பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்149

                                சமரபூமியில்,
வஞ்சனை வழியி லொழிய நேர்பட வன்பொடு மறமு மறம
                                 தாம்வகை,
எஞ்சிய பதினெண் வகைகொ ணாளினு மின்றமர்
                         பொருததுரககேதுவே.

     (இ -ள்.) வெம் - (பகைவர்க்குக்) கொடிய, சிலை வில்லில் தேர்ந்த,
விதுரனவனும் - விதுரனும், நீவிரும் - நீரும், மிஞ்சிய புனல்கள் படிய -
மிக்கபுண்ணிய தீர்த்தங்களிலே ஸ்நாநஞ்செய்வதற்கு, ஏகினிர் - சென்றீர்கள்;
(இங்கு), பஞ்சவர்களொடு - பஞ்சபாண்டவர்களுடன், வயிரி ஆய் -
தீராப்பகைமை கொண்டவனாய், ஒரு பண்பு அற - தகுதி சிறிது மில்லாமல்,
வினைசெய் - போர்த்தொழிலைச் செய்த, சமர பூமியில் - யுத்தகளத்தில்,
உரககேது - பாம்புக்கொடியனான துரியோதனன், வஞ்சனை வழியில் ஒழிய-
வஞ்சகவழியினாலல்லாமல், நேர்பட - நேராக, வன்பொடு - வலிமையோடு,
மறமும் - பராக்கிரமமும், அறமது ஆம் வகை - தருமமாக அமையும்படி,
அமர் பொருதது - போர்செய்தது, எஞ்சிய பதினெண்வகை கொள் நாளினும்-
கழிந்த பதினெட்டு நாள்களுள்ளும், இன்றே - இப்பொழுதேயாம்; (எ - று.)

    "விதுரனும் நீரும் இங்குப் போர்க்குநில்லாமல் தீர்த்தயாத்திரைசென்று
இப்பொழுதே மீண்டுவந்தீர்கள்" என்றதனால், இவ்வளவு நாளாய் இங்குநடந்த
போர்வகைகளின் நிலைமையை நீங்கள் அறியீர்; இங்கு உடனிருந்து கண்ட
நானே அறிவேன் என்றவாறு.  இப்பொழுது உங்கள் கண்காணத்
துரியோதனன்செய்த போரொன்றொழிய இதுவரையிலும் பதினெட்டு
நாள்களிலும் அவன்செய்தும் செய்வித்தும் வந்த போர்களெல்லாம் அநீதி
நிறைந்தனவேயெனக்கூறிக் கண்ணன் பலராமனைச்
சமாதானப்படுத்துபவனானான். இவ்வளவு நாளாய் அவன்செய்த
அக்கிரமங்கள்பலவற்றையும் நோக்குமிடத்துஇவ்வளவு நாளாய்த்
தருமயுத்தமே செய்துவந்த பாண்டவருள் வீமன் இன்றுஒருபொழுது சிறிது
முறைபிறழச் செய்த இது பெரும்பிழையாகப்பாராட்டற்பாலதன்று என்பதாம். 
செய்யுளிறுதியிலுள்ள பிரிநிலையேகாரம்,பிரித்து 'இன்று' என்ற
இடைச்சொல்லோடு கூட்டப்பட்டது.  இனி, 'இன்று'என்பதை எதிர்மறை
யொன்றன்பாற் குறிப்புமுற்றாக்கொண்டு, துரியோதனன்பதினெட்டு
நாள்களிலுந் தருமயுத்தஞ்செய்ததில்லை யென்று உரைத்தல்,அத்துணையாச்
சிறவாது.

    விதுரனவன், அவன் - முதல்வேற்றுமைச் சொல்லுருபு.  நீவிர் - முதல்
வேற்றுமையில் மாத்திரமே வரும் முன்னிலைப்பன்மைப்பெயர்;  [நன் -
பெயர்- 37.] விதுரனும் நீவிரும் ஏகினிர் - "முன்னிலைகூடிய படர்க்கையும்
முன்னிலை" என்றபடி வந்த இடவழுவமைதி.  பஞ்சவர் - பஞ்ச என்னும்
வடசொல்லினடியாப் பிறந்த பலர்பாற்பெயர்; இங்கே, தொகைக் குறிப்பு: 
பஞ்ச -ஐந்து.  வயிரி - முதற்போலி.  திருக்குறளில் பரிமேலழகர்
'பண்பாவது -பெரும் சான்றாண்மைகளில் தாம் வழுவாதுநின்றே
எல்லாரியல்புகளும் அறிந்துஒத்து ஒழுகுதல்' என உரைத்தது, இங்கு
அறியத்தக்கது.  உரககேது -வேற்றுமைத்தொகையன்மொழி.