பக்கம் எண் :

146பாரதம்சல்லிய பருவம்

     (இ -ள்.) கதை எடுத்து - கதாயுதத்தையேந்தி, உடற்றும் - போர்
செய்கிற, ஆடவர்கள் - வீரர்கள், கடிதடத்தினுக்கு மேல் ஒழிய இடைக்கு
மேல் அடிப்பதேயல்லாமல், தொடையில் -, அதிர்வு உற துடிப்புண்டாம்படி,
புடைப்பரோ - அடிப்பார்களோ? [அடியார் என்றபடி]; (அன்றியும்), முடியில்-
தலையில், அடி பட - கால்படும்படி, துகைப்பரோ - உதைப்பார்களோ?
[உதையார்என்றபடி]; (அங்ஙனமன்றி இப்பொழுது தொடையிலடித்தும்
முடியில்உதைத்தும்), எதிரியை - தன்பகைவனான துரியோதனனை,
சலத்தினால் -மாறுபாடுகொண்ட வயிரத்தால், என் விழி எதிர் - எனது
கண்ணெதிரிலே,வழக்கு அழித்த - நீதியின்றி அழித்திட்ட, பாவனனை -
வாயுகுமாரனானவீமனை, முதுகு இட யானும் புடைப்பல் -
புறங்கொடுக்கும்படி நான்தாக்குவேன், என - என்று சொல்லி, (பலராமன்),
முசல கைத்தலத்தொடு -உலக்கையை ஆயுதமாக ஏந்திய கையுடன்,
ஓடினன் - (வீமன்மேல்) விரைந்துசென்றான்; (எ - று.)

    பலராமனுக்குக் கலப்பையேயன்றி உலக்கையும் உரிய
ஆயுதமெனவுணர்க.  ஆடவர் - ஆண்மையையுடையவர்.  அதிர்வுற -
நடுங்க.  அடி பட - ஊறுபட எனினுமாம்.  வழக்கழித்த - யுத்ததருமத்தை
அழியச்செய்த.  எதிரி - எதிர்த்தவன்; இ - கருத்தாப்பொருள் விகுதி.

    இச்செய்யுள் - முதற்சீரும் நான்காஞ்சீரும் கருவிளச்சீர்களும்,
இரண்டாஞ்சீருங் ஐந்தாஞ்சீரும் புளிமாச்சீர்களும், மூன்றாஞ்சீரும்
ஆறாஞ்சீரும்கூவிளங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
அறுசீராசிரியச்சந்தவிருத்தம்.-தனனனத் தனத்த தானனன தனனனத் தனத்த
தானனனஎன்பது, அதற்குச் சந்தக்குழிப்பு.                       (192)

வேறு.

193.-பலராமனுக்குக் கண்ணன்சமாதானங் கூறத்
 தொடங்கல்.

மதியிரவியோடுபோர்செயுமாறெனவலியதிறல்வீமன்மேலி
                                   வனோடலும்,
இதயமலர்தோறுமேவருநாயகனிவனை விரைவோடுபோய்
                                   விலகாவிரு,
பதுமநிகரானதாள்பணியாமிகு பரிவினொடுசீறுமாண்மை
                                    தகாதென,
அதிமதுரவாய்மையால் வெகுளாவகையடிகளிவைகேண்
                        மினோவெனவோதினான்.

     (இ -ள்.) மதி - சந்திரன், இரவியோடு - சூரியனுடனே, போர் செயும்
ஆறு என - போர் செய்யச்செல்லும்விதம்போல, இவன் - பலராமன்,
வலியதிறல்வீமன்மேல் - வலிய வெற்றியையுடைய வீமன் மீது, ஓடலும் -
(போர்செய்தற்கு) விரைந்து நடந்தவளவிலே,- இதயம்மலர் தோறும்
மேவருநாயகன் - (பிராணிகளுடைய) உள்ளத்தாமரைமலர்களிலெல்லாம்
பொருந்தியுள்ள தலைவனான கண்ணபிரான், விரைவோடு போய் -
துரிதமாகச்சென்று, இவனை விலகா - இந்தப்பலராமனைத் தடுத்து,
பதுமம்நிகர் ஆனஇரு தாள் பணியா -