அத்தெய்வக்குழவியின் அனுமதி
பெற்று அந்தச்சிசுவை அது பிறந்தநடுராத்திரியிலேயே கோகுலத்திலே
நந்தகோபனது கிருகத்திலேஇரகசியமாகக்கொண்டு சேர்த்துவிட்டு அங்கு
அப்பொழுது யசோதைக்குமாயையின் அம்சமாய்ப் பிறந்திருந்ததொரு
பெண்குழந்தையையெடுத்துக்கொண்டு வந்துவிட, அது முதல் கம்சனைக்
கொல்லுகிறவரையில்இளம்பருவத்திலெல்லாம் கண்ணபிரான்
அவ்வாய்ப்பாடியிலேயே பலவகைத்திருவிளையாடல்கள் புரிந்து வளர்ந்தன
னென்பது வரலாறு.

     ஆயர்- பசுக்களையுடையவரென இடையர்க்குக் காரணப்பெயர்;
ஆ -பகுதி, அர் - விகுதி, ய் - எழுத்துப்பேறு.  துரியோதனனுக்கு நீலகிரி
-நிறத்திலும் பருமை வலிமைகளிலும் உவமம்.  கொளுத்துதல் -
கொள்ளச்செய்தல்;  இங்கே, கொளுத்து - கொள் என்பதன் பிறவினை,
இதில்,உ - சாரியை, து - பிறவினைவிகுதி; தீப்பற்றவைத்தலென்ற
பொருளில்,கொளுந்து என்ற தன்வினைப்பகுதி மெல்லொற்று
வல்லொற்றாகிய பிறவினை.'அற்பராயரறிகிற்பரோ' என்றும் பாடம்.   (188)

189.மலைத்தபோர்தொறுமெனக்குநீசெய்பிழைமற்றுளோர்
                             செயநினைப்பரோ,
குலத்திலேயிழிகுலத்தரானவர் குறிப்பிலாதிவைபிறக்குமோ,
சலத்தினால்வினையியற்றுவார் முடிதரித்த
                           காவலரொடொப்பரோ,
நிலத்தில் வாழ்வவர்பெறக்கொடாயினி
                        நினைத்தகாரியமுடித்தியே.

     (இ -ள்.) மலைத்த போர் தொறும் - எதிர்த்துச்செய்த யுத்தந்தோறும்,
எனக்கு நீ செய் பிழை - எனக்கு நீ செய்த துரோகங்களை, மற்று உளோர்-
பிறர், செய நினைப்பரோ - செய்யக்கருதுவார்களோ [கருதார் என்றபடி];
குலத்திலே இழி குலத்தர் ஆனவர் குறிப்பு