மிகுதியாக,ஓதி-(வீமன்) கூறியுள்ளதனால், இகல்வார் - (இவ்விரண்டு பேரும்) மாறுபட்டுப்பொருவார்கள்: (அன்றியும்), சிலையின் குரு ஆனவர்தாம் - வில்வித்தையில்தேர்ந்த ஆசிரியரான மைத்திரேயர், இடு - (துரியோதனனுக்கு) இட்ட, சாபமும்-, உண்டு - உள்ளது; (அதுவுமல்லாமல்), திரௌபதியார் பகர்சாபமும் உண்டு - திரௌபதிதேவி கூறியுள்ள சாபமும் உள்ளது; அதனால்- ஆதலால், இவன் வெம் கதையால் - இவ்வீமனது கொடிய கதாயுதத்தால்,அவன் - துரியோதனன், எதிரே படுமே - எதிரிலே இறந்தேதீர்வான்;(எ - று.) துரியோதனனும் வீமனும் இளமைதொடங்கி ஒருவர்க்கொருவர் தீராதவைரமுடையவ ரென்பது பிரசித்தமென்பதை முதலடி விளக்கும். காண் என்ற ஏவலொருமைமுற்று, இடைச்சொல் தன்மைப்பட்டுத் தேற்றப்பொருளை விளக்கும் குசீலவமுனிவரது குமாரரும் பராசரமுனிவரது மாணாக்கருமான மைத்திரேயமுனிவர் பாண்டவர்கள் காமியவனத்தில் வசித்தபொழுது அவர்களிடத்தினின்று வந்து துரியோதனனுக்கு இதோபதேசஞ்செய்ய, அவன்அதனைக் கேளாமல் அவரைப் பரிகசித்தனனாதலால், அவர் மிகவுங்கோபித்து'வீமனுடைய கதையினடியால் தொடை முறிந்து இறப்பாய்' என்றுசபித்துச்சென்றனரென்பது வரலாறு. துரோணர் கிருபர் பரசுராமர் என்பவர்போல இம்முனிவர் வில்வித்தையில் தேர்ந்தவ ரென்பது விளங்க, 'சிலையின்குரு' எனப்பட்டார். அன்றி, துரோணர் சபித்ததாகவும் கூறுவதுண்டு. ஆனவர் - முதல்வேற்றுமைச்சொல்லுருபு. இடுசாபம், பகர்சாபம் -இறந்தகால வினைத்தொகைகள். இச்செய்யுள் - எல்லாச்சீர்களும் புளிமாச்சீர்களாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச் சந்தவிருத்தம். தனனா தனதந்தனனா தனனாதனனா தனதந் தனன தனனா என்பது, இதற்குச் சந்தக்குழிப்பு. அடியினிறுதியிலுள்ள குற்றெழுத்தை நெட்டெழுத்தாகவும் கொள்ளலா மென்பதுயாப்புநூலார் கொள்கையாதலால், இரண்டாமடியில் 'திநனி' என வந்தது. இனி,இதனை முதற்சீரும் நான்காஞ்சீரும் புளிமாங்கனிச்சீர்களும், இரண்டாஞ்சீரும்ஐந்தாஞ்சீரும் கூவிளச்சீர்களும், மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் கூவிளங்காய்ச்சீர்களுமாகக்கொண்ட அறுசீராசிரியச் சந்தவிருத்தமாக்கி, தனனானன தந்தனதானனனா தனனானன தந்தன தானனனா எனச் சந்தக்குழிப்புக் காட்டுதலும்ஒன்று. "முகுரானனன்மைந்தனும் வீமனு முடியாதபெரும்பகையாளர்கள்,மகிபாலர் திருந்தவையூடுரைவழுவாதவன்வஞ்சினமோதினன்,இகல்வார் சிலையின்குருவானவனிடுசாபமுமுண்டு திரௌபதி,பகர்சாபமு முண்டதனாலெதிர் படுமேயவன்வெங்கதையாலிவன்" என்பது சங்கப்பிரதியின் பாடம்: இதற்குச் சந்தக்குழிப்பு - தனனானன தந்தன தானனதனனானன தந்தன தானன என்பது; அப்போது அறுசீராசிரியச்சந்தவிருத்தமென்க. (194) வேறு. 195. | வெஞ்சிலை விதுர னவனுநீவிரு மிஞ்சிய புனல்கள் படிய வேகினிர், பஞ்சவர் களொடு வயிரி யாயொரு பண்பற வினைசெய் |
|