தாமரைமலருக்கு ஒப்பான இரண்டு பாதங்களிலும் விழுந்து நமஸ்கரித்து, வெகுளா வகை - (அவன்) கோபங்கொள்ளாதபடி, அதிமதுரம் வாய்மையால்- மிகவும் இனிமையான வார்த்தைகளால், மிகு பரிவினொடு சீறும் ஆண்மை தகாது என - '(துரியோதனன் பக்கலுள்ள) மிக்க அன்போடு 'நீ கோபங் கொள்ளுந்திறம் தகுதியன்று' என்று சொல்லி, அடிகள் இவை கேண்மினோ என - பெரியோய்! இவற்றைக்கேளும்' என்றுங்கூறி, ஓதினான் - (சில) சொல்பவனானான்; (எ - று.) பலராமனது வெண்ணிறமும், அவனினும் வீமன் மிக்கவலிமை யுடையானென்பதும் தோன்ற, பலராமன் வீமனொடுபோர் தொடங்குதற்குச் சந்திரன் சூரியனோடு போர்தொடங்குதலை உவமைகூறினார்; இல்பொருளுவமை. இதயமலர் - ஹ்ருதயகமலம்; "மலர்மிசை யேகினான்" என்றபடி எல்லோருள்ளத்திலும் எம்பெருமான் குடிகொண்டிருப்பவ னென்க. விலகா = விலக்கா; பிறவினைப்பொருளில் வந்த தன்வினை. மிகுபரிவு - வரம்புகடந்த அன்பு. மிகுபரிவினோடு சீறும் என இயையும். மிகுபரிவினோடுஓதினான் என இயைத்துப் பாண்டவர்பக்கல் மிக்ககருணையுடனே கண்ணன்கூறினானெனினும் அமையும். பத்மம், அதிமதுரம் - வடசொற்கள். வாய்மை- உண்மையான சொல். அடிகள் - பாதா: என்னும் வடசொல்லின்மொழிபெயர்ப்பாய் நின்று பெரியோரைக் குறிக்கும். அடிகள் கேண்மின்என்றது, உயர்வுப்பன்மை.
இச்செய்யுள் - முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் கருவிளங்காய்ச்சீர்களும், இரண்டாஞ்சீரும் ஆறாஞ்சீரும் தேமாச்சீர்களும், மற்றைநான்கும் கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்டஎண்சீராசிரியச் சந்தவிருத்தம். தனனனன தான தானன தானன தனனனன தான தானன தானன - என்பது, இதற்குச் சந்தக்குழிப்பு. (193) வேறு. 194.-இதுவும், அடுத்த கவியும்- கண்ணன்கூறும் சமாதானவார்த்தைகள். முகுரா னனன்மைந் தனும்வீ மனுமேமுடியா தபெரும் பகையாளர்கள் காண், மகிபா லர்திருந் தவையூ டுரையாவழுவாதனவஞ்சினமோ திநனி, இகல்வார் சிலையின் குருவா னவர்தாமிடுசா பமுமுண்டு திரௌ பதியார், பகர்சா பமுமுண்டதனா லெதிரேபடுமே யிவன்வெங் கதையா லவனே. |
(இ -ள்.) முகுர ஆனனன் மைந்தனும் - கண்ணாடிபோலும் முகத்தையுடையவனான திருதராட்டிரனதுபுத்திரனாகிய துரியோதனும், வீமனும்-,(ஆகிய இருவரும்), முடியாத பெரு பகையாளர்கள் காண் - (ஒருவரோடொருவர்) முடிவில்லாத மிக்க பகையையுடையவர்களன்றோ? (அன்றியும்), மகிபாலர் திருந்து அவையூடு - அரசர்கள் அழகிதாகக்கூடியுள்ள சபையிலே, உரையா - சொல்லுதற்கு அரிய, வழுவாதன - தவறாதவையான, வஞ்சினம் - சபதவார்த்தைகளை, நனி - |