பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்143

கொண்டுகற்பனை வார்த்தை கூறுவித்து அதுகேட்டதனால் துரோணன்
படைக்கலமொழிந்து அழியச் செய்தமை, தந்தையிறந்ததனால் அசுவத்தாமன்
கோபங்கொண்டு தவறாத நாராயணாஸ்திரத்தைப் பிரயோகித்தபொழுது
பாண்டவரைநிராயுதராய் வாகனமொழிந்து கீழ்நின்று வணங்கச்செய்து
அதனினின்றுங் காத்தமை, பதினேழாம்போரில் கர்ணன் நாகாஸ்திரம்
பிரயோகித்தபொழுது அருச்சுனனது தேரைப் பன்னிரண்டு அங்குலம்
நிலத்திலழுந்தும்படி அழுத்திஅதனால்அது அருச்சுன்ன் தலையாகிய
இலக்கைத் தவறி அவனது கிரீடத்தையிடறிய மாத்திரத்தோடு செல்லச்
செய்தமை முதலியன காண்க.

    இங்கே, 'இழிகுலம்' என்றது, இடைச்சாதியை.  சந்திரகுலத்தில்
நகுஷனதுகுமாரனான யயாதி சுக்கிரசாபத்தால் கிழத்தனமடைந்து தனது
மூத்தகுமாரனான யதுவையும் அடுத்த குமாரர்களான துர்வசு துர்க்கியு அநு
என்பவர்களையும் தனித்தனி 'உன் இளமையைக்கொடுத்து என்முதுமையைக்
கைக்கொள்' என்று வேண்டி, அவர்கள் அதற்கு உடன்படாதொழிந்தபின்
கடைசிக்குமாரனான பூருவை வேண்ட, அவன் அதற்கு இணங்கி
மூப்பைப்பெற்றுக்கொண்டு யௌவநத்தைக் கொடுத்ததனால், அரசன்
மகிழ்ந்துதன் கருத்துக்கு இசையாத யது முதலிய மூத்தமக்கள் நால்வர்க்கும்
முடிசூடிஅரசாளுஞ் சிறப்பு இல்லையாகச்செய்து சிற்றரசாக்கி இளைய
மகனானபூருவைச் சகல பூமண்டலத்துக்கும் அதிபதியாக நிறுத்தி
முடிசூட்டிப்பட்டாபிஷேகஞ் செய்து வைத்திட்டான்; அக்குமாரர்களுள்
மூத்தவனாய்த்தனக்குரிய அரசாட்சியைத் தந்தையின் சாபத்தால் இழந்த
யதுவின் குலத்திற் பிறந்தவன் கிருஷ்ணன்.  இளையவனாய்த்
தனக்குரியதல்லாத அரசாட்சியைத் தந்தையின் அனுக்கிரகத்தாற் பெற்ற
பூருவின் குலத்திற் பிறந்தவன், துரியோதனன்; ஆகவே, முடிதரித்தரசாளுஞ்
சிறப்புத் துரியோதனன் குலத்தார்க்கு உண்டு:  அச்சிறப்பு கண்ணன்
குலத்தார்க்கு இல்லை; இந்த உயர்வுதாழ்வுகளை உள்ளத்தில் கொண்டு,
'சலத்தினால் வினையியற்றுவார் முடிதரித்தகாவலரொ டொப்பரோ' என்றான்.

     நீசெய்தாற்போலப் பிறர்செய்யா ரென்பதேயன்றிச் செய்ய
நினைக்கவும்மாட்டாரென அந்தத் துரோககாரியங்களின் இழிவை
விளக்கினான்.  கொடாய்,முடித்தி - ஏவலொருமை முற்றுக்கள்.      (189)

190.-வீமன் துரியோதனனைஉதைக்கப் பலராமன் சீறுதல்.

எனச்சில்வாசகமிழற்றிமீளவுமெதிர்ப்பதாகியெழலுற்றபோது
அனற்சகாயன்முனளித்தகாளைதனடற்சரோருகபதத்தினால்
உனக்குவாழ்வினியெனக்கொலாமெனவுதைத்து
                           மௌலியையுடைக்கவே
சினத்தலாயுதனிறத்தவாள்விழிசிவக்கவாய்மைசிலசெப்புவான்.

     (இ -ள்.) என-என்று, சில் வாசகம் - சிலவார்த்தைகளை, மிழற்றி -
வாய்குழறச்சொல்லி, (துரியோதனன்), மீளவும் எதிர்ப்பது ஆகி எழல்
உற்றபோது - மறுபடியும் (வீமனைத்தான்) எதிர்த்துப்பொருவதாகக் கருதி
யெழுந்திருக்கத் தொடங்கிய பொழுது,- அனல் சகா