பக்கம் எண் :

142பாரதம்சல்லிய பருவம்

இலாது-குலங்களுள் இழிகுலத்திற்பிறந்தவர்களது இங்கிதக்குறிப்பு இல்லாமல்,
இவை பிறக்குமோ - இப்படிப்பட்ட அக்கிரமச்செய்கைகள் உண்டாகுமோ?
[உண்டாகா என்றபடி]; சலத்தினால் வினை இயற்றுவார்-வஞ்சனையாகத்
தொழில் செய்பவர்கள், முடி தரித்த காவலரொடு ஒப்பரோ-கிரீடந்தரித்து
அரசாளும் சிறந்த அரசர்களுக்குச்சமானமாவர்களோ? [ஆகார் என்றபடி];
இனி - (இங்ஙனம் நீ பற்பல துரோகங்கள் செய்த) பின்பு, நிலத்தில் வாழ்வு
அவர் பெற கொடாய் - இந்த நிலவுலகத்தில் அரசுபெற்றுவாழும்
வாழ்க்கையைஅந்தப் பாண்டவர்கள் பெறும்படி கொடுத்திடு; நினைத்த
காரியம் முடித்தி - நீஎண்ணிய காரியங்களை முடித்துக்கொள்; (எ - று.)

     முதல்மூன்றடிகளிற் கூறியது நிந்தைவார்த்தையும், நான்காமடியிற்
கூறியதுநிட்டூரவார்த்தையுமாம்.  இப்படி பிழைசெய்தாலொழிய என்னைக்
கொன்றுபாண்டவர்க்கு வாழ்வைக்கொடுக்கவும், நீ எண்ணிய காரியத்தை
முடிக்கவும்ஆகாதென்னுங் கருத்துத்தோன்ற, 'நிலத்தில் வாழ்வு அவர்
பெறக்கொடாய்,இனி நினைத்த காரியம் முடித்தி' என்றான்.
'நினைத்தகாரியம்' என்றது,துரியோதனாதியர் நூற்றுவரையும்
பற்றறத்தொலைத்தல்:  பூமிபாரநிவிருத்தியுமாம்.

    போர்தோறும் கண்ணன் துரியோனனுக்குச் செய்த பிழையாவன:-
போர்த்தொடக்கத்தில் துரியோதனனுக்குப் போர்ப்பலியாதற்கு
உடன்பட்டிருந்தஇராவானைப் பாண்டவர்க்குப் போர்ப்பலியாகுமாறு
செய்தமை, துரியோதனன்போர்ப்பலிசெலுத்துதற்கு நாட்கொண்டிருந்த
அமாவாசையை முந்தினநாளிலேயே வருவித்து அதிற் பாண்டவர்
போர்ப்பலிசெலுத்தச்செய்தமை,மூன்றாம்போரில் எதிர்ப்பவரில்லையாம்படி
கடும்போர்செய்த வீடுமனையழித்தற்குச் சக்கரமேந்திக்கொண்டு சென்றமை,
பத்தாம்போரில் வீடுமன்முன்சிகண்டியைக்கொண்டு நிறுத்தி அவனெய்யும்
அம்புகளுடன் அருச்சுனனையும் அம்புசெலுத்தச்சொல்லி அவற்றால்
வீடுமனைச் சிதைத்தமை,பன்னிரண்டாம்போரில் பகதத்தன் அருச்சுனன்மேல்
எறிந்த தனதுவேற்படையைத் தான் முன்னின்று மார்பிலேந்திப்
பயன்படாதாக்கினமை,பதின்மூன்றாம் போர்நாளிரவில் மறுநாட்
செய்யவேண்டும் சைந்தவவதத்திற்காகஅருச்சுனனைக் கயிலைக்கு
அழைத்துக்கொண்டுபோய்அவனுக்குச்சிவபிரானைக்கொண்டு சிறந்த பல
ஆயுதங்களைக்கொடுப்பித்தமை, பதினான்காம்போரில் சுதாயுஅருச்சுனன்
மேலெறிந்த வரம்பெற்றகதாயுதத்தை நிராயுதனாகியதான் மார்பிலேற்று
அதனால் அவனைக்கொல்வித்தமை, அருச்சுனனுக்கு ஒருமந்திரமுபதேசித்து
அதன் பலத்தால்அவன் ஆயிரவாகுவைக் கொல்லச்செய்தமை, அருச்சுனன்
போர்செய்தற்குச்சோரும் சமயத்தில் தான் பாஞ்சசன்னியமென்னுஞ்
சங்கத்தை வாயில்வைத்துஊதி அதன்பெருமுழக்கத்தாற் சேனையை
மூர்ச்சிக்கச்செய்தமை,சூரியாஸ்தமனத்துக்கு முந்தியே சூரியனைச்சக்கரத்தால்
மறைத்து அப்பொழுதுவெளிப்பட்ட சயீத்திரதனையும் அவன் தந்தையையும்
ஒருங்கேஅருச்சுனனைக்கொண்டு கொல்வித்தமை, பதினைந்தாம்போரில்
அசுவத்தாமாஇறந்ததாகத் தருமனைக்